twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரிச் லுக் கேமரா ஒர்க்.. இவருக்கு ஜுஜூபி.. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ஒளிப்பதிவாளர் பேட்டி!

    |

    சென்னை: துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி உள்ள கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் வரும் 28ம் தேதி திரைக்கு வருகிறது.

    Recommended Video

    நாக்க முக்க தான் பாட்டு என்னோட முதல் FRAME| DOP K M BHASKARAN INTERVIEW |V-CONNECT | FILMIBEAT TAMIL

    மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான திருடா திருடா படத்தின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம் பாடல் வரிகளை, அறிமுக இயக்குநர் தேசிங்கு ராஜா தனது படத்திற்கு டைட்டிலாக வைத்துள்ளார்.

    Kannum Kannum Kollaiyadithaal cinematographer KM Bhaskaran interview!

    ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், படத்தின் இயக்குநர் தேசிங்கு ராஜா பிரத்யேக பேட்டி அளித்திருந்த நிலையில், தற்போது, அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் கே.எம். பாஸ்கரனும் பேட்டி கொடுத்துள்ளார்.

    துல்கர் சல்மான், ரித்து வர்மா, தர்ஷன், நிரஞ்சனி மற்றும் கெளதம் மேனன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    வல்லினம் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமான கே.எம். பாஸ்கரன், தனது குருநாதர் விஜய் மில்டன் படமான 10 என்றதுக்குள்ள படத்திற்கும் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார்.

    மேலும், அருண் விஜய்யின் குற்றம் 23 படத்திற்கு வித்தியாசமான கேமரா பணிகளை செய்து அசத்திய பாஸ்கரன், தற்போது, கமர்ஷியல் கலந்த மெகா பட்ஜெட் படமான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்கு ரிச் கேமரா லுக்கை கொடுத்துள்ளார்.

    அறிமுக இயக்குநர் தேசிங்கு பெரியசாமிக்கும் பாஸ்கரனுக்கும் இடையே இருக்கும் நட்பு குறித்தும், தனது சினிமா எக்ஸ்பீரியன்ஸ் குறித்தும் நம்மிடையே ஷேர் செய்துள்ளார். மிஸ் பண்ணாம அவருடைய வீடியோவை பாருங்க..

    English summary
    Kannum Kannum Kollaiyadithaal cinematographer KM Bhaskaran talks about his relationship with Director Desingh Periyasamy and his team.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X