டாக்குமென்ட்ரி மாதிரி இருக்குன்னு சொன்னாங்க.. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர் பேட்டி!

சென்னை: தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், துல்கர் சல்மான், ரித்து வர்மா நடிப்பில் உருவாகி உள்ள கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் வரும் பிப்ரவரி 28ம் தேதி திரைக்கு வருகிறது.

Recommended Video

ட்ரைலருக்கே நாலு வருஷம் ஆச்சு | DIRECTOR DESINGH PERIYASAMY INTERVIEW | V-CONNECT | FILMIBEAT TAMIL

வயகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் குறித்தும், சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக பட்ட கஷ்டங்கள் குறித்தும் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு பேட்டி அளித்துள்ளார்.

Kannum Kannum Kollaiyadithaal movie director Interview!

மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டியின் மகனும் மலையாள நடிகருமான துல்கர் சல்மான், இந்த கதையை கேட்ட உடனே, பிடித்துப் போய், ஓகே சொல்லிவிட்டாராம்.

ஆனால், இந்த கதைக்கு, முன்னதாக தேசிங்கு பெரியசாமி, வேறு ஒரு டிராவல் கதையை படமாக்க வேண்டும் என்றும் முயற்சித்து வந்துள்ளார். ஆனால், அந்த படத்தின் கதையை யாரிடம் கூறினாலும், அது வெறும் டாக்குமென்டரி படம் போலத்தான் இருக்கிறது. கமர்ஷியலா ஒர்க்கவுட் ஆகாது என்றே தெரிவித்திருக்கிறார்கள்.

தனது கதையின் மீது கொண்ட நம்பிக்கையை விட்டு விடாமல், அந்த கதைக்காக, 4 வருடங்கள் கஷ்டப்பட்டு ஒரு டிரைலரையும் உருவாக்கிய தேசிங்கு பெரியசாமி, அதனை விஜய் மில்டனிடம் காண்பித்துள்ளார்.

அந்த ட்ரைலரை பார்த்த மில்டன், கதை எல்லாம் நல்லாத் தான் இருக்கு; ஆனால் டாக்குமென்ட்ரி படம் கேட்டகரியில் தான் ரசிகர்கள் இதனை பார்ப்பார்கள், முதல் படம், பட்டி தொட்ட்டி என அனைவரையும் கவரும் படியாக எடுக்க வேண்டும் என அறிவுரை கூறவே, கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் படத்தை உருவாக்கியதாக இயக்குநர் பேட்டி அளித்துள்ளார்.

மேலும், தனது திரை வாழ்க்கை மற்றும் இயக்குநராக பட்ட கஷ்டங்கள், சுவாரஸ்ய அனுபவங்களையும் நம்முடன் பகிர்ந்துள்ளார். இந்த வாரம் வெளியாகும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தை தியேட்டரில் பாருங்க.. இயக்குநர் தேசிங்கு பெரியசாமியின் பேட்டியை வீடியோவை க்ளிக் செய்து பாருங்க..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X