போலீஸ் அடி பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க.. மாரி செல்வராஜ் என்ன சொல்லப் போறாரு பாருங்க!
சென்னை: கர்ணன் படம் இன்று வெளியாகி வெற்றிநடை போட்டு வரும் நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் அளித்துள்ள பிரத்யேக பேட்டி ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டில் வெளிவர காத்திருக்கிறது.
அது தொடர்பான புரமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை மாற்ற வேண்டும் என்கிற சிந்தனையோடு படங்களை இயக்கி வரும் இயக்குநர் மாரி செல்வராஜ், கர்ணன் குறித்து பல சுவாரஸ்ய விஷயங்களை இந்த பேட்டியில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

போலீஸ் அடி பற்றி என்ன நினைக்கிறீங்க? கர்ணன் படத்தில் அது தொடர்பான காட்சிகளும் உள்ளனவா? போன்ற கேள்விகளுக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் கொடுக்கும் ரியாக்ஷனை இந்த புரமோவில் கண்டு ரசியுங்கள்.. விரைவில் முழு பேட்டி வெளியாக உள்ளது.
நடிகர் தனுஷின் நடிப்பு, சந்தோஷ் நாராயணனின் மிரட்டல் இசை, ஊர் மக்களாக வாழ்ந்த நடிகர்களின் உழைப்பு என பல சுவாரஸ்யங்களை அலசி ஆராய உள்ளார் மாரி செல்வராஜ்.


Click it and Unblock the Notifications











