தனுஷ் என்னை கட்டிப்பிடித்து தைரியப்படுத்தினார்.. கர்ணன் அம்மா நடிகை ஜானகி உருக்கமான பேட்டி!
சென்னை: கர்ணன் படத்தில் தனுஷுக்கு அம்மாவாக நடித்த நடிகை ஜானகி அம்மாளின் உருக்கமான பேட்டி வெளியாகி உள்ளது.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன், லால், நட்டி நடராஜ், கெளரி கிஷன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஏப்ரல் 9ம் தேதி திரையில் வெளியானது கர்ணன்.
மாஸ்டர் படத்திற்கு பிறகு மிகப்பெரிய வசூல் வேட்டையை தியேட்டர்களில் நடத்தி வருகிறது கர்ணன்.

அம்மா நடிகை
தமிழ் சினிமாவில் அம்மா நடிகை என்றாலே தனி மரியாதை உண்டு. நடிகை ஜானகி அம்மாள் வெண்ணிலா கபடி குழு படத்தில் விஷ்ணு விஷாலுக்கு அம்மாவாகவும், பரியேறும் பெருமாள் படத்தில் அம்மாவாகவும் கர்ணன் படத்தில் தனுஷுக்கு அம்மாவாகவும் நடித்து அசத்தி உள்ளார்.

மொட்டை தலையுடன்
பெரும்பாலும் நடிகைகள் மொட்டை போட்டு நடிப்பது பெரிய விஷயம் தான். கர்ணன் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரமாக காட்ட வேண்டும் என்பதற்காக இயக்குநர் மாரி செல்வராஜ், தன்னை மொட்டை போட சொன்னதாகவும், மொட்டை போடும் போது அருகிலே இருந்து தைரியம் சொன்னதாகவும் இந்த பேட்டியில் நன்றியுடன் கூறியுள்ளார் நடிகை ஜானகி.

தனுஷை மிதிச்சிட்டு ஓடணும்
கர்ணன் படத்தில் தனுஷுக்கும் தனக்கும் இடையே தான் அதிக காட்சிகள் என்றும், படத்தின் ஆரம்ப காட்சியிலேயே படுத்து தூங்கிக் கொண்டிருக்கும் தனுஷை தாண்டி ஓடணும், ஓடும் போது தெரியாம கால் பட்டு மிதிக்கணும்னு சொன்னாங்க, அவ்ளோ பெரிய நடிகரை எப்படி மிதிக்கிறதுன்னு ரொம்பவே பயந்துட்டேன்.
கட்டிப்பிடித்து தேற்றினார்
ஆனால், தனுஷ் என்னை கட்டிப்பிடித்து தேற்றினார். இந்த கதாபாத்திரம் உங்களுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும். இந்த படத்திற்காகத் தான் மொட்டை அடித்து நடிக்கிறீங்கன்னு சொன்னாங்க, இது ரொம்ப பெரிய விஷயம் என பாராட்டினார் என்றார். மேலும், 55 நாள் படப்பிடிப்பிலும் என்னை அவருடைய சொந்த அம்மாவை போலவே பார்த்துக் கொண்டார் என்றும் உணர்ச்சி வசப்பட்டு நன்றி கூறி பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











