twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அருண் விஜய், பிரசன்னாவின் கேட் அண்ட் மவுஸ் ஆட்டம்... 'மாஃபியா'க்குள்ள இவ்வளவு இருக்கா?

    By
    |

    சென்னை: தான் இயக்கிய 'துருவங்கள் பதினாறு' படத்திலேயே கவனிக்கப்பட்டவர், கார்த்திக் நரேன். ரகுமான், யாஷிகா ஆனந்த், அஞ்சனா நடித்திருந்த இந்தப்படம் ஹிட்டானது.

    அடுத்து அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன் நடித்த நரகாசூரனை எடுத்தார். இன்னும் வெளிவரவில்லை.

    இப்போது, அருண் விஜய், பிரியா பவானி சங்கர், பிரசன்னா நடித்துள்ள 'மாஃபியா - பாகம் 1' படத்தை இயக்கி முடித்திருக்கிறார். வரும் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது படம்.

    சினிமாவில் சஸ்டெயின் பண்றது கொஞ்ச கஷ்டம் , ஆனா அது தான் எனக்கு இஷ்டம்சினிமாவில் சஸ்டெயின் பண்றது கொஞ்ச கஷ்டம் , ஆனா அது தான் எனக்கு இஷ்டம்

     கேட் அண்ட் மவுஸ்

    கேட் அண்ட் மவுஸ்

    படத்தின் டீசர் பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படம் பற்றி கார்த்திக் நரேனிடம் பேசினோம். ''இது என் 3 வது படம். சென்னை பின்னணியில் நடக்கும் போலீஸ் கதை. ரெண்டு கேரக்டர்களுக்கு இடையில நடக்கிற கேட் அண்ட் மவுஸ் ஆட்டம்தான் படம்,. அது என்ன எப்படிங்கறதுதான் கதை என்கிறார் கார்த்திக் நரேன்.

     அருண் விஜய் போலீஸ் அதிகாரியா?

    அருண் விஜய் போலீஸ் அதிகாரியா?

    இல்லை. அவர் போதைப் பொருள் தடுப்பு அதிகாரியா வர்றார். அவரது பாடி லேங்குவேஜ், மேனரிசம் எல்லாமே அப்படியே இருக்கும். நடிப்பில் மிரட்டியிருக்கார். எல்லாவிதமான கேரக்டரும் பண்ண கூடிய நடிகர் அவர். திறமையானவர். அவர் அடிச்சா நம்பும்படியா இருக்கும். இந்தப் படத்துக்காக அவர் உடல் எடையை குறைச்சி நடிச்சிருக்கார்.

     இது உண்மைக் கதைய மையப்படுத்திய படமா?

    இது உண்மைக் கதைய மையப்படுத்திய படமா?

    அப்படி சொல்ல முடியாது. சில விஷயங்கள் இருக்கும். போதைப் பொருள்னா அதுக்குள்ள ஆழமா போகலை. ஆனா, வேற மாதிரியான ஸ்கிரீன்பிளே பண்ணியிருக்கோம். முழுக்க முழுக்க என்டர்டெயின்மென்ட் படம்னாலும் சமூகத்துக்குத் தேவையான சில விஷயங்கள் படத்துக்குள்ள அங்கங்க விரவி இருக்கும்.

     பிரசன்னா வில்லன் கேரக்டரா?

    பிரசன்னா வில்லன் கேரக்டரா?

    வில்லன்னு சொல்ல முடியாது. ரொம்ப ஸ்டைலிஷான கேரக்டர் பண்ணியிருக்கார். அவர் கேரக்டர் அமைதியா அடக்கி வாசிக்கிற மாதிரி இருக்கும். ஆனா, நடிப்புல கலக்கியிருக்கார். அவருக்கும் அருண் விஜய்க்கும் நடக்கிற போர்தான் படம்னாலும் படத்துல வர்ற சின்ன கேரக்டருக்கு கூட முக்கியத்துவம் இருக்கு.

     பிரியா பவானி சங்கரை எப்படி தேர்வு பண்ணுனீங்க?

    பிரியா பவானி சங்கரை எப்படி தேர்வு பண்ணுனீங்க?

    அவங்க போலீஸ் அதிகாரியாக வர்றாங்க. நிறைய ஹீரோயின்கள் போலீஸ் கேரக்டர்ல பண்ணிட்டாங்க. பண்ணாத பிரெஷ் முகம் தேவைப்பட்டது. அதனால, அவங்களை அப்ரோச் பண்ணினோம். நல்லா நடிச்சிருக்காங்க. அவங்களுக்கு ஆக்‌ஷனும் இருக்கு. காதல் காட்சிகள் இருந்தாலும் இந்தக் கதைல அந்தக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் இல்லை.

     அடுத்து தனுஷ் படம் பண்றீங்களே?

    அடுத்து தனுஷ் படம் பண்றீங்களே?

    ஆமா. கிரைம் த்ரில்லர் படம். அந்தப் படம் ஆரம்பிக்க இன்னும் நாள் இருக்கு. இப்பவே அதுபற்றி பேசினா சரியாக இருக்காது. மாஃபியா படத்துல 4 பாடல்கள் இருக்கு. ஒரு வீடியோ பாடலை 7 ஆம் தேதி வெளியிடறோம். கதையோட தொடர்புடைய பாடல் எல்லோருக்கும் பிடிக்கும். வரும் 21 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகுது. லைகா தயாரிச்சிருக்கு.

    English summary
    Director Karthick Naren says, Mafia is special to me as my film is getting released after a very long time. We wanted to title the film as ‘Mafia’ to ensure that it doesn’t have a local flavour.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X