கபாலி, காலா நல்ல படங்கள் தான் ஆனால்...: கார்த்திக் சுப்புராஜ்
Recommended Video

சென்னை: கபாலி, காலா ஆகியவை நல்ல படங்கள் தான் ஆனால் அவற்றில் ஒரு விஷயம் இல்லை என்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம் நாளை ரிலீஸாக உள்ளது. அதிகாலை காட்சியை பார்க்கும் ஆவலில் உள்ளனர் ரசிகர்கள்.
இந்நிலையில் படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் பேட்டி அளித்துள்ளார்.

ரஜினி
பேட்ட படம் ரஜினியின் மாஸ் அப்பீலை மீண்டும் கொண்டு வரும் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். கபாலி மற்றும் காலா ஆகியவை நல்ல படங்கள். ஆனால் அந்த படங்களில் ரஜினி ரசிகர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த மாஸ் அப்பீல் இல்லை. அதை பேட்ட படம் கொண்டு வரும் என்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

மாஸ்
பேட்ட படத்தில் மாஸ் மட்டும் இல்லை நல்ல கதையும் உள்ளது. கதையை மாஸ் ஓவர்டேக் செய்யாது. இது ரஜினியின் பழைய படங்கள் போன்றும் இருக்காது. இது தனித்துவமான கதை, அது ரஜினிக்காக ஸ்பெஷலாக எழுதப்பட்டது. ரசிகர்கள் விரும்பிப் பார்க்கும் ரஜினி மாஸ் காட்சிகள் உள்ளன. இது புதிய கதை என்று கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

படங்கள்
பேட்ட படத்தில் ரஜினி செய்யும் சில மேனரிசங்கள் அவரின் பழைய படங்களை கவுரவிக்கும் வகையில் இருக்கும். அவரின் முல்லும் மலரும் படத்தை கவுரவிக்கும் வகையில் தான் காளி என்று அவருக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது என்று கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.

ஸ்டைல்
கார்த்திக் சுப்புராஜ் கூறுவது போன்று காலா, கபாலி ஆகிய படங்களில் ரஜினியின் மாஸ் அப்பீல் இல்லை. பேட்ட பட ட்ரெய்லரை பார்த்தபோது பல காலம் கழித்து பழைய ரஜினியை அதே ஸ்டைலுடன் பார்த்த திருப்தி ரசிகர்களுக்கு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











