»   »  கருவாச்சி கார்த்திகா! தூத்துக்குடி நாயகி சாத்துக்குடி கார்த்திகாவை யார் பார்த்தாலும் கருவாச்சி என்றுதான் அன்போடு கூப்பிடுகிறார்களாம். அந்த அளவுக்கு தமிழ் கருவாப்பையா பாட்டு மூலம் ரசிகர்களை ரொங்க வைத்துவிட்டார் கார்த்திகா. ஆத்தாவுக்கு முகமெல்லாம் சிரிப்புதான். நாலு வார்த்தைபேசினால் 40 தடவை புன்னகைத்து விடுகிறார். அம்புட்டு மென்மை!

கருவாச்சி கார்த்திகா! தூத்துக்குடி நாயகி சாத்துக்குடி கார்த்திகாவை யார் பார்த்தாலும் கருவாச்சி என்றுதான் அன்போடு கூப்பிடுகிறார்களாம். அந்த அளவுக்கு தமிழ் கருவாப்பையா பாட்டு மூலம் ரசிகர்களை ரொங்க வைத்துவிட்டார் கார்த்திகா. ஆத்தாவுக்கு முகமெல்லாம் சிரிப்புதான். நாலு வார்த்தைபேசினால் 40 தடவை புன்னகைத்து விடுகிறார். அம்புட்டு மென்மை!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி நாயகி சாத்துக்குடி கார்த்திகாவை யார் பார்த்தாலும் கருவாச்சி என்றுதான் அன்போடு கூப்பிடுகிறார்களாம்.

அந்த அளவுக்கு தமிழ் கருவாப்பையா பாட்டு மூலம் ரசிகர்களை ரொங்க வைத்துவிட்டார் கார்த்திகா. ஆத்தாவுக்கு முகமெல்லாம் சிரிப்புதான். நாலு வார்த்தைபேசினால் 40 தடவை புன்னகைத்து விடுகிறார். அம்புட்டு மென்மை!

நேரில் பார்க்கப் போனால் வாங்க சேட்டா என்று பாசத்துடன் கூப்பிட்டு குந்த வைத்துசந்தோஷப்படுகிறார். அவர் நடித்த முதல் படமான தூத்துக்குடி 50 நாட்களை தாண்டிவிட்டதும், கருவாப்பையா பாட்டு ஃபேமஸ் ஆகி விட்டதாலும் வந்த சந்தோஷம் இது.

முதல் படத்திலேயே கலக்கிப் புட்டியளே என்று மேட்டரை ஓபன் செய்தோம்.ஆமாமா, ரொம்ப சந்தோஷாமா இருக்கு. எந்த டிவி சேனைலத்திறந்தாலும்கருவாப்பையா பாட்டுதான். ரொம்ப பெருமையாக இருக்கு.

அந்தப் பாட்டுக்கு எனக்கு ரொம்ப லேசான மூவ்மென்ட் தான் வைக்கச் சொன்னார்ஹரிகுமார் சார் (சார்தான் ஹீரோ). அதே மாதிரி ரொம்ப ரசிக்கும் படியானஸ்டெப்ஸ்கள் வைத்தார்கள். நன்றாக ஆடியதாக ஷூடடிங்கின்போதே பாராட்டிவிட்டார்கள்.

மனம் கொள்ளாத மகிழ்ச்சியில் இருக்கும் கார்த்திகாவுக்கு இப்போது தெலுங்குப்படம்ஒன்று கிடைத்துள்ளதாம். அதிலும் ஹீரோ புதுமுகம்தானாம். தமிழில் நிறையவாய்ப்புகள் வருகிறது. ஆனால் நல்ல கேரக்டர்களாக இருந்தால் மட்டுமேஒப்புக்குவேன்.

உப்புக்குச் சப்பாணி போல கிடைத்த வேடத்தையெல்லாம் ஏற்றுக் கொண்டு எனக்குக்கிடைத்துள்ள அருமையான வாய்ப்பை தவற விட்டு விட மாட்டேன் என்கிறார்உஷாராக.

லேசு பாசான கிளாமரும், நல்ல நடிப்பும் என்னிடம் நிறையவே உண்டு, தாராளமாகபயன்படுத்திக் கொள்ளலாம் என பவ்யமாக கூறுகிறார் கார்த்திகா.

ஒரு ரவுண்டு வருவாப்லண்ணே!

Read more about: kaarthigas interview

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil