Vaa Vaathiyaar Bayilvan Review: இயக்குநரால் நாசமா போன “வா வாத்தியார்“.. பயில்வான் விமர்சனம்!
சென்னை: ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் "வா வாத்தியார்". இதில், சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர், ஷில்பா மஞ்சுநாத், ஆனந்த்ராஜ், கருணாகரன், ரமேஷ் திலக், பி எல் தேனப்பன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் குறித்து பயில்வான் ரங்கநாதனின் விமர்சன அளித்துள்ளார்.
அதில், வா வாத்தியார் படத்தின் கதை என்னவென்றால், தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராக இருக்கிறார் ராஜ்கிரண், எம்ஜிஆர் மருத்துவமனைகள் இருக்கும் நேரத்தில் நள்ளிரவில் குடியிருந்த கோவில் படத்தின் பெட்டியை தலையில் சுமந்து கொண்டு வந்து தியேட்டரில் படம் பார்க்கிறார். அந்த நேரத்தில் எம்ஜிஆர் இறந்துவிட்டதாக தகவல் வருகிறது. அதே நேரம் ராஜ்கிரணுக்கு பேரன் பிறக்கிறார். மருத்துவமனைக்கு வந்து பேரனை பார்க்கும் ராஜ்கிரண், பேரன் காலில் எம்ஜிஆருக்கு இருப்பது போல் மச்சம் இருப்பதை பார்த்து எம்ஜிஆர் தான் பேரனாக பிறந்து இருப்பாக நினைக்கிறார். இதனால் தனது பேரனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார் ராஜ்கிரண்.
வா வாத்தியார்: கார்த்திக வளர்ந்து பெரியவனாகி போலீஸ் அதிகாரியாக சேர்ந்து மக்களிடம் மாமூல் வாங்குகிறார். ஒரு கட்டத்தில் இந்த விஷயம் டிபார்ட்மெண்டுக்கு தெரிய வர அவர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். இந்த செய்தியை கார்த்திக் தனது தாத்தா ராஜ்கிரணுக்கு தெரியாமல் மறைத்து விடுகிறார். ஒரு கட்டத்தில் கார்த்தியின் அப்பா தேனப்பன் மூலமாக ராஜ்கிரணுக்கு தெரியவர, அவர் மனம் உடைந்து உயிரிழந்து விடுகிறார். அதன் பிறகு கார்த்திக் திருந்தினாரா... இல்லையா.. என்பது தான் வா வாத்தியார் படத்தின் கதை.

படத்தின் கதை: இந்த படத்தில் கார்த்திக் நன்றாக தனது நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். நன்றாக நடித்திருக்கிறார், நன்றாக நடனமாடி இருக்கிறார், ஆனால் அவரின் வேடப்பொருத்தம் சரியில்லை. அதற்கு காரணம் படத்தின் இயக்குனர் நலன் குமாரசாமி தான், இந்த விஷயத்தில் வேறு யாரையும் குற்றம் சுமத்த முடியாது. படத்தின் கதாநாயகியான கிருத்தி ஷெட்டி கவர்ச்சி காட்டி நடித்து இருக்கிறார். அவருக்கு படத்தில் பல காட்சிகளை கொடுத்து இருக்கலாம். அவருக்கு ஸ்கிரீன் ஸ்பேஸ் சரியாக தரவில்லை. அதேபோல ஷில்பா மஞ்சுநாத் வில்லியாக வந்து செல்கிறார். இந்த திரைப்படம் ஒரு பேண்டஸி திரைப்படமாக இருக்கிறதே தவிர, எம்ஜிஆர் ரசிகனின் படம் பார்த்தது போல இல்லை.
ஆத்திரமா வருது: படம் பார்க்கும்போது ஆனந்த் ராஜின் முகத்திலேயே குத்தி விடலாம் போல ஆத்திரம் வருகிறது. சில காட்சிகளில் அவர் எம்ஜிஆர் வேடத்தில் வந்து நடிக்கிறார். அதை பார்க்கும்போது உனக்கு எதற்கு தேவையில்லாத வேலை என கேட்கத் தோன்றுகிறது. எம்ஜிஆரை நீ பார்த்து இருக்கியா? தயவு செய்து எம்ஜிஆரை கிண்டல் செய்ற மாதிரி நடிக்காதீர்கள். படத்தில் ரசிக்கும்படி இருந்த ஒரே விஷயம் என்னவென்றால் படத்தின் பல இடங்களில் எம்ஜிஆரின் பாடல்கள் வருகிறது. இயக்குனர் நலன் குமாரசாமி எம்ஜிஆர் குறித்து பல விஷயங்களை இன்னும் ஆராய்ந்து இருக்கலாம். அவரது ரசிகர்களிடம் கேட்டு இருக்கலாம். ஆனால் அதையெல்லாம் செய்யாமல் எம்ஜிஆரின் பெயரை சொல்லி குளிர் காயா முயற்சி செய்து இருக்கிறார் அது வொர்க் அவுட் ஆகவில்லை. தயவு செய்து அடுத்த முறை நல்ல படத்தை கொடுங்கள், இந்த படத்தின் குற்றவாளி இயக்குநர் நலன் குமாரசாமி மட்டும் தான் என பயில்வான் ரங்கநாதன் தனது விமர்சனத்தில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











