»   »  தலைவிதி மாறலையே..புலம்பும் கஸ்தூரி

தலைவிதி மாறலையே..புலம்பும் கஸ்தூரி

Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமா எவ்வளவோ மாறியிருக்கிறது. ஆனால் நடிகைகளின் தலைவிதி மட்டும் அப்படியேதான் இருக்கிறது என்று புலம்புகிறார் முன்னாள் நாயகி கஸ்தூரி.

தமிழ் சினிமாவில் மணம் வீசிய நாயகியர்களில் கஸ்தூரியும் ஒருவர். குதிரை முகம் என்று செல்லமாக ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டாலும் கூட அழகான நடிப்பைக் கொடுக்கத் தவறாதவர்.

ஒரு கட்டத்தில் முன்னணியில் இருந்த கஸ்தூரி இளம் நடிகைகள் வரவால் திணறிப் போய் பீல்டு அவுட் ஆனார். இடையில், பிரஷாந்த் நடித்த காதல் கடிதம் படத்தில் மிகக் கலக்கலான கிளாமர் ரோலில் வந்து போனார். தொடர்ந்து கிளாமர் செய்து பார்த்தும் சினிமா கைகொடுக்காததால் ஜெர்மனிக்கு வேலை பார்க்கப் போய் விட்டார். அப்படியே கல்யாணத்தையும் செய்து கொண்டு செட்டிலானார்.

இப்போது மறுபடியும் சென்னைக்கு வந்துள்ளார்-மீண்டும் நடிக்கும் எண்ணத்துடன். அப்போது பார்த்தது போலவே மெருகு குறையாமல் ஜில்லாக இருக்கிறார் கஸ்தூரி.

அப்படியே இருக்கீங்களே என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டபோது வெட்கப் புன்னகை பூத்த கஸ்தூரி, ஆச்சரியப்பட்டு என்ன புண்ணியம், தமிழ் சினிமாவில்தான் கல்யாணம் ஆகி விட்டால் ஒதுக்கி வைத்து விடுகிறார்களே என்று ஆதங்கத்துடன் ஆரம்பித்தார்.

பிறகு அவராகவே இயல்புக்கு வந்து, தமிழ் சினிமாதான் எனது தாய் வீடு. இதை மறக்க முடியுமா? அதுதான் மீண்டும் நடிக்கலாம் என்று வந்து விட்டேன். நல்ல கேரக்டர் கிடைத்தால் நடிக்கலாம்.

தமிழ் சினிமா முன்பு போல இல்லை. நிறைய மாறியுள்ளது. ஆனால் நடிகைகளின் நிலை, தலைவிதி மட்டும் மாறவே இல்லை. அப்படியேதான் இருக்கிறது. கல்யாணம் ஆகும் வரைதான் ஹீரோயின் வாய்ப்பு தருகிறார்கள். கல்யாணமாகி விட்டால் அவ்வளவுதான், ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். ஏன் அப்படி?

இது ஹாலிவுட்டில் அப்படியே தலைகீழ். கல்யாணமானால் கூட அங்கு ஹீரோயின்களின் நடிப்புத் திறமையை மட்டும்தான் பார்க்கிறார்கள். கல்யாணமானவரா, இல்லையா என்று பார்ப்பதில்லை. கல்யாணமான ஹீரோயின்கள்தான் அதிக அளவு கவர்ச்சி காட்டி நடிக்கிறார்கள், கலக்குகிறார்கள்.

இங்கு அப்படி இல்லை. விட்டால் என்னை விஜய்க்கு அம்மாவா நடிப்பீங்களா என்று கேட்பார்கள் (ஆமாமா, கமலுக்கு அம்மாவா நடிக்கிறீங்களா என்று சுஹாசினியிடமே கேட்டவங்களாச்சே!)

என்னைப் பொருத்தவரைக்கும் நடிப்பை மட்டும் பாருங்க, மத்த விஷயங்களைப் பத்தி கவலைப்படாதீங்க என்று கொட்டித் தீர்த்து விட்டார் கஸ்தூரி.

நம்மாளுங்களுக்கு ரொம்பப் பேசினால் பிடிக்காதே, கஸ்தூரி இப்பவே இவ்வளவு பேசறாப்ல!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil