Exclusive: ஷங்கர் படத்தில் நடிக்க ஸ்விம்சூட்ல போட்டோஸ் கேட்டாங்க.. கஸ்தூரி ஓபன் பேட்டி!
சினிமா வாய்ப்புக்காக ஸ்விம் சூட் போட்டோ கேட்டாரா ஷங்கர்? 90களில் கலக்கிய நடிகை கஸ்தூரியின் மனம் திறந்த பேட்டி இதோ. பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார் கஸ்தூரி.
"நான் 92ல தான் நடிக்கவே வந்தேன், அப்போ எனக்கு 16 வயது தான் ஆகியிருந்தது. எனது முதல் படம் கஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவானது. ஆனால், அதற்கு முன்னதாகவே என்னை கண்டுபிடித்து நடிக்க வைத்தது ராஜ்கிரண் சார் தான். ராமராஜன் படத்தில் தான் நடிக்க ஆரம்பித்தேன். ஆனால், அந்த படம் டேக்காஃப் ஆகவில்லை. அதன் பின்னர் தான் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் நடித்தேன் என தனது அறிமுகத்தை கூறியுள்ளார்.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் வரவில்லை என்றும், சினிமா நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்ததாகவும் கஸ்தூரி கூறினார். மாடலிங் செய்ததால் சினிமா வாய்ப்பு எளிதாக கிடைத்ததாகவும், ஆனால் வீட்டில் எதிர்ப்பு இருந்ததாகவும் தெரிவித்தார்.
முதல் நாள் ஷூட்டிங்கில் சிரிப்பே வரல! "பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொன்னதும் சந்தோஷப்படணும்" என்ற காட்சியில் நடிக்கத் திணறியதாக கஸ்தூரி நகைச்சுவையாக கூறினார். ஆயிரம் முறை டான்ஸ் ஆடி இருந்தாலும், கேமரா முன் வெட்கப்பட்டு தயங்கினேன் என்றார்.
சமீபத்தில் சந்தானத்துடன் இணைந்து டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி கூறுகையில், "அவர் கடவுள் பக்தி மிக்கவர், சிறந்த ஃபேமிலி மேன்" என்று புகழ்ந்து பேசினார். மேலும், சந்தானம் மிகவும் எளிமையானவர் என்றும், கடின உழைப்பாளி என்றும் தெரிவித்தார்.
இந்தியன் படத்தில் முதலில் ஊர்மிளா வேடத்திற்கு தான் கேட்டார்கள். ஸ்விம் சூட்டில் ஏதாவது பிக்சர்ஸ் இருக்கா? என்று ஷங்கர் சார் ஆபீஸில் இருந்து கேட்டார்கள். ஆனால் அந்த நேரத்தில் ரங்கீலா ட்ரைலர் ரிலீஸ் ஆகி ஊர்மிளா செம வைரல் ஆகிட்டாங்க. அதனால் அந்த வாய்ப்பு தவறிவிட்டது என்று கஸ்தூரி கூறினார்.

கமலுடன் நடித்த அனுபவம் குறித்து பேசிய கஸ்தூரி, "அவர் ஒரு என்சைக்ளோபீடியா மாதிரி. அவரிடம் இருந்து நிறைய கத்துக்கலாம். அவர் காலையில் 5 மணிக்கு வந்து மேக்கப் போடுவார். ஸ்ட்ரா வச்சுதான் லிக்விட் சாப்பாடு சாப்பிடுவார்" என்றார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான "பச்சை கிளிகள்" பாடல் இன்றைக்கும் என்னோட ஃபேவரைட் என்றார். திருமணமான நிலையில், பல நல்ல படங்களில் நடிக்கும் ஆஃபர்களை தான் தவறவிட்டதாகவும், குழந்தை பிறந்த பின்னர் கவர்ச்சி போட்டோஷூட் வெளியிட காரணமே, குழந்தை பிறந்த பின்னரும் நான் ரொம்ப செக்ஸியாக இருக்கேன் என்பதை காட்டத்தான் என்று செம போல்டாக பேசியுள்ளார் நடிகை கஸ்தூரி.


Click it and Unblock the Notifications











