அரவிந்த் சாமிக்கு என் மீது க்ரஷ்.. கிசுகிசுவால் திடீரென நடந்த திருமணம்.. கஸ்தூரி பேட்டி!
சென்னை: 90 களில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகை கஸ்தூரி, பல ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத நினைவாக இருக்கிறார். அழகும் திறமையும் கொண்ட நடிகையாக இருக்கும் நடிகை கஸ்தூரி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கும் பேட்டியில் அரவிந்த் சாமிக்கு என் மீது க்ரஷ் இருந்தது என்று கூறியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
அந்த நடிகருடன் கிசுகிசு: கஸ்தூரி அளித்த பேட்டியில், சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில் என்னை பற்ற ஒரு கிசு கிசு வந்தது. அந்த கிசு கிசு வந்ததுமே வீட்டில் பெற்றோர் இருக்கு மேல நீ நடிச்சது போதும் என திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அந்த நேரத்தில் சரியான வரன் இந்தியாவில் கிடைக்காததால் வெளிநாட்டில் மாப்பிள்ளை தேடியதாகவும், நான் இந்தியாவில் இருந்திருந்தால் சினிமாவில் தொடர்ந்து நடித்திருப்பேன், பிரேக் எடுத்திருக்க மாட்டேன். ஆனால், திருமணத்திற்குப் பிறகும் முழுமையாக சினிமாவை விட்டு விலகவிலகாமல் தொடர்ந்து தயாரிப்பாளராக பணியாற்றினேன். அதன் பின் குழந்தைகள் பிறந்ததால், அவர்களுக்காக ஒரு கட்டத்தில் நான் சினிமாவை விட்டு விலகி விட்டேன்.

அரவிந்த்சாமிக்கு க்ரஷ்: தொடர்ந்து பேசிய நடிகை கஸ்தூரி, நான் ஹீரோயினாக நடித்த காலத்தில், அனைவருக்கும் மிகவும் பிடித்த நடிகராக இருந்தவர் நடிகர் அரவிந்த் சாமி. அனைவருக்கும் அவர் மீது க்ரஷ் இருந்தது. ஆனால், அவருக்கு என் மீது க்ரஷ் இருந்தது. இது யாருக்குமே தெரியாத கிசுகிசு என்று சொன்ன கஸ்தூரி, பிறர் என்னைப் பற்றி கிசுகிசு எழுதுகிறார்கள். இப்போது நானே ஒரு கிசுகிசு சொல்ல இருக்கிறேன் என்றார். மேலும், தளபதி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு எனக்குத்தான் வந்தது. ஆனால், அப்போது நான் மிகவும் சிறியவளாக இருந்ததால் அந்த வாய்ப்பு போய்விட்டது. இன்று வரை அரவிந்த் சாமி உடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது என் ஆசையாகவே இருக்கிறது என்று அந்த பேட்டியில் நடிகை கஸ்தூரி பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications