கவர்ச்சி நடிகை அம்மனாக நடிக்கக்கூடாதா? செய்தியாளர்களிடம் எகிறிய நடிகை கஸ்தூரி!

சென்னை: இயக்குநர் தமிழ்மாமனி துரை. பாலசுந்தரம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ராகு- கேது. இத்திரைப்படத்தில், சமுத்திரக்கனி, கஸ்தூரி, விக்னேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கே.பி அறிவானந்தம் கதை, வசனம், பாடல்கள் எழுதியிருக்கும் இந்த திரைப்படத்திற்கு மோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இத்திரைப்படம் ஆகஸ்ட் 8ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.

35 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் வெளியாகும் ஒரு பக்தி திரைப்படமான இப்படத்தில், முத்திரக்கனி சிவ பெருமானாகவும், விக்னேஷ் மகா விஷ்ணுவாகவும், கஸ்தூரி துர்க்கை அம்மனாகவும் நடித்திருக்கிறார்கள். மனிதர்களின் வாழ்க்கையில் ராகு - கேது ஆகிய இரண்டு கிரகங்கள் எவ்வாறு அவர்களை ஆட்டிப்படைக்கின்றன என்பதே இந்த படத்தின் கதை வரலாறு விவரிக்கப்பட்டிருக்கிறது என்றும், இதில் சமுத்திரக்கனி சிவ பெருமானாகவும், விக்னேஷ் மகா விஷ்ணுவாகவும், கஸ்தூரி துர்க்கை அம்மனாகவும் நடித்திருக்கிறார்கள் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Kasthuri Samuthrakani Raagu Kethu
Photo Credit:

கஸ்தூரி செய்தியாளர் சந்திப்பு: 'ராகு- கேது' திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய கஸ்தூரி, இது ஒரு சிறிய பட்ஜெட் படம் இந்த திரைப்படத்திற்கு மக்கள் தங்களின் ஆதரவை தர வேண்டும், பெரிய பட்ஜெட் படம் எப்படியாவது ஓடிவிடும். 100 கோடி செலவு செய்து அனைவரும் படம் எடுக்க வேண்டும் என்றால் தியேட்டரில் ஒரு படம் மட்டும் தான் ஓடும். சிறிய படங்களால் தான் சினிமா உலகமே இருக்கிறது. அதுவும் புராண காலத்து படங்கள் என்பது, இப்போது டிரெண்டில் இல்லை அதை இந்த படத்தின் மூலம் மீண்டும் கொண்டு வந்துள்ளோம் என்றார்.

நான் அம்மனா நடிக்கக்கூடாதா: இதைதொடர்ந்து செய்தியாளர் ஒருவர், கவர்ச்சி நடிகை எப்படி அம்மனாக நடிக்கலாம் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த நடிகை கஸ்தூரி, கவர்ச்சியாக நடிப்பதும் நடிப்புதான், அம்மனாக நடிப்பதும் நடிப்புதான். இதில், நான் முதலும் இல்லை, கடைசியும் இல்லை. பட்டணத்தில் பூதம் திரைப்படத்தில் நடித்த கே.ஆர்.விஜயா தான், அதன் பின் தொடர்ந்து சாமி திரைப்படங்களில் அம்மனாக நடித்து வந்தார். அதேபோல ஸ்ரீவித்யா, ஜெயலலிதா, ஸ்ரீப்ரியா, ஸ்ரீதேவி, ரம்யா கிருஷ்ணன், பானுப்ரியா, மீனா, நயன்தாரா என பல நடிகைகள் நடித்திருக்கிறார்கள் இவர்கள் யாரையும் கேட்காத கேள்வியை என்னை வந்து கேட்க வேண்டிய அவசியமே இல்லை. நடிப்பு என்று வரும் போது எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும் அதை மக்கள் பார்த்து நம்புவது போலவும் நடிக்க வேண்டும் அது தான் சினிமா என்று நடிகை கஸ்தூரி பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X