விஜய் சேதுபதி சொன்ன வார்த்தை.. கன்னம் சிவந்து போன கத்ரீனா கைஃப்.. என்ன ஆச்சு தெரியுமா?
சென்னை: அந்தாதூன் படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கத்ரீனா கைஃப், காயத்ரி, ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தி மற்றும் தமிழில் உருவாகி உள்ள பைலிங்குவல் படமான மெரி கிறிஸ்துமஸ் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், அந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு ஆங்கிலத்தில் அழகாக பேசிய விஜய்சேதுபதியின் பேச்சை கேட்டு கத்ரீனா கைஃப் கன்னம் சிவந்த காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.
குறும்பட நடிகராக இருந்து சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் விஜய்சேதுபதி. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நாயகனாக அறிமுகமானவருக்கு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பீட்சா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான சூது கவ்வும், கோகுல் இயக்கத்தில் வெளியான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என தொடர்ந்து குறைவான பட்ஜெட்டில் நல்ல நல்ல படங்களை கொடுத்து வந்த விஜய்சேதுபதி இன்று தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் முன்னிலை நடிகராக மாறி உள்ளார்.

ஷாருக்கானுக்கே வில்லன்: தமிழ் சினிமாவில் பேட்ட, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து மிரட்டிய விஜய்சேதுபதி தெலுங்கில் சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி, உப்பென்னா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். அங்கிருந்து அப்படியே மும்பைக்கு புறப்பட்ட விஜய்சேதுபதி அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடித்த ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கே வில்லனாக நடித்து கடந்த ஆண்டு மாஸ் காட்டியிருந்தார்.
கத்ரீனா கைஃப் ஜோடி: மெரி கிறிஸ்துமஸ் படத்தில் தற்போது கத்ரீனா கைஃப் ஜோடியாக விஜய்சேதுபதி வேறலெவல் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ்க்கு இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜனவரி 12ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் டிரெய்லரில் கத்ரீனா கைஃப் விஜய்சேதுபதியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த காட்சிகள் இடம்பெற்று இருந்தன.
கத்ரீனாவை புகழ்ந்த விஜய்சேதுபதி: சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அழகாக ஆங்கிலத்தில் மெரி கிறிஸ்துமஸ் படம் பற்றி பேசிய விஜய்சேதுபதி. நடிகை கத்ரீனா கைஃப் வெறும் அழகி மட்டுமில்லை அந்தளவுக்கு சென்ஸ் உள்ளவர். நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அழகு மட்டுமே நடிகைகளை ரொம்ப காலம் நிலைக்கச் செய்யும் என்பது கிடையாது. அவர்களின் சிந்தனை, அவர்களின் ஆற்றல், அவர்களின் திறமை தான் இத்தனை ஆண்டுகளாக கத்ரீனாவை இந்த இடத்தில் வைத்திருக்கிறது என்றார்.
கன்னமே சிவந்து போச்சு: கத்ரீனா கைஃப் சாதனைகளை பட்டியலிட்டு விஜய்சேதுபதி ஆங்கிலத்தில் தொடர்ந்து சீரியஸாக பேசிக் கொண்டே இருக்க இருக்க அதை கேட்டு வயிறு குலுங்க சிரிக்க ஆரம்பித்த கத்ரீனா கைஃபின் கன்னமே சிவந்து விட்டது. உடனே நிறுத்திய விஜய்சேதுபதி நான் ஜோக் அடிக்கல, சீரியஸாகத்தான் சொல்கிறேன் என சொல்ல மீண்டும் கத்ரீனா கைஃப் உள்ளிட்ட படக்குழுவினர் சிரிக்க ஆரம்பித்து விட்டனர். ஜனவரி 12ம் தேதி தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயனின் அயலான் படத்துடன் மோதுகிறது. மூன்று படங்களில் எந்த படம் ஹிட் அடிக்கப் போகிறது என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











