twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் நடிகை தான் கதாநாயகி கிடையாது… சிருஷ்டி டாங்கே எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

    |

    Recommended Video

    2020 ல நான்தான் தமிழ் சினிமா TOP HEROINE | SRUSHTI DANGE | KATTIL MOVIE POOJA | FILMIBEAT TAMIL

    சென்னை: நல்ல கதையம்சம் உள்ள படங்களையே தேர்ந்தெடுத்து நடிப்பதால் தான் நான் நடிக்கும் படங்களுக்கு இடையில் நீண்ட இடைவெளி உள்ளது. அடிப்படையில் நான் ஒரு நடிகை தான், ஆனால் கதாநாயகி கிடையாது என்று தன்னுடைய சினிமா அனுபவங்கள் நம்முடைய ஃபிலிமிபீட் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டார் கண்ணக்குழி அழகி சிருஷ்டி டாங்கே.

    நான் இப்போ கட்டில் படத்தில் நடிச்சிகிட்டு இருக்கேன். ரொம்ப நாளைக்கு அப்புறமா இந்த படத்துல நடிக்கிறேன். ஒரு நல்ல கதையம்சம் உள்ள படத்தில நடிக்கணும்கிறதுக்காகவே கொஞ்சம் கேப் எடுத்துக்கிட்டேன். நான் எதிர்பார்த்த மாதிரி என்னோட மனசுக்கு பிடிச்ச மாதிரியான கதை வரலை. அதனால கேப் எடுத்துக்கிட்டேன்.

    Kattil: Srushti Dange Exclusive Interview

    நல்ல கதை உள்ள படத்துல நடிக்கணும்கிறது தான் என்னோட ஆசை. அதே மாதிரி நிறைய விஷயங்கள் பண்ணணும்கிறதும் என்னோட ஆசை. ஆனால், சூட்டிங் இருந்ததுனாலே என்னால பண்ண முடியலை. வெளியே எங்கேயும் என்னால போக முடியலை. சென்னை எனக்கு 2ஆவது வீடு.

    நான் இப்போ நடிக்கிற கட்டில் படத்தோட கதை 3 வேவ்வேறு காலகட்டத்தில நடக்கிற கதை. இதுல நான் இப்போ நடக்கிற கதையில நடிக்கிறேன். அதுல தனலட்சுமிங்கிற கேரக்டரை ரொம்ப ஸ்ட்ராங்கா பண்ணியிருக்கேன்.

    இந்தப் படத்துல நான் மதுரை பாஷையிலே பேசி நடிக்கப் போறேன். அதுல அந்த மேனரிஸம் இருக்கணும். ஏன்னா இந்த படத்தை ஃபிலிம் ஃபெஸ்டிவலுக்கு கொண்டு போகப் போறோம். அதனால ரொம்ப ரியலிஸ்டிக்கா பண்ணணும்கிறதுக்காக கொஞ்சம் ரிஸ்க் எடுத்து பண்றோம்.

    அதோட, ஒரு கிராமத்துல இருக்குற பொண்ணு எப்படி நடக்கணுமோ அந்த மேனரிஸம், எக்ஸ்பிரஷனை ஃபேஸ்ல கொண்டு வரணும். கிராமத்து பொண்ணோட ஹேர்ஸைடைல், காஸ்ட்யூம்ஸ் எல்லாத்தையும் அதுல கொண்டு வரணும்.

    Kattil: Srushti Dange Exclusive Interview

    என்னைப் பொருத்த வரைக்கும் ஒரு படத்துக்கு கண்டென்ட் தான் கிங். கதை நல்லா இருந்தாதான் ஆடியன்ஸ் படம் பாப்பாங்க. நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன். நான் வந்து ஹீரோயின் கிடையாது. ஜஸ்ட் ஒரு ஆர்டிஸ்ட் தான். அதனால தான் இந்த கதையை கேட்ட உடனே, நம்ம இந்த படத்துல நடிக்கணும்னு ஆசை வந்திடிச்சி. அதனால தான் இந்த படத்துல நான் நடிக்கிறேன்.

    கதையை நினைக்காம நான் இந்த படத்தில நடிச்சேன்னா நான் ஒரு ஆர்ட்டிஸ்ட் கிடையாது. எனக்கும் திருப்தி இருக்காது. அதனால தான் மொதல்ல நான் சேட்டிஸ்ஃபை ஆகணும். இது தான் என்னோட வேலை. இதை நான் கரெக்டா பண்ணணும், அப்படின்னு நான் நினைப்பேன். கமர்ஷியல் படத்துல எப்ப வேணும்னாலும் நடிக்கலாம். படம் ஹிட்டாச்சின்னா எங்கேயோ போய்டலாம். ஆனால் இந்த மாதிரியான நல்ல கதை உள்ள படத்துல நடிக்க முடியுமா என்று கேட்டார் சிருஷ்டி டாங்கே.

    English summary
    There is a long gap between the films I am acting on because they are a good films with good storyline. Basically, I'm an actress and I am not a heroine, that she shares her cinematic experiences with our FilmiBeat readers, actress Srushti Dange.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X