நான் கெட்டவன் தான்.. ஆனால், எச்ச கிடையாது.. என்ன கவின் திடீரென இப்படி சொல்லிட்டாரு.. காரணம் என்ன?

சென்னை: நடிகர் கவின் நடித்துள்ள மாஸ்க் திரைப்படம் இந்த மாதம் திரைக்கு வருகிறது. நேற்று அந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மாஸ்க் படத்தின் ப்ரோமோஷனுக்காகவும் அவர் பல பேட்டிகளை கொடுத்து வருகிறார்.

அப்படி சமீபத்தில், அளித்த ஒரு பேட்டியில், "நான் கெட்டவன் தான்.. ஆனால், எச்ச கிடையாது" என்கிற வசனத்தை கவின் சொல்லி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

Kavin talks about his Mask movie characterization in a recent interview stuns fans
Photo Credit:

ஸ்டார், ப்ளடி பெக்கர் மற்றும் கிஸ் படங்கள் கவினுக்கு பெரிய வெற்றிப் படங்களாக அமையாத நிலையில், மிகப்பெரிய கம்பேக் கொடுப்பதற்காக மாஸ்க் படத்தில் இறங்கி நடித்துள்ளார் என்றே தெரிகிறது.

தடுத்து நிறுத்திய நெல்சன்: சில விஷயங்களில் தேவையில்லாமல் சிக்க இருந்த தன்னை தடுத்து நிறுத்தி சரியான திசைக்கு அனுப்ப உதவியவர் நெல்சன் தான் என மாஸ்க் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நெல்சன் பற்றி பேசியிருந்தார் கவின். அவரது தயாரிப்பில் கவின் நடித்த ப்ளடி பெக்கர் திரைப்படம் வித்தியாசமாக இருந்தாலும், தியேட்டர் ரசிகர்களை கவரவில்லை. ஓடிடியில் வெளியான பின்னர் அந்த படத்தை ஓஹோ என ரசிகர்கள் கொண்டாடினர் என கவின் கூறியிருந்தார்.

எச்ச கிடையாது: மாஸ்க் படத்தில் உள்ள ஒரு வசனம் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்றும் "நான் கெட்டவன் தான்.. ஆனால், எச்ச கிடையாது" என சொல்லும் கேரக்டர் தான் ஹீரோவுடைய கதாபாத்திரமே படத்தில் என்பதை அப்படியே போட்டு உடைத்துவிட்டார். ஆண்ட்ரியாவுக்கும் கவினுக்கும் இடையேயான ஃபேஸ் ஆஃப் காட்சி எல்லாம் டிரைலரிலேயே பக்காவாக உள்ள நிலையில், கண்டிப்பாக மாஸ்க் திரைப்படம் தியேட்டர் தெறிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நம்ம ஊர் மணி ஹெய்ஸ்ட்: கவின், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்க் திரைப்படத்தை இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை வெற்றிமாறன் மேற்பார்வையுடன் உருவாக்கியுள்ளனர். இந்நிலையில், படத்தின் டிரைலரை பார்த்த ரசிகர்கள் இது நம்ம ஊர் மணி ஹெய்ஸ்ட் படம் போல உள்ளதாகவும் கண்டிப்பாக ரசிகர்களை கவரும் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X