ஜானி மாஸ்டர் என்கிட்ட எப்படி நடந்துக்கிட்டார் தெரியுமா?.. அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி காவ்யா தாப்பர் ஓபன்!
ஹைதராபாத்: தமிழில் பிக் பாஸ் சீசன் 1 டைட்டில் வின்னர் ஆரவ் நடிப்பில் வெளியான மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ், விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் 2 படங்களில் நடித்த நடிகை காவ்யா தாப்பர் தெலுங்கில் ஏ மாய பிரேமிதோ படத்தின் மூலம் 2018ல் அறிமுகமானார்.
ஏக் மினி கதா, ஈகிள், ஊர் பேரு பைரவகோனா, டபுஸ் இஸ்மார்ட் உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி பொங்க நடித்துள்ள காவ்யா தாப்பர் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வம் திரைப்படம் வரும் அக்டோபர் 11ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்நிலையில், பில்மிபீட் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த நடிகை காவ்யா தாப்பர் ஜானி மாஸ்டர் பற்றியும் சினிமாவில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார்.
29 வயது நடிகை: 2013ம் ஆண்டு இந்தியில் வெளியான குறும்படத்தில் நடித்த காவ்யா தாப்பர் விளம்பர படங்களில் நடித்து பிரபலமானார். தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வந்த காவ்யா தாப்பர் 2022ம் ஆண்டு மிடில் கிளாஸ் லவ் எனும் இந்தி படத்தில் நடித்து பாலிவுட்டிலும் அறிமுகமானார். 29 வயதாகும் இவர் கவர்ச்சியில் சமீப காலமாக தாராளம் காட்டி நடித்து வருகிறார். இஸ்மார்ட் ஷங்கர் படத்தில் இவர் ஓவர் கிளாமரில் ஆட்டம் போட்டு ரசிகர்களை ஆட்டம் காண வைத்திருந்தார்.

ஜானி மாஸ்டர் பற்றி: பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு கிடைக்கவிருந்த தேசிய விருது ரத்து செய்யப்பட்டு தாய் கிழவி பாடலுக்கு நடனம் அமைத்த சதீஷ் கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், ஜானி மாஸ்டர் பற்றிய கேள்வி கேட்கப்பட்ட நிலையில், அதற்கு பதிலளித்த காவ்யா தாப்பர் தன்னிடம் அவர் அப்படியெல்லாம் ஒரு போதும் நடந்தது கிடையாது என பதில் அளித்துள்ளார்.

பெண்கள் அப்பவே சொல்லணும்: மேலும், சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் விவகாரங்கள் நடக்க பெண்களும் முக்கிய காரணமாக உள்ளனர். பிரச்சனை நடக்கும் சமயத்தில் வாயை மூடிக் கொண்டு இருப்பதும் குற்றம் தான். அப்போதே அவர்கள் மெளனம் கலைத்து குரல் கொடுக்க வேண்டும். அப்போது தான் இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர்கள் உடனடியாக தண்டிக்கப்படுவார்கள். நான் ஒரு போதும் குற்றச்செயலுக்கு ஆதரவு தந்தது கிடையாது.
காவ்யா தாப்பர் படம்: அதே போல பெண் கலைஞர்கள் தங்களுக்கு அநீதி நடக்கும் போது சில காரணங்களுக்காக அமைதியாக இருந்து விட்டு பின்னர் அதுபற்றி பேசுவது சரியல்ல என்றும் காவ்யா தாப்பர் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். ஸ்ரீனு வைத்தலா இயக்கத்தில் உருவாகி உள்ள விஸ்வம் படத்தில் கோபிசந்த் ஜோடியாக காவ்யா தாப்பர் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications