Kayadu Lohar: என் தூக்கத்தையே கெடுத்துடுச்சு.. ரொம்பவே காயப்படுத்தின.. கலங்கிய கயாடு லோஹர்!

சென்னை: தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமான டிராகன் படத்தில் ஹீரோயினாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமான கயாடு லோஹர் அதன் பின்னர் பல தமிழ் படங்களில் கமிட்டானார். ஆனால், அவரைப் பற்றி வலம் வந்த ஒரு வதந்தி ஒட்டுமொத்தமாக அவரை கலங்கடித்து விட்டதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

ஒரு பக்கம் சின்னத்திரை நடிகை மான்யா ஆனந்த் நடிகைகளிடம் பெரிய நடிகர்களின் பெயர்களை பயன்படுத்தியே படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இன்னமும் இருப்பதாக பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

Kayadu Lohar got emotional and opens up about her recent controversy
Photo Credit:

இந்நிலையில், இந்த பக்கம் தன்னை பற்றிய தவறான செய்திகள் பரவி தனது தூக்கத்தையே கெடுத்துவிட்டதாக கயாடு லோஹர் கண் கலங்கி பேசியுள்ளார்.

சினிமாவிலேயே செகண்ட் சேனல் கதைகள்: ஜூபிளி வெப்சீரிஸ் தொடங்கி சமீபத்தில் வெளியான காந்தா திரைப்படம் வரை முன்னணி ஹீரோ இளம் ஹீரோயினுடன் ரகசிய உறவு வைத்திருப்பதை போலத்தான் இயக்குநர்களே கதைகளை உருவாக்கி வருகின்றனர். மாதம்பட்டி ரங்கராஜ், ரவி மோகன், நாஞ்சில் விஜயன் என தொடர்ந்து தமிழ் சினிமா பிரபலங்களின் குடும்ப பிரச்சனைகள் பொதுவெளியில் பேசு பொருளாக மாறியுள்ளன.

கலங்கிய கயாடு லோஹர்: அசாமை சேர்ந்த கயாடு லோஹர் மலையாளத்தில் மேலாடையே அணியாமல் நடித்த பத்தொன்பதாம் நூற்றாண்டு படத்தில் நடித்த பின்னர் கூட இந்த அளவுக்கு நெகட்டிவிட்டியை சம்பாதிக்கவில்லை. ஆனால், தமிழ் சினிமாவில் டிராகன் படத்தில் நடித்து விட்டு அதன் பின்னர், ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் சிம்பு படத்தில் கமிட்டாகி அந்த படம் டிராப் ஆனதுமே ஏகப்பட்ட மோசமான பேச்சுகள் அவரை சுற்றி வலம் வந்தன. அதை பற்றி எல்லாம் தான் படித்துவிட்டு தூக்கத்தையே தொலைத்து விட்டேன் என்றும் ரொம்பவே மோசமாக பேசுகின்றனர் என்றும் கயாடு லோஹர் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கண்கலங்கியுள்ளார்.

எனக்கு ரொம்பவே வருத்தம்: சினிமா பிரபலங்களை பற்றிய கிசுகிசுக்களை சாதாரணமாக பலரும் பேசிவிடுகிறார்கள். ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் அதை கேட்டால், அவர்கள் வருத்தப்படுவார்களே என்பதை யாரும் நினைக்க மாட்டேன் என்கின்றனர். எதுவுமே செய்யாத நிலையில், தன்னை பற்றிய தவறான வார்த்தைகள் மற்றும் கட்டுக் கதைகள் வெளியானது எனக்கு ரொம்பவே வருத்தம் தான். நான், இதுபோன்ற விஷயங்களை ஜஸ்ட் லைக் தட் ஈஸியாக எடுத்துக் கொண்டு கடந்துச் செல்லும் பெண் கிடையாது என உருக்கமாக பேசியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X