Kayadu Lohar: STR கூட எப்போது படம் ஒப்பந்தம் ஆனாலும் கேன்சல் ஆகிடுது.. வருத்தப்பட்டு சொன்ன கயாடு லோஹர்
சென்னை: தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக மாறியிருக்கும் கயாடு லோஹர், தற்போது தனது புதிய படமான இதயம் முரளி படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து பல மொழிகளில் வாய்ப்புகளை குவித்து வரும் அவர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் சிலம்பரசன் குறித்து பகிர்ந்த ஒரு விஷயம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கயாடு லோஹர் நடித்துள்ள இதயம் முரளி திரைப்படம் வரும் 10ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படக்குழு தீவிர புரமோஷனில் ஈடுபட்டு வருகிறது. டிரெய்லருக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால், படம் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்காக பல யூடியூப் சேனல்களுக்கும், ஊடகங்களுக்கும் தொடர்ந்து பேட்டிகளை அளித்து வருகிறார் கயாடு லோஹர்.

அப்படியொரு பேட்டியில்,, "நான் STR-ன் தீவிர ரசிகை. STR சார் கூட நான் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தேன். ஆனால் இரண்டு முறையும் அந்த படங்கள் ஷூட்டிங் போகவே இல்லை. அப்படியே கேன்சல் ஆகிவிட்டது. ஒவ்வொரு முறையும் அவருடன் நடிக்கப் போகிறேன் என்று சந்தோஷப்படுவேன். ஆனால் கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு கைவிட்டுவிடும்" என்று வருத்தத்துடன் கூறினார்.
ஒருநாள் நடக்கும்: தொடர்ந்து பேசிய அவர், "இப்போது அவருடன் எந்தப் படத்திலும் நான் ஒப்பந்தமாகவில்லை. அதனால் இனிமேல் அதைப் பற்றி அதிகமாக எதிர்பார்த்து ஏமாறவும் விரும்பவில்லை. இந்த விஷயத்தை முழுவதுமாக யுனிவர்ஸிடம் விட்டுவிட்டேன். எப்போது நடக்க வேண்டுமோ அப்போது நடக்கும். ஆனால் ஒருநாள் கண்டிப்பாக STR சார் கூட ஒரு படம் பண்ணுவேன் என்ற நம்பிக்கை மட்டும் எனக்கு இருக்கிறது. அது எப்படி நடக்கும், எப்போது நடக்கும் என்பதை யுனிவர்ஸே முடிவு செய்யட்டும்" என்று புன்னகையுடன் தெரிவித்தார்.

ரசிகர்கள் ரியாக்ஷன்: கயாடு லோஹரின் இந்த பதில் தற்போது STR ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் அவரது பேட்டி வீடியோ வேகமாக பகிரப்பட்டு வரும் நிலையில், "கண்டிப்பாக அந்த நாள் சீக்கிரமே வரும்", "STR - கயாடு லோஹர் கூட்டணி செமையாக இருக்கும்", "யுனிவர்ஸ் கண்டிப்பா இந்த ஆசையை நிறைவேற்றும்" என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஃபேன் -கேர்ள்: ஒரு ரசிகையாக இருந்தபடியே, தனக்கு கிடைக்காமல் போன இரண்டு வாய்ப்புகள் பற்றிய ஏமாற்றத்தையும், அதே நேரத்தில் நம்பிக்கையை மட்டும் கைவிடாமல் பேசிய கயாடு லோஹரின் இந்த பேட்டி, தற்போது இணையத்தில் அதிகம் பேசப்படும் சினிமா வீடியோக்களில் ஒன்றாக மாறியுள்ளது. தற்போது அவரது புதிய படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், STR குறித்து அவர் பகிர்ந்த இந்த ஃபேன்-கேர்ள் தருணம் சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறது.


Click it and Unblock the Notifications