»   »  உம்மாவுக்கு ஜே போடும் கீர்த்தி!

உம்மாவுக்கு ஜே போடும் கீர்த்தி!

Subscribe to Oneindia Tamil

கீர்த்தி சாவ்லா படு துணிச்சல் பேர்வழி தான். இல்லாவிட்டால் உதட்டோடு உதடு பொருத்தி ஆழமான முத்தம்கொடுத்து நடிக்க நான் தயார் என்று பகிரங்கமாக அறிவிப்பாரா?

பாக்யராஜின் மகன் சாந்தனுவுடன் காதல், கிளாமர் காட்டுவதில் படு துணிச்சல் என படு பரபரப்பாக செய்திகளில்அடிபடுகிறார் கீர்த்தி சாவ்லா. அஜீத்துடன் ஆழ்வார் படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி.

ஆணை படத்தில் நமீதா அளவுக்கு பிரமாண்டமாக இல்லாவிட்டாலும் கூட தன்னால் முடிந்த அளவுக்கு கிளாமர்சேவை புரிந்த கீர்த்தி சாவ்லா, கிளாமர்னா எனக்கு ஓ.கே.தான். அதில் எந்தத் தவறும் இல்லை என்று வேதம்ஓதுகிறார்.

முத்தக் காட்சிகளில் நடிப்பதையெல்லாம் ஏன் சர்ச்சையாக்குகிறார்கள் என்பது கீர்த்தியின் முக்கியமான விசனம்.முத்தம் என்பது சாதாரண விஷயம். அதைப் போய் பெரிதுபடுத்துவது ஏன் என்று விழிகளில் ஆச்சர்யம்காட்டுகிறார் கீர்த்தி. முத்தக் காட்சியில் நடிக்க நான் ஒருபோதும் தயக்கம் காட்ட மாட்டேன். தேவையானால்கொடுப்பதில் என்ன தப்பு?

உதட்டோடு உதடு பொருத்தி முத்தம் கொடுத்து நடிக்க எனக்கு ஆட்சேபனையே இல்லை. வல்லவன் படத்தில்சிம்புவும், நயனதாராவும் முத்தம் கொடுத்து நடித்ததில் எந்தத் தப்பும் இல்லை. அதைப் போய்விமர்சிக்கிறார்களே.

காதலர்கள் முத்தம் கொடுக்காமல் எப்படிக் காதலிக்க முடியும்? கணவன், மனைவி இடையே முத்தம் பெரியதப்பான விஷயமா? முத்தமே கொடுக்காமல் எப்படியப்பா காதலையும், அன்பையும் வெளிப்படுத்த முடியும்என்று எதிர் கேள்வி போடுகிறார் கீர்த்தி.

சூடான ரூட்டில் போய்க் கொண்டிருந்த கீர்த்தியை பிடித்து இழுத்து அமைதிப்படுத்தி வேற ரூட்டுக்குத்திருப்பினோம். சுருதி குறைந்த கீர்த்தி தொடர்ந்தார். இதுவரை பத்து படங்களில் நடித்து விட்டேன். ஆணை படம்தான் எனது முதல் படம்.

எனக்கு ரொம்பப் பிடித்த நடிகை ஸ்ரீதேவி. அவரைப் பார்த்துத்தான் நான் நடிக்கவே ஆசைப்பட்டேன்.மணிரத்தினம் இயக்கத்தில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்பதுதான் எனது லட்சியம் என்று அடுக்கித்தள்ளினார் கீர்த்தி.

கவ்வு முத்தமோ, ஜவ்வு முத்தமோ, நல்லா இருந்தா போதும்ய்யா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil