twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கீர்த்தி வாவ்லா! வாவ்யா என்று சொல்லும் அளவுக்கு கும்சமாக உள்ளார் கீர்த்தி சாவ்லா.சென்னையில் புதுசாக வாங்கியுள்ள ஃபிளாட்டில் சந்தோஷமாக இருக்கிறார்.மலையாள முந்திரிகளும், மும்பை சுந்தரிகளும் கோலோச்சி வரும் தமிழ் சினிமாவில்தெலுங்கிலிருந்து வந்துள்ள மாம்பழம்தான் கீர்த்தி சாவ்லா. இவரும் வடநாட்டிலிருந்து இந்தப் பக்கிட்டு வந்தவர் தான். ஆனால், இவர் சின்னப் புள்ளையாகஇருக்கும்போதே ஆந்திராவுக்கு வந்துவிட்டதாம் இவரது குடும்பம்.தமிழையும், தெலுங்கையும் கலந்து புதுமாதிரியாக பேசும் கீர்த்தி, நடிப்பிலும் ஒருமாதிரியாகத்தான் இருக்கிறார்.ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் உருவாகும் உயிர் எழுத்து படத்தில் நடித்து முடித்துள்ளகீர்த்தி சாவ்லா, அடுத்து பிறகு என்ற படத்திலும், 1999 என்ற படத்திலும்நடிக்கவுள்ளார். கன்னடத்தில் தத்தா என்ற படத்தை முடித்துள்ளார்.கிராமத்து கட்டையாக நந்தினி என்ற கதாபாத்திரத்தில் உயிர் எழுத்து படத்தில்நடித்துள்ளாராம் கீர்த்தி. ஜாலியான கதையான இதில் எனக்கு நடிக்க நல்ல வாய்ப்புஎன்ற கீர்த்தியிடம், அப்ப... என்று நாம் ஒரு மாதிரியாக இழுத்தபோது, உண்டு,உண்டு, கிளாமரும் உண்டு என்று ஆறுதல்படுத்தினார்.விஜயகாந்த்தின் அண்ணன் மகன் ஹீரோவாக நடிக்கும் 1999 படத்திலும் அசத்தலானரோல்தானாம். அதிலும் அமர்க்களப்படுத்தி வருகிறாராம். கீர்த்தியின் முதல் படம்அர்ஜூனின் ஆணை.அதில் நடிப்பதற்காக சென்னைக்கு வந்தபோது சூடு (சென்னையின் சூடுதான்!) தாங்கமுடியவில்லையாம். அப்புறம் பழகி விட்டதாம். இப்போது தமிழையும் அழகாககற்றுக் கொண்டு விட்டாராம்.தெலுங்கிலும் நாலும், கன்னடத்திலும் இரண்டுமாக மொத்தம் 6 படங்களைமுடித்துள்ள கீர்த்திக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கைஉள்ளதாம்.தமிழில் நான் நடித்து ஒரு படம்தான் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து இப்போதுபடங்கள் வந்து கொண்டிருக்கிறது. கால்ஷீட் பிரச்சினை வராத அளவுக்குபடங்களுக்கு டேட்ஸ் கொடுக்கிறேன் (ஆமாக்கா, அது ரொம்ப முக்கியம்)சென்னையில் வீடு வாங்கிட்டீங்களே, பெரிய பிளான் இருக்கிறதோ என்றுகேட்டபோது, அப்படியெல்லாம் இல்லை. தமிழில் நல்ல நடிகை என்ற பெயர் வாங்கவேண்டும். அதற்காக த்தான் இங்கேயே தங்கி தொடர்ந்து தமிழில் நடிக்கப்போகிறேன். அதற்காகத்தான் வீடு வாங்கினேன்.அது மட்டுமல்ல ஹோட்டலில் தங்கி தயாரிப்பாளர்கள் தலையில் மஞ்சள் அரைக்கஎனக்குப் பிடிக்காது (அம்மணி மட்டும் தனியாத்தான் தங்கியிருக்கிறாராம் புதுவீட்டில்!) நடிப்போடு கிளாமரையும் சரி விகித சமானத்தில் கொடுக்கத் துடிக்கும் கீர்த்தி சாவ்லா,தமிழில் முன்னணி நடிகையாகும் வெறியில் இருக்கிறாராம். கடுமையாக முயற்சிப்பதுஎனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால்தான் ஒரு முடிவோடு சென்னைக்கே வந்துவிட்டேன்.முதலில் கஷ்டப்பட வேண்டும். அப்புறம்தான் நமது இஷ்டத்திற்கு இருக்க முடியும்என்று சென் தத்துவம் எல்லாம் பேசுகிறார்.இப்போதைக்கு அதிக தொல்லை தராமல் இருப்பதால் கீர்த்தி சாவ்லாவைத் தேடி படவாய்ப்புகள் வந்தவண்ணம் இருக்கிறதாம். வளரட்டும், வளரட்டும்!

    By Staff
    |

    வாவ்யா என்று சொல்லும் அளவுக்கு கும்சமாக உள்ளார் கீர்த்தி சாவ்லா.சென்னையில் புதுசாக வாங்கியுள்ள ஃபிளாட்டில் சந்தோஷமாக இருக்கிறார்.

    மலையாள முந்திரிகளும், மும்பை சுந்தரிகளும் கோலோச்சி வரும் தமிழ் சினிமாவில்தெலுங்கிலிருந்து வந்துள்ள மாம்பழம்தான் கீர்த்தி சாவ்லா. இவரும் வடநாட்டிலிருந்து இந்தப் பக்கிட்டு வந்தவர் தான். ஆனால், இவர் சின்னப் புள்ளையாகஇருக்கும்போதே ஆந்திராவுக்கு வந்துவிட்டதாம் இவரது குடும்பம்.

    தமிழையும், தெலுங்கையும் கலந்து புதுமாதிரியாக பேசும் கீர்த்தி, நடிப்பிலும் ஒருமாதிரியாகத்தான் இருக்கிறார்.

    ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் உருவாகும் உயிர் எழுத்து படத்தில் நடித்து முடித்துள்ளகீர்த்தி சாவ்லா, அடுத்து பிறகு என்ற படத்திலும், 1999 என்ற படத்திலும்நடிக்கவுள்ளார். கன்னடத்தில் தத்தா என்ற படத்தை முடித்துள்ளார்.


    கிராமத்து கட்டையாக நந்தினி என்ற கதாபாத்திரத்தில் உயிர் எழுத்து படத்தில்நடித்துள்ளாராம் கீர்த்தி. ஜாலியான கதையான இதில் எனக்கு நடிக்க நல்ல வாய்ப்புஎன்ற கீர்த்தியிடம், அப்ப... என்று நாம் ஒரு மாதிரியாக இழுத்தபோது, உண்டு,உண்டு, கிளாமரும் உண்டு என்று ஆறுதல்படுத்தினார்.

    விஜயகாந்த்தின் அண்ணன் மகன் ஹீரோவாக நடிக்கும் 1999 படத்திலும் அசத்தலானரோல்தானாம். அதிலும் அமர்க்களப்படுத்தி வருகிறாராம். கீர்த்தியின் முதல் படம்அர்ஜூனின் ஆணை.

    அதில் நடிப்பதற்காக சென்னைக்கு வந்தபோது சூடு (சென்னையின் சூடுதான்!) தாங்கமுடியவில்லையாம். அப்புறம் பழகி விட்டதாம். இப்போது தமிழையும் அழகாககற்றுக் கொண்டு விட்டாராம்.

    தெலுங்கிலும் நாலும், கன்னடத்திலும் இரண்டுமாக மொத்தம் 6 படங்களைமுடித்துள்ள கீர்த்திக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கைஉள்ளதாம்.


    தமிழில் நான் நடித்து ஒரு படம்தான் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து இப்போதுபடங்கள் வந்து கொண்டிருக்கிறது. கால்ஷீட் பிரச்சினை வராத அளவுக்குபடங்களுக்கு டேட்ஸ் கொடுக்கிறேன் (ஆமாக்கா, அது ரொம்ப முக்கியம்)

    சென்னையில் வீடு வாங்கிட்டீங்களே, பெரிய பிளான் இருக்கிறதோ என்றுகேட்டபோது, அப்படியெல்லாம் இல்லை. தமிழில் நல்ல நடிகை என்ற பெயர் வாங்கவேண்டும். அதற்காக த்தான் இங்கேயே தங்கி தொடர்ந்து தமிழில் நடிக்கப்போகிறேன். அதற்காகத்தான் வீடு வாங்கினேன்.

    அது மட்டுமல்ல ஹோட்டலில் தங்கி தயாரிப்பாளர்கள் தலையில் மஞ்சள் அரைக்கஎனக்குப் பிடிக்காது (அம்மணி மட்டும் தனியாத்தான் தங்கியிருக்கிறாராம் புதுவீட்டில்!)

    நடிப்போடு கிளாமரையும் சரி விகித சமானத்தில் கொடுக்கத் துடிக்கும் கீர்த்தி சாவ்லா,தமிழில் முன்னணி நடிகையாகும் வெறியில் இருக்கிறாராம். கடுமையாக முயற்சிப்பதுஎனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால்தான் ஒரு முடிவோடு சென்னைக்கே வந்துவிட்டேன்.

    முதலில் கஷ்டப்பட வேண்டும். அப்புறம்தான் நமது இஷ்டத்திற்கு இருக்க முடியும்என்று சென் தத்துவம் எல்லாம் பேசுகிறார்.


    இப்போதைக்கு அதிக தொல்லை தராமல் இருப்பதால் கீர்த்தி சாவ்லாவைத் தேடி படவாய்ப்புகள் வந்தவண்ணம் இருக்கிறதாம்.

    வளரட்டும், வளரட்டும்!

      Read more about: keerthi chawlas dreams
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X