அசுரனில் டான்ஸ் கத்துக்கொடுத்த தனுஷ்… கென் கருணாஸ் ஸ்பெஷல் பேட்டி

Recommended Video

Asuran | Karunas Son 'Ken' interview | தனுஷ் சார் என்ன பாத்து மெரண்டுட்டார்

சென்னை: எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. எனக்கு இதை விட வேற என்ன வேணும், எனக்கு ரொம்ப உற்சாகமா ஃபீல் பண்றேன். நான் சினிமாவுக்குள்ள வந்ததுக்கு என்னோட அப்பாதான் காரணம் என்று அசுரன் படத்தில் நடித்தது பற்றி தன்னுடைய அனுபவங்களை நம்முடைய ஃபிலிமிபீட் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டார் கென் கருணாஸ்.

நான் எந்த ஒரு விஷயத்தை பண்றதா இருந்தாலும், முதல்ல அப்பாகிட்டே எல்லாத்தையும் விளக்கமா சொல்லிடுவேன். அதனால நான் என்ன பண்ணப்போறேங்கிறது அப்பாவுக்கு தெரிஞ்சிடும். அதனால் எனக்கு பிரச்சனை இல்லை. டான்ஸ், பாட்டெல்லாம் முதல்ல இருந்தே நான் பண்ணிகிட்டு தான் இருக்கேன். நல்லா பாடுவேன்.

Ken Karunas Exclusive Interview

அசுரன் படத்துலேயும் ஒரு பாட்டு பாடியிருக்கேன்.

எங்க புள்ளீங்கோ எல்லாம் பயங்கரம்
எங்கள பாத்தா தமன்னா மயங்கி உழுந்துரும்
ஆங் உண்மைங்க நயன்தாராவும் கூட உழுந்துரும்
இப்ப புது நடிகெ கீர்த்தி சுரேஷு கூட உழுந்துரும்

இந்த பாட்டை அசுரன் படக்குழுவுக்கும் அப்பா அம்மாவுக்கும் நான் டெடிகேட் பண்றேன்.

அசுரன் படத்துல நான் நடிச்சதுல தரமான சீன் என்னன்னு கேட்டா, ரொம்ப லெங்த்தியான டயலாக் ஒண்ணு. ஒரே ஷாட்ல எடுக்கணும். ஸ்டெடி கேம் ஷாட் அது. ஷாட் கட் எல்லாம் சொல்லி எடுக்க முடியாது. நான் மிஸ் பண்ணிட்டேன்னா, திரும்பவும் மொதல்ல இருந்து எடுக்கணும். அந்த மாதிரி ஒரு கஷ்டமான ஒரு சீன்.

நிலைமை அப்படி இருக்கும்போது, தனுஷ் சார் அதை பாத்துட்டு யோசிச்சாரு. அந்த சீனை நான் ஏற்கனவே வெற்றி சார் கூட பேசி ரெண்டு மூணு வாட்டி ரிகர்சல் பண்ணிட்டேன். அதனால தனுஷ் சார் வந்து பாத்தாரு. அவர் கூடயும் ஒரு வாட்டி லைட்டா ரிகர்சல் பாத்துட்டேன். ஷாட்ல நல்லா அவுட்புட் கொடுத்தேன். ஒரே டேக்ல அது முடிஞ்சிடிச்சி.

அதை பாத்துட்டு டயலாக் எப்ப படிச்சேன்னு கேட்டாரு. அதுக்க நான் காலையிலயே அதை படிச்சிட்டேன் சார்னு சொன்னேன். அதுக்கு தனுஷ் சார், சூப்பர் ரொம்ப நல்லா பண்ணுனே இந்த சீனை. எனக்கு ரொம்ப புடிச்சிருந்தது அப்பிடின்னாரு. அந்த மாதிரி சில சீன் எல்லாம் படத்துல இருந்தது. எனக்கும் ரொம்ப சந்தோஷமா இருந்தது.

Ken Karunas Exclusive Interview

என்னோட அப்பா அதிகமா எதுக்கும் பாராட்ட மாட்டாரு. ஹலோ குட்டி செல்லம் படம் பாத்துட்டு நல்லா நடிச்சிருக்கேன்னு சொன்னாரு. அப்பா சொன்ன ஒரு விஷயம் என்னன்னா, ஆடியன்ஸ் கிட்ட இருந்து கை தட்டல் வாங்குறது ரொம்ப கஷ்டமான விஷம். ஆனா, நீ தியேட்டர்ல அதை வாங்குனே, அது எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்குன்னு சொன்னாரு. மத்தபடி எங்கப்பாவுக்கு நான் பாடுனா ரொம்ப பிடிக்கும்.

அசுரன் படத்துல நடிக்கும்போது, தனுஷ் சார் எனக்கு டான்ஸ் கூட கத்துகொடுத்திருக்கார். அந்த படத்தோட ஷூட்டிங்ல, நான் சின்ன பையன், எனக்கு டான்ஸ் பத்தி என்ன தெரியும்னு ஒரு சின்ன தயக்கம் இருந்திச்சி. அப்போ தனுஷ் சார் தான் வந்து எனக்கு எப்பிடி டான்ஸ் ஆடணும்னு சொல்லிக்கொடுத்தாரு.

அந்த சீன் அசுரன் மேக்கிங் வீடியோவுல கூட அது இருக்கு. நெறைய பேர் அதை பாத்திருப்பாங்க. அது ஒரு நல்ல அனுபவம். அவர் சொல்லிக்கொடுத்து நான் ஆட, ஒரு டயத்துல ரெண்டு பேரும் ஒண்ணா ஆடுனோம் என்று சந்தோசமாக கூறினார் கென் கருணாஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X