உங்க தயவு தாட்சணையே வேண்டாம்.. கருணாஸிடம் நேரடியாகவே சொன்ன மகன் கென் கருணாஸ்!
சென்னை: நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் எழுதி, இயக்கி, நடித்துள்ள படம் யூத். இந்த படம் வரும் 6ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. அதற்கான புரோமோசன் வேலைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கென் கருணாஸ் மற்றும் படத்தில் நடித்துள்ள சுராஜ் வெஞ்சரமூடு இணைந்து சினி உலகம் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துக்கொண்ட தகவல்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்த பேட்டியில் கென் கருணாஸ் கூறுகையில், " நான் இயக்குநர் ஆனது எனது அப்பாவுக்கு மகிழ்ச்சிதான். ஒரு பக்கம் என்னை போட்டு டார்ச்சர் செய்து கொண்டு இருக்கிறார். அப்பாவுக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. நான் இயக்குநர் என்ற பெரிய ஸ்டெப் எடுத்து வைக்கிறேன் என்று பயப்படுகிறார். கருணாஸின் மகன் தான் கென், அதில் எந்த மாற்றுக் கருத்துமே இல்லை. நான் திரைத்துறைக்குள் வருவதற்கான வாய்ப்பு என்பது ஏதோ எளிதாக கிடைத்துவிடவில்லை.

என்னை வேறு யாராவது அறிமுகம் செய்து வைத்திருந்தால், என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், ஆனால் என்னை வெற்றி மாறன் சார் தான் அறிமுகம் செய்து வைத்தார். அவரை எல்லாம் அவ்வளவு எளிதாக யாரும் கன்வின்ஸ் செய்துவிட முடியாது. நிறைய பேருக்கு எனது அப்பாவைப் பிடிக்காது, அதற்கு காரணம் எனது அப்பா முகத்துக்கு நேராக பேசிவிடுவார் என்பது தான். அவர் யாரிடமும் சென்று சிபாரிசுக்கு நிற்க மாட்டார்.
அப்பா அம்மாவுக்காக: அப்படி இருக்கும் போது, நான் அவரிடம் கூறியது, என் அப்பாவின் தலையீட்டால் தான் நான் திரைத்துறைக்கு வந்தேன், என்ற பேச்சு என்றைக்காவது வரத்தான் போகிறது. அது உண்மையும் கூட. ஆனால் எனக்கு என்று தெரிந்த சினிமா அறிவு ஒன்று உள்ளது அல்லவா? , அதில் நான் எனது பெற்றோர்களுக்காக ஒன்றைச் செய்ய நினைக்கிறேன். எனவே எதிலுமே நீங்கள் வராதீர்கள் என்று நானே சொல்லிவிட்டேன். சுராஜ் சார் எனது அப்பாவிடம் பேசினார் என்பது, சுராஜ் சார் படப்பிடிப்புக்கு வந்த பின்னர் தான் தெரியும்.

சிபாரிசே வேண்டாம்: நான் சுராஜ் சாருக்கு கதை சொல்லப் போகிறேன், விரைவில் சொல்லிவிடுவேன் என்று தான் கூறினேன். அதேபோல் என்னால் முடியவில்லை என்றால் அப்பாவிடம் கேட்டிருப்பேன். ஆனால் இந்த படத்தில் அப்பாவிடம் நான் எந்த சிபாரிசுக்கும் சென்று நிற்காத காரணத்தால் அவருக்கு பயம் வந்துவிட்டது. அப்பா கதாபாத்திரத்திற்கு நான் இருவரை யோசித்து வைத்திருந்தேன், ஒன்று பசுபதி சார், மற்றொன்று சுராஜ் சார். எனது அப்பாவை நடிக்க வைக்க வேண்டும் என்று நாய் யோசிக்கவே இல்லை. அவர் வேண்டவும் வேண்டாம் என்பதில் உறுதியாகவும் இருந்தேன்" என்று கூறியுள்ளார். கென் கருணாஸின் இந்த தெளிவான பேச்சு, திரைத்துறையினர் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











