மலையாள ஹீரோயின் ஏன்?.. எனக்கு ஜோடியா நடிக்க எந்த தமிழ் நடிகையும் ஓகே சொல்லல.. கென் கருணாஸ் ஓபன்!

சென்னை: தமிழ் சினிமாவில் தொடர்ந்து மலையாள நடிகைகள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கின்றனர். அதற்கு எதிரான விமர்சனங்களும் வந்துக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால், ஹீரோக்கள் மற்றும் இயக்குநர்கள் தொடர்ந்து தமிழ் நடிகைகள் தங்கள் படங்களில் நடிக்க சம்மதம் தெரிவிப்பதில்லை என்கின்றனர். இயக்குநராகவும் ஹீரோவாகவும் களமிறங்கியுள்ள கென் கருணாஸும் தனது படத்தில் மலையாள நடிகையை ஏன் நடிக்க வைத்தேன் என்பதற்கும் அதையே காரணமாக கூறியுள்ளார்.

நடிகர் கருணாஸ் மற்றும் பாடகி கிரேஸ் கருணாஸுக்கும் மகனாக பிறந்த கென் கருணாஸ் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தில் தனுஷ் மகனாக நடித்து அசத்தினார். மேலும், விடுதலை படத்தில் விஜய் சேதுபதி வாத்தியாராக மாறவும் கென் கருணாஸின் கதாபாத்திரம் தான் காரணமாக அமையும்.

Ken Karunas reveals why he paired with Malayalam Actress rather than Tamil Heroine
Photo Credit:

தமிழ் சினிமாவில் தனது நடிப்புத் திறமையை ஏற்கனவே வெற்றிமாறன் பட்டறையில் பட்டைத் தீட்டிய கென் கருணாஸ் ஹீரோவாகவும் இயக்குநராகவும் அறிமுகமாகவுள்ள படம் தான் யூத்.

விஜய் பட டைட்டில்: மேடைகளில் நடிகர் விஜய்யை கருணாஸ் அரசியல் ரீதியாக எதிர்த்து வந்தாலும் அவரது மகன் கென் கருணாஸ் தனது முதல் படத்துக்கே விஜய் பட டைட்டிலான யூத் டைட்டிலை தான் பயன்படுத்தி உள்ளார். மேலும், அடுத்த மாதம் மார்ச் 19ம் தேதி சூர்யா, தனுஷ் படங்களே ரிலீஸ் ஆக தயக்கம் காட்டி வரும் நிலையில், துரந்தர் 2, டாக்ஸிக் உள்ளிட்ட மெகா படங்களுடன் மோத முடிவெடுத்துள்ளார் கென் கருணாஸ்.

தமிழ் சினிமாவில் மலையாள நடிகைகள்: அசின், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், மாளவிகா மோகனன், மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன், நிகிலா விமல், அனுபமா பரமேஸ்வரன் என ஏகப்பட்ட மலையாள நடிகைகள் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல பெரிய படங்களில் நடித்துள்ளனர். சமீப காலமாக புதிதாக அறிமுகமாகும் நடிகர்களுக்கும் மலையாள நடிகைகளே ஜோடியாக நடித்து வருகின்றனர். பிரதீப் ரங்கநாதன், துருவ் விக்ரம், சிறை படத்தில் நடித்த அக்‌ஷய் குமார், வித் லவ் படத்தில் நடித்த அபிஷன் ஜீவிந்த் என பலருக்கும் ஜோடிகளாக மலையாள நடிகைகளே நடித்து வருகின்றனர்.

தமிழ் நடிகைகள் நோ சொல்லிட்டாங்க: இந்நிலையில், கென் கருணாஸிடம் இந்த கேள்வி வந்து விழுந்த நிலையில், சமீபத்தில் தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளாக இருக்கும் பலரிடம் தனக்கு ஹீரோயினாக நடிக்கிறீங்களான்னு கேட்டேன். ஆனால், யாருமே ஓகே சொல்லவில்லை. கடைசியாகத்தான் சிறை படத்தின் இயக்குநர் நீலோத்தி பாடலை காண்பித்தார். அப்புறம் அனிஷ்மாவிடம் சென்று கதை சொன்னேன். எல்லாத்தையும் கேட்டுவிட்டு ரொம்பவே யோசிச்சு, 2 நாளில் சொல்றேன் என சொன்னார். எனக்கு அப்போ நம்பிக்கையே இல்லை. ஆனால், அடுத்த நாளே அவர் நடிக்க சம்மதம் தெரிவித்தார் என யூத் படத்தில் அனிஷ்மா நடித்த கதையை வெளிப்படையாக பேசியுள்ளார் கென் கருணாஸ். ஏற்கனவே படத்தின் முட்ட கலக்கி பாடல் 10 மில்லியன் வியூஸ் கடந்து ஹிட் அடித்த நிலையில், சிறை, வித் லவ் படங்களை போல யூத் படமும் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X