கெட்டவன் என்னாச்சு.. இயக்குனர் நந்து சொல்வது என்ன.. பிரத்யேக நேர்காணல் !

சென்னை : சிம்புவை வைத்து கெட்டவன் படத்தை இயக்கிய நந்து நம் பிலிமி பிட் சேனலுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார்.

கெட்டவன் படம் டிராப்பா ?

என் தரப்பில் இருந்து நான் அப்படி கருதவில்லை சிம்பு தரப்பில் இருந்தும் டிராப் அப்படி ஒரு எந்த ஒரு விசயமும் சொல்லவில்லை. படம் ரீ ஸ்டாட் ஆகும் ஆனால் எப்போது என்று தெரியவில்லை.

 kettavan director GT nandhu special interview

கெட்டவன் படத்திற்கு பிறகு?

கெட்டவன் படம் இல்லை என்ற பிறகு ஒரு மனநல நோயாளியாக தான் சுற்றி கொண்டு இருந்தேன். சிம்புவால் நான் இப்படி ஆனேன் என்று எண்ணி கோவிலுக்கு சென்று சீட் எழுதி கட்டினார்கள். அவர்கள் எழுதிய சீட்டினால் சிம்புவிற்கு இவ்வளவு தூரம் தப்பாக நடந்து வருகிறதா என்று எனக்கு தெரியவில்லை.

சிம்பு உடன் தொடர்பில் இருக்கிறீர்களா?

சிம்பு உடன் எப்பொழுதும் தொடர்பில் உள்ளேன். எனக்கு தெரிந்து சிம்பு இப்போது தான் மிக சரியாக இருக்கிறார் ஆனால் யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. அவர் சரியில்லாத போது அவருக்கு பலரும் வாய்ப்பு கொடுத்தனர். இதில் யாரை குறை சொல்வது என்று தெரியவில்லை.

சிம்புவிற்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

யாரையும் நம்பாதீர்கள் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று உங்களுக்கு தெரிந்து தான் செய்கிறீர்கள். மேலும் கெட்டவனை நாம் மீண்டும் எடுக்க வேண்டும். ஜ யம் வெய்ட்டிங் .

 kettavan director GT nandhu special interview

சிம்பு விடம் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறதா?

சிம்பு அப்படியே தான் இருக்கிறார் அவர் ரொம்ப நல்ல மனிதர். அவருடன் மற்றும் அவரை சுற்றி இருப்பது தான் கெட்டதே தவிர அவர் நல்லவர். அவரை தப்பாக பேசுபவர்கள் அவருடன் பழகி பார்த்தால் அவரை பற்றி தெரியும் .

அடுத்த படம் பற்றி?

இது முழுக்க முழுக்க ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட படம். படத்தில் பாடல்கள் இல்லை இதனால் ஆங்கில தலைப்பு வைக்கலாம் என்று, டே அண்டு நைட் என்பதை வைத்தோம். பத்து லட்ச ரூபாய் செலவில் ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X