twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தேசிய விருது கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி - கேஜிஎப் ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பு

    |

    Recommended Video

    National award winner | stunt choreographer Anbariv | Kannada film KGF

    சென்னை: தொழிலில் உண்மையான சின்சியாரிட்டியும் உழைப்புமே நமக்கு எப்பவும் வெற்றிக்கு கை கொடுக்கும் என்று கே.ஜி.எப் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் அன்பு தெரிவித்துள்ளார்.

    ஒரு படம் நல்ல கதையம்சம், பாடல்கள் என இருந்தாலும் கூட, படம் பார்ப்பவர்களுக்கு கொஞ்சமும் போரடிக்காமல் இருக்கவேண்டுமானால், அந்தப் படத்தில் குறைந்தது மூன்று அல்லது நான்கு சண்டைக் காட்சிகளாவது இருக்க வேண்டும். அந்த சண்டைக் காட்சிகளும் படம் பார்ப்பவர்களின் நரம்புகள் புடைக்க எதிர் சீட்டில் உள்ளவர்களின் முதுகில் குத்துவிடும் அளவுக்கு இருக்கவேண்டும்.

    அதோடு கூடவே அந்த சண்டைக் காட்சிகளும் பெயரளவில் இல்லாமல் பஞ்ச் வசனத்துடனும், சண்டைக் காட்சியில் இடம் பெறும் நடிகர்களும் நல்ல உடல் வலிமையுடன் இருந்தால் மட்டுமே அந்த சண்டைக் காட்சிகளில் பொறி பறக்கும். மேலே சொன்ன அத்தனை அம்சங்களும் தேசிய விருது பெற்ற கே.ஜி.எஃப் படத்தில் இருந்தன.

    திருக்கடவூர் அபிராமியின் அழகில் சொக்கிப்போன கவியரசர் - பட்டராக வாழ்ந்த எஸ்.வி.சுப்கையா திருக்கடவூர் அபிராமியின் அழகில் சொக்கிப்போன கவியரசர் - பட்டராக வாழ்ந்த எஸ்.வி.சுப்கையா

    அனல் பறக்கும் சண்டைகள்

    அனல் பறக்கும் சண்டைகள்

    குறிப்பாக அந்தப் படத்தில் நாயகன் சொல்லும் டயலாக், ஒருத்தன அடிச்சி டான் ஆனாவன் இல்லடா... நான் அடிச்ச பத்து பேருமே டான் தான்டா. இந்த வசனத்தை சொல்லும் போதும் நாயகனின் தெறிக்கவிடும் சண்டைக் காட்சிக்கு தியேட்டரே அதிர்ந்தது. அந்த ஒரு காட்சிக்காகவே 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த சண்டை அமைப்புக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

    ஸ்டண்ட் மாஸ்டர்ஸ்

    ஸ்டண்ட் மாஸ்டர்ஸ்

    அந்த சண்டைக் காட்சிகளை வடிவமைத்தது தமிழக சண்டைப் பயிற்சியாளர்களான இரட்டையர்களான அன்பரிவ் சகோதரர்கள். தேசிய விருது பெற்ற பின்பு முதன் முதலாக நமது ஃபிலிமிபீட்டுக்கு அளித்த பேட்டியில். தேசிய விருது கிடைத்ததை இன்னும் கூட எங்களால் நம்ப முடியவில்லை. எங்களுடைய இந்த வெற்றிக்கு உண்மையான உழைப்பும் பயிற்சியுமே முக்கிய காரணம் என்றார் இரட்டையர்களில் ஒருவரான அன்பு

    100 சதவிகித வெற்றி

    100 சதவிகித வெற்றி

    சண்டைக் காட்சிகள் நல்ல முறையில் அமையவேண்டுமானால், அதற்கு முறையான பயிற்சியும் முழுமையான ஈடுபாடும் அவசியம். அப்பொழுது தான் அது நாம் எதிர்பார்க்கும் 100 சதவிகித வெற்றியைத் தரும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். மற்ற மொழிப் படங்களில் சண்டைக் காட்சிகளை அமைப்பது போலவே இந்தப் படத்திற்கும் சண்டைக் காட்சிகளை அமைத்தோம். கடுமையான உழைப்பு என்றுமே வெற்றியைத் தரும் என்று நாங்கள் நம்பினோம் என்றார் அன்பு.

    கேஜிஎப் வெற்றிக்கு காரணம்

    கேஜிஎப் வெற்றிக்கு காரணம்

    மற்ற மொழிப் படங்களில் நாங்கள் அமைத்த சண்டைக்காட்சிகளை பார்த்தே கே.ஜி.எஃப் படக்குழுவினர் எங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கினார்கள். இந்தப் படத்தில் சண்டைக் காட்சிகளை அமைக்கும்போது, இது ஒரு மிகப்பெரிய ஹிட்டாகும் என்றும் கூடவே நமக்கு இது ஒரு அடையாளமாகவும் இருக்கும் என்றுதான் நினைத்தேன்.

    தேசிய விருது நம்பிக்கை

    தேசிய விருது நம்பிக்கை

    ஆனால் படம் வெளியான பின்பு என்னுடைய சகோதரர் அறிவு தான் இந்தப் படத்திற்கு நிச்சயமாக தேசிய விருது கிடைக்கும் என்று உறுதியாக நம்பினார். அந்த நம்பிக்கை வீண்போகவில்லை என்று அன்பு தெரிவித்துள்ளார். எங்களுக்கு தேசிய விருது கிடைத்திருப்பதாக செய்தி வெளியானபோது கூட நாங்கள் வழக்கம்போலவே அமைதியாகவே இருந்தோம். முறையான அறிவிப்பு வெளியான பின்பே எங்களுக்கு நம்பிக்கை வந்தது என்றார் அன்பு.

    கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி

    கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி

    இதற்கு முக்கிய காரணம் இயக்குநர் மற்றும் கேமரா மேன் புவன் என இரண்டு பேர்கள் தான் முக்கிய காரணம் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். அதோடு இது எங்களின் தனிப்பட்ட வெற்றி கிடையாது, எங்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றியே என்றார் அன்பு

    English summary
    The stunt master of the film KGF film Anbu says that the real sincerity and hard work in the industry will always give us success.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X