Kovai Sarala - கோவை சரளாவை வைத்துதான் எங்களுக்கெல்லாம் மரியாதை.. கிக் பட குழு பிரத்யேக பேட்டி
சென்னை: Kick (கிக்) சந்தானம் ஹீரோவாக நடித்திருக்கும் கிக் படத்தில் நடித்திருக்கும் செந்தில், கோவை சரளா, மதன் பாப், தம்பி ராமைய்யா ஆகியோர் தமிழ் ஃபில்மிபீட்டுக்கு பிரத்யேக பேட்டி அளித்தனர்.
தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத காமெடியனாக வலம் வந்த சந்தானம் ஹீரோவாக மட்டும்தான் இப்போது நடித்துவருகிறார். அவர் ஹீரோவாக நடித்து கடைசியாக டிடி ரிட்டர்ன்ஸ் படம் வெளியானது. அந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி சந்தானம் எதிர்பார்த்திருந்த வெற்றி டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் கிடைத்துவிட்டதாக பலரும் கூறினர்.

கிக்: இந்த சூழலில் டிடி ரிட்டர்ன்ஸ் கொடுத்த வெற்றியின் உற்சாகத்தோடு சந்தானம் கிக் என்ற படத்தில் நடித்திருக்கிறார். பிரசாந்த் ராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் சந்தானத்துடன் தான்யா ஹோப், செந்தில், தம்பி ராமையா, கோவை சரளா, மதன் பாப்,மன்சூர் அலிகான், மனோபாலா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. படம் நாளை வெளியாகிறது.
படக்குழு பேட்டி: இந்நிலையில் படத்தில் நடித்திருக்கும் செந்தில், கோவை சரளா, மதன் பாப், தம்பி ராமைய்யா ஆகியோர் தமிழ் ஃபில்மிபீட்டுக்கு பிரத்யேக பேட்டி அளித்தனர். அந்தப் பேட்டியில் பேசிய தம்பி ராமைய்யா, "இந்தப் படத்தில் வரும் லொகேஷன்கள் இதுவரை தமிழ் சினிமா பார்க்காதது. அதேபோல் காஸ்டியூமும் மிக அருமையாக இருக்கிறது.
கோவை சரளா: கவுண்டமணி, செந்தில் ஆகியோருடன் இங்கு எப்படி கோவை சரளா நடித்திருக்கிறாரோ அதே அளவு அங்கு பிரம்மானந்தத்துடன் நடித்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் கோவை சரளா சென்று இறங்கினார் என்றால் அவரை வைத்துதான் எங்களுக்கெல்லாம் மரியாதை. இவரை பார்த்து ஆந்திராவில் பலரும் கத்திக்கொண்டு ஓடிவருவார்கள். இந்தப் படத்தில் தமிழ்நாட்டின் முக்கியமான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
செம சேட்டை: படத்தில் கோவை சரளாவின் லுக் அருமையாக இருக்கும். 12 வயது பெண்ணும் தாவி குதிக்கும் அளவுக்கு அவ்வளவு சேட்டையை இந்தப் படத்தில் கோவை சரளா செய்திருக்கிறார். கோவை சரளாவுடன் விஸ்வாசம் படத்தில் நடித்தபோதே அது எனக்கு தெரியும். இந்தப் படத்தில் கோவை சரளா ரொம்பவே அழகாக ஸ்கோர் செய்திருக்கிறார். பெண்களுக்கு யாருமே எழுதுவதில்லையே என சரளா தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பார். இதில் அது நிறைவேறியிருக்கிறது. இதற்கு பிறகு பெரிய ரவுண்டு வருவார்" என்றார்.


Click it and Unblock the Notifications











