பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸ் இசையமைத்த ஒரே படம் என்ன தெரியுமா? ஜெயந்தி கண்ணப்பன் பேட்டி!
சென்னை: ஏவிம் தயாரிப்பு நிறுவனம் போல பிரபலமான மற்றொரு பழம்பெரும் தயாரிப்பு நிறுவனம் ஏஎல்எஸ் தயாரிப்பு நிறுவனம்.
அந்த நிறுவனத்தை தற்போது நிர்வகித்து வரும் ஜெயந்தி கண்ணப்பனின் பார்ட் 2 ரீவைண்ட் ராஜா பேட்டி தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
முதல் பேட்டியில் 4 முதல்வருக்கு சம்பளம் கொடுத்த ஒரே நிறுவனம் எனும் சுவாரஸ்ய தகவலை நம்முடன் பகிர்ந்து கொண்ட ஜெயந்தி கண்ணப்பன், இரண்டாம் பாகத்தில், பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸ் இசையமைத்த ஒரே ஒரு படத்தை பற்றிய ஆச்சர்ய தகவலை கூறியுள்ளார்.

பாரம்பரியம் மாறாத அவரது வீட்டில் எடுக்கப்பட்ட இந்த பேட்டி தமிழ் பிலிமி பீட்டில் வைரலாகி வருகிறது.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் மட்டும் இன்றி ஆங்கிலம், லத்தின் மற்றும் ரஷ்ய மொழிகளிலும் பாடல்களை பாடியுள்ளார் கே.ஜே. யேசுதாஸ்.
ஆனால், அவர் ஒரு படத்திற்கு இசையமைத்துள்ளார் என்ற அரிய தகவல் ஏகப்பட்ட ரசிகர்களுக்கு தெரியாது. அந்த தகவலை ஜெயந்தி கண்ணப்பன் இந்த பேட்டியில் கூறியுள்ளார்.
அதுவும் ஏஎல்எஸ் தயாரிப்பில் வெளியான 'எல்லாம் ஐயப்பன்' எனும் படத்தில் தானாம்.
ஹரிவராசனம் பாடிய யேசுதாஸுக்கு ஐயப்பன் மீது பக்தி அதிகம். விஜயகுமார் உள்ளிட்ட நடிகர்கள் நடித்த அந்த படத்திற்கு அவரே இசையமைத்திருந்தார்.
அதன் பிறகு எந்தவொரு படத்திற்கும் அவர் இசை அமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











