Jana nayagan: சென்சாரில் சிக்கிய ஜன நாயகன்.. 64 இடங்களில் கட்.. பிரபலம் சொன்ன தகவல்!

சென்னை: இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்து இருக்கும் இப்படத்தில், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், நரேன், கவுதம் மேனன் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டுவிழா நேற்று மலேசியாவே ஸ்தப்பித்து போகும் அளவிற்கு நடைபெற்றது.

இந்நிலையில், பிரபல யூடியூபரும், திரைப்பட விமர்சகருமான கோடாங்கி Kodanki voice சேனலில் ஜனநாயகன் படம் குறித்து பேசி உள்ளார். அதில், ஜனநாயகன் திரைப்படத்தில் அளவுக்கு அதிகமாக வன்முறை காட்சிகள் இருந்ததால், தணிக்கை குழு கிட்டத்தட்ட 64 காட்சிகளில் கட்போட்டு தூக்கி உள்ளது. அதுமட்டுமில்லாமல் படத்திற்கு 'யூஏ' சான்றிதழ் கொடுத்துள்ளது. இத்தனை காட்சிகளை தூக்கினால் படத்தை பார்க்கும் ஆடியன்சுக்கு படம் சுத்தமாக புரியாது, விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், இந்த படத்தை வெற்றிப்படமாக ஆக்க வேண்டும், அந்த படத்தின் மூலம் பணத்தை அள்ள வேண்டும் என நினைத்து இருக்கும் தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சி அடைத்துள்ளது. இதனால் தணிக்கைக்குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அப்படியே 64 காட்சிகளின் கட்களை குறைத்துக்கொண்டாலும், படத்திற்கு 'ஏ' சான்றிதழ் தான் தரப்படும் என படக்குழு திட்டவட்டமாக கூறி இருக்கிறது.

Jana nayagan Vijay
Photo Credit:

ஜனநாயகன் தணிக்கை குழு: ஜனநாயகன் திரைப்படத்தின் கதை ஏற்கனவே தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த பகவன்கேசரி படத்தின் கதையைத் தான் தமிழில் ஜனநாயகம் என்ற பெயரி எடுத்துள்ளனர். ஆந்திராவில் பாலையாவுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த படத்தின் பாலைய்யா பல இடத்தில் அரசியல் பேசி இருப்பார். அந்த காரணத்திற்காகத்தான் தமிழில் இந்த படத்தில் நடிப்பதற்கு ஒத்துக்கொண்டார் விஜய். அது மட்டுமல்லாமல் 71ஆவது தேசிய திரைப்பட விழாவில் இந்த படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதையும், ஆந்திர மாநில அரசின் விருதையும் பெற்றது.

அப்படியே காப்பி: இதுவரை விஜய் நடித்த எந்த திரைப்படங்களும் தேசிய விருதுக்கு சென்றதில்லை, அதுபோன்ற படங்களில் விஜய் நடித்ததில்லை என்பதால் இந்த படத்தில் நடித்து எப்படியாவது தேசிய விருதை பெற்று விடலாம் என்ற ஆசையில் தான் விஜய் படத்தில் நடிப்பதற்கு ஒத்துக் கொண்டார். ஆனால்,தெலுங்கு படத்தில் இருப்பது போல அப்படியே வன்முறைகளை காட்சிகளை காப்பிடித்து வைத்தது தான் தற்போது பெரிய பிரச்சனையாகி உள்ளது. தணிக்கைக்குழு காட்டும் கெடுபிடியால் படக்குழு கவலையில் உள்ளதாக அந்த வீடியோவில் கோடாங்கி பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X