சூரி உதவியே பண்ணல.. ஒரு புரமோஷன் பண்ணித்தரேன் கேட்டேன்.. சூடான கொட்டாச்சி.. என்ன ஆச்சு?

சென்னை: சூரியும் நானும் ஒரே கல்யாண மண்டபத்துல எல்லாம் வேலை பார்த்து இருக்கிறோம். ஒரே ரூம் மேட்டாவும் இருந்திருக்கோம். இன்னைக்கு சூரி ஒரு பெரிய நடிகராக மாறியுள்ளார். அது ரொம்பவே சந்தோஷம் தான்.

ஆனால், வளரும் நடிகர்களை கொஞ்சமாவது சப்போர்ட் செய்ய வேண்டும் என்று தான் கேட்கிறேன். இந்த படத்துக்காக ஒரு புரமோஷன் வீடியோ அல்லது ஒரு ட்வீட் போடு கொடு நண்பான்னு கேட்டேன். அதற்கு உனக்கு பண்ணிக் கொடுத்தால், பின்னாடி வெற்றிமாறன் சார் உதவி இயக்குநர்கள் எல்லாம் லைனா படம் பண்ண வரும் போது, இதையே கேட்பாங்கன்னு சொல்லி மறுத்து விட்டார் என நடிகர் கொட்டாச்சி சூரி மீதான தனது வருத்தத்தை பதிவு செய்திருப்பது பரபரப்பை பற்ற வைத்துள்ளது.

Kottachi slams Soori for not helping him for movie promotion too

சினிமாவில் கஷ்டப்பட்டு சாதிக்கும் நடிகர்கள் கூட தங்களுக்கு உதவியாக கஷ்ட காலத்தில் இருந்தவர்களையும் சக நண்பர்களையும் கை தூக்கி விடும் அளவுக்கு பரந்த மனசு இல்லாதவர்களாக உள்ளனர் என ரசிகர்கள் கொட்டாச்சியின் வீடியோவை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

பரோட்டா சூரி முதல் மண்டாடி சூரி வரை: வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா சூரியாக காமெடி காட்சியில் நடித்து அசத்திய நடிகர் சூரி பல படங்களில் நகைச்சுவை நடிகராக கலக்கினார். சிவகார்த்திகேயன் - சூரி காம்போவில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட பல படங்கள் வெற்றிப் பெற்றன. வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடிக்க விடுதலை 2, கருடன், மாமன் என அவரது ரேஞ்சே மாறிவிட்டது. 80 கோடி செலவில் உருவாகி வரும் மண்டாடி படத்தில் மிரட்டலாக நடித்து வருகிறார்.

ஒரு புரமோஷன் கூட பண்ணித் தரல: சூரியை போல கொட்டாச்சியும் பல வருடங்களாக கஷ்டப்பட்டு வரும் காமெடி நடிகராகவே உள்ளார். அவரது மகள் மானஸ்வி நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு கொட்டாச்சியும் சில படங்களில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில், வெற்றிவீரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'பூ காய் கனி' படத்தில் கொட்டாச்சியின் மகள் மானஸ்வி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் பிரஸ்மீட்டின் போது இயக்குநர் வெற்றிவீரன் சூரி எந்த உதவியும் செய்யவில்லை என்றும் வெளியே மட்டும் நண்பர்களுக்கு உதவுவதாக பொய் பேசுகிறார் என்றார். அதை தொடர்ந்து பேசிய நடிகர் கொட்டாச்சி சினிமாவில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் இருந்து அவர் எனக்கு நல்லாவே தெரிந்த நண்பர் தான். ஆனால், ஒரு புரமோஷன் பண்ண சொல்லி இப்போ கேட்டால் ஆதை கூட பண்ணித் தரவில்லை என பேசியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X