twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    KPY ஃபைனல், ஜட்ஜ், ஸ்கிரிப்ட், பெஸ்ட் எபிஸோட்.. சிவபாலனின் KPY ஷேரிங்க்ஸ்! #Exclusive

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    மறுபடியும் KPY வருவேன் - சிவபாலன்!

    சென்னை : விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி பல கலைஞர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற பலர் திரைப்படங்களிலும் வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள்.

    'கலக்கப்போவது யாரு' சீசன் 7 சமீபத்தில் நிறைவடைந்தது. இதில் நான்காம் இடம் பெற்றது சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த சிவபாலன் - புவனேஷ்வரி ஜோடி. விரைவில் அடுத்த சீசன் தொடங்கவிருக்கிறது.

    KPY மூலம் பயங்கர பிரபலமாகியிருக்கும் சிவபாலனிடம் பேசினோம். சின்னத்திரையில் அவரது அடுத்தகட்ட முயற்சி பற்றி நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.

    விஜய் டிவி-க்குள்ள எப்படி வந்தீங்க?

    விஜய் டிவி-க்குள்ள எப்படி வந்தீங்க?

    "விஜய் டி.வி-யில் 'கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ்' ப்ரோகிராம்ல கலந்துக்கிட்டேன். எங்க ஸ்கூல்ல படிச்ச ஒரு அண்ணா விஜய் டி.வி-யில வொர்க் பண்ணாங்க. அவர் சொல்லி முதல் ஆடிஷன் போய் செலக்ட் ஆகிட்டேன். செகண்ட் ஆடிஷன்ல அவுட். கடைசியா நடந்த ஒரு ஆடிஷன்ல ஸ்டாண்ட் அப் காமெடி பண்ணேன். அதில் செலக்ட் ஆகி ப்ரோகிராம்ல கலந்துக்கிட்டேன். கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ்ல செமி ஃபைனல் வரைக்கும் வந்தேன்."

    KPY சான்ஸ் எப்படி கிடைச்சது?

    KPY சான்ஸ் எப்படி கிடைச்சது?

    "கிங்ஸ் ஆஃப் காமெடி ஷோவுக்கும் கலக்கப்போவது யாரு ஷோவுக்கும் ஒரே ப்ரொடியூசர் தான். கிங்ஸ் ஆஃப் காமெடில வொர்க் பண்ணின டெக்னீஷியன்ஸ் என்னைக் கூப்பிட்டாங்க. கலக்கப்போவது யாரு சீசன் 7 வருது. அதுல கலந்துக்கிறியானு கேட்டாங்க. அடுத்து KPY ஆடிஷன் போனேன். அதில் செலக்ட் ஆனேன். அப்புறம் என் கூட புவனேஷ்வரியை ஜோடியா போட்டாங்க."

    சிவபாலன் - புவனேஷ்வரி ஜோடி எப்படி உருவாச்சு?

    சிவபாலன் - புவனேஷ்வரி ஜோடி எப்படி உருவாச்சு?

    "புவனேஷ்வரி புதுக்கோட்டைல இருக்கிற லோக்கல் சேனல்ல ஆக்ட் பண்றவங்க. நான் வரும்போது KOC ஜூனியர்ஸ்ல அஷ்ரஃப்னு ஒரு பையன் இருந்தான். அவன் கூட சேர்ந்து பெர்ஃபார்ம் பண்ணலாம்னு இருந்தேன். இன்னும் மோனிகா, புவனேஷ்வரினு ரெண்டு பொண்ணுங்க பேர் இல்லாம இருந்தாங்க. அப்புறம் அஷ்ரஃப் கூட மோனிகாவும், என் கூட புவனேஷ்வரியும் சேர்த்துட்டாங்க. இந்த சீசன் முழுக்க நல்ல பேரா தான் இருந்தோம்."

    நான்காவது இடம் வந்தது பற்றி?

    நான்காவது இடம் வந்தது பற்றி?

    "கலக்கப்போவது யாரு ஒரு பெரிய ஸ்டேஜ். இந்த இடத்துக்கு வந்ததே என்னைப் பொறுத்தவரைக்கும் பெரிய விஷயம் தான். நிகழ்ச்சியின் கடைசிவரைக்கும் நான் என்னோட பெஸ்ட்டை கொடுத்தேன். நான்காவது இடம் வந்ததும் ஹேப்பி தான். அடுத்து கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்ல கலந்துக்கலாம்னு இருக்கேன். ஒரு ஷூட்டுக்கு போயிருக்கேன். அது அடுத்தவாரம் டெலிகாஸ்ட் ஆகும்."

    நீங்க பண்ணினதுல பிடிச்ச எபிஸோட்?

    நீங்க பண்ணினதுல பிடிச்ச எபிஸோட்?

    "முதல் ஆடிஷன்ல என்னோட பெர்ஃபார்மென்ஸ் பிடிக்கும். அரசியல்வாதி, சாமியார் மாதிரியெல்லாம் பண்ணினேன். அரசியல்வாதி ஆவது எப்படினு ஒரு ஸ்கிரிப்ட் பண்ணியிருப்போம். அப்புறம் எமதர்மன் வெச்சு ஒரு ஸ்கிரிப்ட் பண்ணியிருப்போம். செமி ஃபைனல்ல குப்பைக்காரன் ஸ்கிரிப்ட் பண்ணியிருப்போம். இதெல்லாம் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்."

    ஸ்கிரிப்ட் யார் ரெடி பண்றது?

    ஸ்கிரிப்ட் யார் ரெடி பண்றது?

    "எனக்கு துரை அண்ணா தான் ஒன்லைன் யோசிச்சு ஸ்கிரிப்ட் எழுதுவார். அதுல இன்னும் காமெடி சேர்க்கிறது 'கலக்கப்போவது யாரு சீசன் 1' டைட்டில் வின்னர் தனசேகர் அண்ணா. ரைமிங், டைமிங் கவுன்ட்டர்லாம் அண்ணா சூப்பரா அடிப்பார். ஆதி அண்ணன் ஷார்ட்டா ரெடி பண்ணுவார். நான் பெர்ஃபார்ம் பண்ணியிருந்தாலும் அதுக்கு பின்னாடி இருக்கிறது இவங்க உழைப்பில் உருவான ஸ்கிரிப்ட் தான்."

    ஜட்ஜ், தொகுப்பாளர்கள் பற்றி?

    ஜட்ஜ், தொகுப்பாளர்கள் பற்றி?

    பிரியங்கா : நான் கிங்ஸ் ஆஃப் காமெடில பண்ணும்போது பிரியங்கா அக்கா ஆங்கரா இருந்தாங்க. அவங்கள நல்லாவே தெரியும். KPY-ல அவங்க ஜட்ஜ். தெரிஞ்சவங்களே ஜட்ஜா இருந்ததால பயம் இல்லாம பண்ண முடிஞ்சது.

    மகேஷ் : மகேஷ் அண்ணா, நாம பண்ணும்போது அதுல என்ன குறையுதுன்னு கரெக்டா நோட் பண்ணுவார். ஸ்கிரிப்ட்னா எப்படி இருக்கும்னு அழகா பார்ப்பார்.

    பாலாஜி : பாலாஜி அண்ணாவுக்கு ரொம்ப பிடிச்சது கவுன்ட்டர். டக்கு டக்குனு ஒரு கவுன்ட்டர் போட்டா அண்ணனுக்கு ரொம்ப பிடிக்கும்.

    சேது : சேது அண்ணா வாய்ஸ் எக்ஸ்பெர்ட். மிமிக்ரியில அதிகமா பேசாத வாய்ஸ்லாம் கூட உண்ணிப்பா கவனிச்சு பார்ப்பார்.

    ஆர்த்தி : ஆர்த்தி அக்கா ஒரு ஸ்கிரிப்ட் எப்படி இருக்கணும், எப்படி ஆரம்பிச்சு எப்படி முடிக்கணும்னு சூப்பரா பார்ப்பாங்க.

    ஜாக்குலின் அக்காவும், ரக்‌ஷன் அண்ணாவும், ஸ்கிரிப்ட்ல நிறைய சப்போர்ட் பண்ணுவாங்க. அவங்க இருக்கிறதாலேயே நிறைய எபிஸோட்ஸை நல்லா காமெடியா பண்ண முடிஞ்சது.

    நிகழ்ச்சிக்கு வெளியே யாரெல்லாம் பாராட்டி இருக்காங்க?

    நிகழ்ச்சிக்கு வெளியே யாரெல்லாம் பாராட்டி இருக்காங்க?

    "ஷோ பார்த்துட்டு அப்பப்போ நிறைய பேர் போன் பண்ணுவாங்க. சீரியல் நடிகை சாண்ட்ரா அக்கா, ரோபோ சங்கர் அண்ணா, ஆர்ஜே சிந்து அக்கா எல்லோரும் பாராட்டியிருக்காங்க. கலக்கப்போவது யாரு சீனியர்ஸ் நிறைய பேரும் நான் பண்றது சூப்பரா இருக்குனு சொல்லியிருக்காங்க. ஸ்கூல், வெளியிலயும் நிறைய பேர் பாராட்டியிருக்காங்க."

    சக போட்டியாளர்கள் கூட ரிலேஷன்சிப் எப்படி?

    சக போட்டியாளர்கள் கூட ரிலேஷன்சிப் எப்படி?

    "கலக்கப்போவது யாரு செட்ல கன்டெஸ்டன்ட்ஸ் எல்லோரும் ஜாலியா பேசுவாங்க. எல்லோரும் என்னைவிடப் பெரியவங்க. அது புது எக்ஸ்பீரியன்ஸ். போட்டியாளர்களுக்குள்ள யாருமே ஈகோ பார்க்க மாட்டாங்க. யார் நல்லா பண்ணாலும் சூப்பரா பண்ணீங்கனு பாராட்டுவாங்க. ஸ்போர்ட்டிவா, செம ஜாலியா இருக்கும் செட்."

    ஷூட்டிங்கால் படிப்புக்கு ஏதும் பிரச்னை இல்லையா?

    ஷூட்டிங்கால் படிப்புக்கு ஏதும் பிரச்னை இல்லையா?

    "ஒன்பதாவது முடிஞ்சு பத்தாவது போகப்போறேன். எனக்கு ஐஏஎஸ் ஆகணும்னு தான் ஆசை. ரிகர்சல் கூப்பிடும்போது ஸ்கூல்ல எப்போவாவது எக்ஸாம் இருக்கும். அண்ணா நான் எக்ஸாம் எழுதிட்டு வந்துடுறேன்னு சொன்னா படிக்கிற பையன்னு சரின்னு சொல்லிடுவாங்க. ஷூட்னா ஸ்கூல்ல எக்ஸாமா இருந்தாலும் பெர்மிஷன் கொடுத்துடுவாங்க. ஜெயிச்சுட்டு வரணும்னு ஸ்கூல்லயும் நல்லா என்கரேஜ் பண்ணாங்க. அதுனால, படிப்பு, நிகழ்ச்சி ரெண்டுக்கும் பிரச்னை இல்லாம போச்சு."

    உங்க குடும்பம் பற்றி?

    உங்க குடும்பம் பற்றி?

    "எங்க அப்பா, அம்மா ரெண்டு பேருக்கும் சொந்த ஊர் காரைக்குடி. ரெண்டு பேருமே விவசாயக் குடும்பம். கல்யாணம் பண்ணி நான் பிறந்ததுக்கு அப்புறம் தான் சென்னைக்கு வந்தாங்களாம். அப்பா நிறைய வேலைக்கு போயும் எதுவும் பிடிக்கலை. இப்போ அம்பத்தூர்ல அயர்ன் பண்ற வேலை பார்க்கிறாங்க. அம்மா பி.காம் படிச்சிருக்காங்க. ஹவுஸ் வொய்ஃபா இருக்காங்க. ஒரு தங்கச்சி இருக்கா. தேர்ட் ஸ்டாண்டர்டு படிக்கிறா. லோயர் மிடில் கிளாஸ் ஃபேமிலி தான்."

    எப்படி மீடியா ஆர்வம் வந்தது?

    எப்படி மீடியா ஆர்வம் வந்தது?

    "'கலக்கப்போவது யாரு' சீசன் 1, 2 போய்க்கிட்டு இருக்கும்போதே நான் பார்த்திருக்கேன். டி.வி-யில் பார்க்கும்போது எனக்கும் ஆசையா இருக்கும். எல்லோரும் செமையா பண்றாங்களேன்னு தோணுச்சு. அப்போவே எனக்கும் உள்ளுக்குள்ள ஆசை வந்திடுச்சு. எனக்குள்ள திறமை இருக்குனு கண்டுபிடிச்சது எங்க அம்மா, எங்க அப்பா, விஜய் டிவி இப்படி யாருமே கிடையாது. ஒரே காரணம் என் ஸ்கூல் லதா மேம். ஆடிஷனுக்கு என்னை ரெஃபர் பண்ணது லதா மிஸ் தான்.

    யாருக்கு தாங்ஸ் சொல்லணும்?

    யாருக்கு தாங்ஸ் சொல்லணும்?

    "என் திறமையை உணர்த்திய லதா மிஸ். என்னை நல்லா பார்த்துக்கிற அப்பா, அம்மா. ப்ரொடியூசர் ஜெகன் அண்ணா, இளங்கோ அண்ணா, டைரக்டர் சிவா அண்ணா, தாம்ஸன் அண்ணா. காஸ்ட்யூம் டிஸைனர் பாவேந்தர் அண்ணன். என்னை வீட்டுல கொண்டுபோய் விடுறது, சாப்பாடு வாங்கித் தர்றது, அப்புறம் உடம்பு சரியில்லாதப்போ நல்லா கவனிச்சுக்கிற பாண்டியன் அண்ணன். கேஷியர் சதாம் அண்ணன்.. இவங்க எல்லோருக்கும் நன்றி சொல்லணும்."

    பெர்சனல் ஆசை?

    பெர்சனல் ஆசை?

    "கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ் ப்ரோகிராமுக்கு செலக்ட் ஆனதும், அம்மாகிட்டயே காசு வாங்கிட்டுப் போய் ஸ்வீட் வாங்கிட்டு வந்து கொடுத்தேன். அந்த சந்தோஷத்தை என்னால மறக்கவே முடியாது. ஆனா, நானே உழைச்சு வாங்கித் தரணும். அந்த நாள் வரும்னு காத்துட்டு இருக்கேன்."

    English summary
    Sivabalan - bhuvaneshwari pair got 4th place in 'Kalakka povathu yaaru' season 7. An exclusive interview with Sivabalan is here.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X