ஓஹோன்னு சென்னையை கலக்கும் குப்பை வண்டி பாட்டை உருவாக்கிய இசையமைப்பாளர் சச்சின் சுந்தர் பேட்டி!

சென்னை: குப்பை வண்டிக்கு ஒரு பாட்டா? என பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது சென்னை மாநகராட்சியின் புதிய குப்பை வண்டி பாடல்.

ஓஹோன்னு பாடல் ஆரம்பிக்க மக்கள் ஓடோடி வந்து குப்பை வண்டியில் குப்பைகளை பிரித்து கொட்டி செல்கின்றனர்.

பெரியவர்களை விட குழந்தைகளை இந்த பாடல் வெகுவாக கவர்ந்துள்ள நிலையில் குப்பைகளை நாங்கள் கொட்டுகிறோம் என ஓடோடி வந்து குப்பை கொட்ட ஆர்வம் காட்டுவதாக குப்பை வண்டிகளை ஓட்டி சென்னையை சிங்கார சென்னையாக மாற்றும் ஓட்டுநர்கள் இந்த பேட்டி வீடியோவில் தனியாக பேசியுள்ளனர்.

Kuppai Vandi Song composer Sachin Sundar Interview

இப்படியொரு சென்னை நம்ம ஊரு என்கிற அசத்தலான பாடலை ஆதியும் அந்தமுமாக இருந்து உருவாக்கியவர் இளம் இசையமைப்பாளர் சச்சின் சுந்தர்.

பெயரிலேயே சச்சினும் சுந்தரும் உள்ள நிலையில், இவர் மட்டும் சாதிக்காமல் எப்படி இருப்பார். அப்பாவின் தயவால் வந்த வாய்ப்பை பயன்படுத்தி அழகாக இசையமைத்து சச்சின் சுந்தர் போட்ட பாடல் சென்னை சிட்டி எங்கும் ஒலித்துக் கொண்டு இருக்கிறது.

சென்னை மாநகராட்சியில் குப்பைகளை சுத்தப்படுத்த ஏகப்பட்ட பேட்டரி கார்களை களமிறக்கி உள்ளது மாநில அரசு. அந்த வண்டிகளில் ஒலிக்கும் இந்த பாடலுக்கு சொந்தக்காரரான சச்சின் சுந்தர் பாடலை தனது சொந்தக் குரலில் அப்படியே பாடி தன்னை பற்றி விவரமாக பேசியுள்ள பேட்டி வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Kuppai Vandi Song composer Sachin Sundar Interview

மேலும், இந்த பேட்டியில் குப்பை வண்டிகள் மற்றும் அதனை ஓட்டும் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் குப்பை வண்டி பாடலையும் அதன் பலன் குறித்தும் அவ்வளவு அழகாக பேசியுள்ளனர்.

இசை மீது ஆர்வம் கொண்ட சச்சின் சுந்தருக்கு சுகாதாரத் துறையில் பணியாற்றி வரும் அவரது தந்தை மூலமாக இப்படியொரு பாடலை உருவாக்கும் வாய்ப்பு கிடக்கவே இந்த குப்பை வண்டி பாடலை அந்த இளம் இசையமைப்பாளர் உருவாக்கியதாக தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி சார்பில் குப்பை வண்டிகளில் கெத்தாக ஒலிக்கப்பட்டு வரும் இந்த பாடல் வெற்றியடைந்த நிலையில், மேலும், பல பாடல்களை இசையமைக்கும் வாய்ப்பும் தன்னை தேடி வருவதாக சச்சின் சுந்தர் கூறியுள்ள பேட்டியை மிஸ் பண்ணாமல் பாருங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X