twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'அடுத்த படத்தில் பெரிய ஹீரோ...' - குரங்கு பொம்மை இயக்குநரின் நம்பிக்கை!

    By Vignesh Selvaraj
    |

    'படம் முடிஞ்சதும் வர்ற எண்ட் டைட்டில் கார்டுல 'Written & Directed by Nithilan' னு ஓடும்போது தியேட்டர்ல கைதட்டல் பலமா இருந்துச்சு. அந்தக் கைதட்டலுக்குப் பின்னாடி 14 வருஷப் போராட்டம் இருக்கு.' என நிறைவாகப் பேசுகிறார் நித்திலன், 'குரங்கு பொம்மை' படத்தின் இயக்குநர்.

    'புதிர்', 'புன்னகைகள் விற்பனைக்கு' உள்ளிட்ட பல நல்ல திரைக்கதையம்சம் கொண்ட குறும்படங்களை இயக்கியவர் நித்திலன். விதார்த், டெல்மா, பாரதிராஜா ஆகியோர் நடிப்பில், 'குரங்கு பொம்மை' படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகிறார்.

    குறும்படங்களின் மூலம் பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்று முதல் படத்திலேயே தனது திரைக்கதையால், திரையுலகின் கவனத்தையும், பலரின் பாராட்டுகளையும் பெற்ற நித்திலனிடம் பேசினோம்.

    முதல் படத்திலேயே பாரதிராஜாவை நடிக்க வெச்சுட்டீங்க... அவர்தான் நடிக்கணும்னு எப்படி முடிவு பண்ணீங்க?

    முதல் படத்திலேயே பாரதிராஜாவை நடிக்க வெச்சுட்டீங்க... அவர்தான் நடிக்கணும்னு எப்படி முடிவு பண்ணீங்க?

    "ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணும்போதே இந்தக் கேரக்டருக்கு பாரதிராஜா சார் செட் ஆவார்னு முடிவு பண்ணிட்டோம். நான் இயக்கிய 'புன்னகை விற்பனைக்கு' குறும்படம் பார்த்துட்டு பாராட்டி இருக்கார். என் மேல ரொம்ப நம்பிக்கை வெச்சதால் கேட்டதும் நடிக்க ஒப்புக்கிட்டார்.

    பாரதிராஜா சாரை கரகர குரல்ல ஓர் ஆளுமையா பார்த்த நமக்கு இந்தப்படத்துல அதோட நேர்மாறான தோற்றத்தைக் காட்டணும். அதுக்கு ஏத்தமாதிரி பெர்ஃபெக்டா அவுட்புட் வந்துருக்கு. பாரதிராஜா சார் ஒரு நண்பன் மாதிரி இந்தப் படத்தில் நடிச்சுக் கொடுத்தார்.

    இந்தப் படத்தில் முக்கியமான விஷயம் என்னன்னா, நடிகர்கள் எல்லோரையும் இதுவரையும் பார்த்திராத வேற மாதிரி யதார்த்தமா காட்டணும். பாரதிராஜாவையும், குமரவேலையும் இதுக்கு முன்னாடி இப்படிப் பார்த்திருக்க மாட்டீங்க.

    தயாரிப்பாளர் தேனப்பனையும் நடிக்க வைக்கலாம்னு எப்படித் தோணுச்சு?

    தயாரிப்பாளர் தேனப்பனையும் நடிக்க வைக்கலாம்னு எப்படித் தோணுச்சு?

    "தேனப்பன் சார் நடிச்ச கேரக்டருக்கு ஆள் தேர்வு பண்ணவேயில்லை. பலாப்பழம் மாதிரி வெளியில் முரடாகவும், மனசு இனிமையாகவும் இருக்குற ஒருத்தர் இந்த கேரக்டருக்கு வேணும். அசிஸ்டென்ட் டைரக்டர் கல்கிதான் இந்த கேரக்டருக்கு தேனப்பன் சார் சரியா வருவார்னு சொன்னார். ஆனால், அவர் நடிக்க ஒப்புக்குவாரானு தெரியாமலேயே சரி அவர்கிட்ட கேக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம்.

    அவர்கிட்ட சொன்னதும், நமக்கு நடிப்பெல்லாம் சரியா வராதுனு சொல்லிட்டார். அப்புறம் கதையையும், அந்தக் கேரக்டருக்கான தேவையையும் சொல்லி ஓகே சொல்ல வெச்சோம். இதுவரைக்கும் நடிப்பு தொடர்பான எந்தப் பணியிலேயும் அவர் ஈடுபட்டதில்லைங்கிறதால் முதல் சில நாட்கள் அவரும் நடிக்க கஷ்டப்பட்டார். அப்புறம் நடிக்கத் தொடங்கி இப்போ படம் வந்ததுக்கு அப்புறம் அவரோட யதார்த்த நடிப்பு பலராலும் பாராட்டப்படுது."

    இசையமைப்பாளரைக் கன்னடத்துல இருந்து கொண்டு வந்திருக்கீங்களே..?

    இசையமைப்பாளரைக் கன்னடத்துல இருந்து கொண்டு வந்திருக்கீங்களே..?

    "கன்னட மியூசிக் டைரக்டரை யூஸ் பண்ணதால தமிழில் இருக்குற இசையமைப்பாளர்கள் எல்லாம் சரியா பண்றதில்லைனு அர்த்தம் இல்லை. அஜனீஷ் இசையமைத்த சில படங்கள் பார்த்திருக்கேன். Cult classic வகை இசையில் பிரமாதப்படுத்துவார். 'உல்லிடவரு கண்டந்தே' படத்தில் அவரோட இசை மிகச்சிறப்பா இருந்ததை நோட் பண்ணியிருக்கேன்.

    தயாரிப்பாளர் தரப்பிலிருந்து மியூசிக் டைரக்டர்ஸ் ஆப்ஷன் கொடுத்தாங்க. அந்தப் பட்டியலில் அஜனீஷ் பெயர் இருக்கவும், அவரையே தேர்ந்தெடுத்தோம். படத்தில் இசைக்கான ஸ்கோப்பைச் சொல்ல, அவரும் பெஸ்ட் மியூசிக்கை இந்தப் படத்துக்காகப் போட்டிருக்கார்."

    படத்தின் ஆர்ட் டைரக்‌ஷன் எல்லோராலும் பாராட்டப்பட்டதே..?

    படத்தின் ஆர்ட் டைரக்‌ஷன் எல்லோராலும் பாராட்டப்பட்டதே..?

    "ஆமா, வீரமணி கணேசன் ஆர்ட் டைரக்ட் பண்ணினார். பட்ஜெட்டுக்கு ஏற்றமாதிரி எளிமையா பண்ணினாலும் சிறப்பா இருக்கிறதுதான் அவரோட ஸ்பெஷாலிட்டி. குறைந்த செலவில், கதைக்கும் காட்சிக்கும் தேவையானதை மட்டும் நேர்த்தியா பண்ணிக் கொடுத்தார்.

    இடைஞ்சல் இல்லாம காட்சிக்குத் தக்கபடிதான் அவரோட ஆர்ட் வேலை இருக்கும். அவரோட கலை இயக்கமும் ரசிகர்களாலும், சினிமா ஆர்வலர்களாலும் கவனிக்கப்பட்டு பாராட்டப்படுது."

    தமிழின் தற்போதைய இயக்குநர்களில் உங்களுடைய ஃபேவரிட் யார்?

    தமிழின் தற்போதைய இயக்குநர்களில் உங்களுடைய ஃபேவரிட் யார்?

    "மணிரத்னம் சாருக்கு அடுத்து இப்போ படம் எடுத்துக்கிட்டு இருக்கவங்கள்ல வெற்றிமாறன், 'ஆரண்ய காண்டம்' தியாகராஜன் குமாரராஜா, 'காக்கா முட்டை' மணிகண்டன் ஆகியோர் மீது பெரும் நம்பிக்கை இருக்கு. தமிழ் சினிமாவில் இவங்களைத்தான் இப்போ தீவிரமா கவனிச்சிக்கிட்டு இருக்கேன்."

    திரைக்கதை பாணியில் யாரையாவது ஃபாலோ பண்றீங்களா..?

    திரைக்கதை பாணியில் யாரையாவது ஃபாலோ பண்றீங்களா..?

    "நான் லீனியர் வகையான திரைப்படங்கள் உலகின் பல மொழிகளில் வந்தவைதான். அதில் நான் கையாண்டிருக்கும் திரைக்கதையும் ஒரு வகை. அகிரா குரேசோவா படங்கள் பார்த்ததுதான் எனக்குள்ள இந்த விதையைப் போட்டிருக்கும்னு நினைக்கிறேன். ஆனாலும், குறிப்பிட்டுச் சொல்ற மாதிரி யாரையும் ஃபாலோ பண்ணலை. ஒவ்வொரு படத்திற்கும் அதற்கு ஏற்றமாதிரியான திரைக்கதையைத் தான் கையாளமுடியும்."

    படத்தில் சில லாஜிக் மிஸ்டேக்ஸ் உறுத்தலா இருந்ததைப் பற்றி..?

    படத்தில் சில லாஜிக் மிஸ்டேக்ஸ் உறுத்தலா இருந்ததைப் பற்றி..?

    "ஆமா, பார்வையாளர்கள் சொல்றதுல சிலவற்றை ஒப்புக்குறேன். யதார்த்தப் படத்தில் எளிதில் நம்பக்கூடிய காட்சிகளைத்தான் நாங்க அமைச்சிருக்கணும். ரசிகர்கள் நம்புறதுக்கு யோசிக்கிற சீன்களை முடிஞ்சவரை அவாய்ட் பண்ணினோம். இந்த மாதிரியான திரைக்கதையில் அது ரொம்பவே கஷ்டமான வேலை.

    சில காட்சிகள் படம் வேலை முடிஞ்சதும் பார்க்கும்போதே உறுத்தலாகத் தெரிஞ்சது. அது பெருசா தெரியாதுனு எல்லோரும் சொன்னதால அதைக் கண்டுக்காம விட்டுட்டோம். அடுத்த படத்தில் இதில் இன்னும் கவனமா இருக்கணும்னு இப்போ புரிஞ்சிக்கிட்டேன்."

    ஹீரோயின் தேர்வுக்கு மெனக்கெட்டீங்களா..?

    ஹீரோயின் தேர்வுக்கு மெனக்கெட்டீங்களா..?

    "அப்படியெல்லாம் இல்லை. இருக்கிற பட்ஜெட்டுக்கு முன்னணி நடிகைகளை நடிக்கவைக்க முடியாது. இந்தப் படத்திற்கு அது சரியாவும் வராது. ரெண்டு பேர் கலந்துக்கிட்ட ஆடிஷனில் டெல்மாவை செலக்ட் பண்ணினோம்."

    திரையுலகினரின் பாராட்டுகள்..?

    திரையுலகினரின் பாராட்டுகள்..?

    "ரசிகர்கள் பாராட்டுகள் எல்லா இடங்களில் இருந்தும் வந்துக்கிட்டு இருக்கு. இயக்குநர்கள் பாலா, ராம், வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல், ஏ.எல்.விஜய் இப்படி நிறைய பேர் போனில் கூப்பிட்டுப் பாராட்டினாங்க. படம் பார்த்தவர்களின் பாராட்டுதான் உழைப்புக்கான அங்கீகாரம்."

    ஒரு படம் வெளிவந்ததுக்கு அப்புறம் சினிமா மீதான உங்களது பார்வை எப்படி இருக்கு?

    ஒரு படம் வெளிவந்ததுக்கு அப்புறம் சினிமா மீதான உங்களது பார்வை எப்படி இருக்கு?

    "இந்தப் படத்தோட தயாரிப்பாளர் சினிமாவுக்குப் புதுசு. ஏ பி சி சென்டர், நடிகர்கள் பேக்கேஜுக்கான மார்க்கெட் என எந்த சினிமா மொழிகளும் அவங்களுக்குத் தெரியாது. அதனால் என்னோட ஸ்கிரிப்டை படமா மாத்துறதுல எந்தப் பிரச்னையும் இல்லாம இருந்தது.

    நான் நினைச்ச மாதிரியே படத்தை எடுக்க முடிஞ்சது. படம் ரிலீஸ்க்கு அப்புறம் ரசிகர்களுக்கான தேவை எது, எந்த நடிகர்களை நடிக்க வெச்சா எவ்வளவு மார்க்கெட், வாழ்வியலைச் சொல்லுதலில் எவ்வளவு பிரச்னைகள் இருக்கும், க்ரியேட்டிவிட்டியைச் சிதைக்கிறமாதிரி வரும் எதிர்வினைகள், இயக்குநரின் சுதந்திரத்தில் ஏற்படும் தலையீடு என எனக்கு நிறைய புரிஞ்சிருக்கு. சினிமா ஒவ்வொரு படத்துக்கும் புதுசா கத்துக் கொடுத்துக்கிட்டே இருக்கும்னு நம்புறேன்."

    அடுத்த படம் எந்தமாதிரி இருக்கும்?

    அடுத்த படம் எந்தமாதிரி இருக்கும்?

    "அடுத்து ரெண்டு ஸ்க்ரிப்ட் வெச்சுருக்கேன். என்னோட ஸ்டைலில் அது ஒரு கமர்ஷியல் படமாக இருக்கும். முன்னணி நடிகர்கள் ரெண்டு பேர் கிட்ட அப்ரோச் பண்ணியிருக்கோம். முடிவானதும் அறிவிப்போம். ரசிகர்களோட ஆதரவுதான் எப்போதும் தேவை."

    English summary
    'Kurangu Bommai' film was directed by Nithilan. Nithilan attracts the attention of the film industry and the praise of many people with his screenplay.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X