»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சுறுசுறுப்புடன் குறும்புத்தனமாகப் பேசும் ரசிகைகளை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று நடிகர் விஜய் தெரிவித்தார்.

திருச்சியில் விஜய் அளித்த பேட்டி:

கேள்வி: உங்களுக்கு இளம் பெண் ரசிகைகள் ஏராளமாமே, எப்படிப்பட்ட ரசிகைகளை உங்களுக்கு பிடிக்கும்?

பதில்: சுறுசுறுப்புடன், குறும்புத்தனம் பேசும் ரசிகை என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

கேள்வி: கன்னட நடிகர் ராஜ்குமாரை சந்தன வீரப்பன் கடத்திச் சென்று விட்டது குறித்து உங்கள் கருத்து?

பதில்: இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ராஜ்குமார் சீக்கிரமாக திரும்ப வேண்டும்.

இதுவே என் கருத்து.கேள்வி: நீங்கள் ஒரு அரசியல் கட்சியில் சேரப் போவதாக ஒரு வாரப் பத்திரிகையில் செய்தி வந்துள்ளதே?

பதில்: நானும் அதை படித்தேன். அப்படி எந்த ஐடியாவும் இல்லை.

கேள்வி: தேர்தல் நேரத்தில் எந்த கட்சியாவது பிரச்சாரம் செய்ய அழைத்தால் போவீர்களா?

பதில்: எந்த கட்சியிலிருந்தும் அழைப்பு வராது. அப்படியே வந்தாலும் நிச்சயம் போக மாட்டேன். அரசியலில் தலையிடும் எண்ணம்துளியும் இல்லை.

கேள்வி: விஜயகாந்த் போல ரசிகர் மன்ற அரசியலாவது செய்வீர்களா ?

பதில்: அந்த எண்ணம் இல்லை என்றார் விஜய்.

Read more about: acting, fans, film, vijay
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil