»   »  அக்கா குஷ்பு இந்தக் கால ஹீரோயின்கள் எல்லாம் நடிப்பை பற்றிக் கவலைப்படாமல் படுஜாலியாக, வெளிநாடுகளை சுற்றிப் பார்க்கும் ஆவலில் மட்டுமே நடிக்க வருகிறார்கள்என குஷ்பு புலம்பித் தள்ளியுள்ளார்.பெரிய நடிகர்கள் முதல் இந்தக்கால சின்னப் பசங்க வரை பெரிய ரவுண்டு அடித்துவிட்டு ஓய்ந்துள்ள குஷ்பு சமீபத்தில் சத்யராஜ் மகன் சிபிக்கு அம்மாவாக நடித்துஅசத்தினார்.இப்போது மிகப் பெரிய அஜக் மஜக் ஆக்டிங்கில் இறங்கியுள்ளார்.தன்னை விட பல மடங்கு வயதான சிரஞ்சீவியின் அக்காவாக ஸ்டாலின் படத்தில்நடிக்கிறார் குஷ்பு.இதற்காக ஹைதராபாத்தில் டேரா போட்டுள்ள குஷ்பு தனது மனம் திறந்து பலவிஷயங்களை (கற்பு மேட்டர் தவிர்த்து) செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.ஹீரோயினாக பல படங்களில் நடித்து விட்டேன். அதில் நான் பரம திருப்தியாகஉள்ளேன். இனிமேல் நல்ல நல்ல கேரக்டர்களில் மட்டும் நடிக்கலாம் என்றுகாத்திருந்தேன்.அப்போதுதான் ஸ்டாலின் படதில் சிரஞ்சீவியின் சகோதரியாக (அதாவது அக்காவாக)நடிக்க வாய்ப்பு வந்தது. நல்ல கேரக்டர் என்பதால் நடிக்கிறேன். அதற்காக நான் மற்றநடிகர்களுக்கு அம்மாவாக நடிப்பேன் என்று எதிர்பார்க்காதீர்கள்.அம்மா வேடத்தில் நடிக்க மாட்டேன். நல்ல கேரக்டராக இருக்க வேண்டும்.தெலுங்கில் பிரபல நடிகர்களான வெங்கடேஷ், நாகார்ஜுனா ஆகியோருக்குஅம்மாவாக நடிக்க வேண்டும் என்றால் நிச்சயம் முடியாது. அவர்களுக்கு ஜோடியாகநடித்துள்ள நான் அவர்களுக்கு தாயாக நடிக்க வேண்டும் என்றால் எப்படி?சரியாக இருக்காது இல்லையா. அதனால்தான் பொருத்தமான, நல்ல கேரக்டராகஇருந்தால் நடிப்பேன், சம்பளமும் குறையக் கூடாது என்று கூறியுள்ள குஷ்பு,இப்போதைய இளம் நடிகைகள் குறித்த தனது தீராத ஆதங்கத்தையும்வெளிப்படுத்தியுள்ளார்.இப்போதைய நடிகைகள் குறித்து என்னத்தச் சொல்றது. ஜாலியாக வருகிறார்கள்,ஹாயாக நடிக்கிறார்கள். பெரிதாக நடிக்கக் கூடத் தேவையில்லை. ஷூட்டிங்என்றாலே, பெய்டு ஹாலிடே மாதிரித்தான் இவர்களுக்கு.ஜம்முன்னு வெளிநாடு போகிறார்கள், பல வித டிரஸ்களில் ஆடிப்பாடுகிறார்கள்,சுற்றிப் பார்க்கிறார்கள். தயாரிப்பாளர்கள்தான் பாவம்.எங்க காலத்துல எல்லாம் (அது எந்தக் காலம்?) பாட்டு சீனை எடுப்பதாக இருந்தால்ஊட்டி, கொடைக்கானலுக்குத்தான் போவாங்க (அப்ப குஷ்பு பாட்டு எதையும்வெளிநாட்டில் எடுக்கவே இல்லையா!). இப்பல்லாம் அப்படியில்லை என்றுகூறியிருக்கிறார்.மேலும், எனது கணவர் தலைநகரம் படத்தில் நன்கு நடித்து ரசிகர்களிடம் நல்ல பெயர்எடுத்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தால் நடிக்க மாட்டேன்.முன்பெல்லாம் சினிமாதான் உலகம் என்று இருந்தேன். இப்போது எனது இருமகள்கள்தான் எனக்கு உலகமே. இதுவே சந்தோஷமாக உள்ளது என்றார் குஷ்பு.

அக்கா குஷ்பு இந்தக் கால ஹீரோயின்கள் எல்லாம் நடிப்பை பற்றிக் கவலைப்படாமல் படுஜாலியாக, வெளிநாடுகளை சுற்றிப் பார்க்கும் ஆவலில் மட்டுமே நடிக்க வருகிறார்கள்என குஷ்பு புலம்பித் தள்ளியுள்ளார்.பெரிய நடிகர்கள் முதல் இந்தக்கால சின்னப் பசங்க வரை பெரிய ரவுண்டு அடித்துவிட்டு ஓய்ந்துள்ள குஷ்பு சமீபத்தில் சத்யராஜ் மகன் சிபிக்கு அம்மாவாக நடித்துஅசத்தினார்.இப்போது மிகப் பெரிய அஜக் மஜக் ஆக்டிங்கில் இறங்கியுள்ளார்.தன்னை விட பல மடங்கு வயதான சிரஞ்சீவியின் அக்காவாக ஸ்டாலின் படத்தில்நடிக்கிறார் குஷ்பு.இதற்காக ஹைதராபாத்தில் டேரா போட்டுள்ள குஷ்பு தனது மனம் திறந்து பலவிஷயங்களை (கற்பு மேட்டர் தவிர்த்து) செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.ஹீரோயினாக பல படங்களில் நடித்து விட்டேன். அதில் நான் பரம திருப்தியாகஉள்ளேன். இனிமேல் நல்ல நல்ல கேரக்டர்களில் மட்டும் நடிக்கலாம் என்றுகாத்திருந்தேன்.அப்போதுதான் ஸ்டாலின் படதில் சிரஞ்சீவியின் சகோதரியாக (அதாவது அக்காவாக)நடிக்க வாய்ப்பு வந்தது. நல்ல கேரக்டர் என்பதால் நடிக்கிறேன். அதற்காக நான் மற்றநடிகர்களுக்கு அம்மாவாக நடிப்பேன் என்று எதிர்பார்க்காதீர்கள்.அம்மா வேடத்தில் நடிக்க மாட்டேன். நல்ல கேரக்டராக இருக்க வேண்டும்.தெலுங்கில் பிரபல நடிகர்களான வெங்கடேஷ், நாகார்ஜுனா ஆகியோருக்குஅம்மாவாக நடிக்க வேண்டும் என்றால் நிச்சயம் முடியாது. அவர்களுக்கு ஜோடியாகநடித்துள்ள நான் அவர்களுக்கு தாயாக நடிக்க வேண்டும் என்றால் எப்படி?சரியாக இருக்காது இல்லையா. அதனால்தான் பொருத்தமான, நல்ல கேரக்டராகஇருந்தால் நடிப்பேன், சம்பளமும் குறையக் கூடாது என்று கூறியுள்ள குஷ்பு,இப்போதைய இளம் நடிகைகள் குறித்த தனது தீராத ஆதங்கத்தையும்வெளிப்படுத்தியுள்ளார்.இப்போதைய நடிகைகள் குறித்து என்னத்தச் சொல்றது. ஜாலியாக வருகிறார்கள்,ஹாயாக நடிக்கிறார்கள். பெரிதாக நடிக்கக் கூடத் தேவையில்லை. ஷூட்டிங்என்றாலே, பெய்டு ஹாலிடே மாதிரித்தான் இவர்களுக்கு.ஜம்முன்னு வெளிநாடு போகிறார்கள், பல வித டிரஸ்களில் ஆடிப்பாடுகிறார்கள்,சுற்றிப் பார்க்கிறார்கள். தயாரிப்பாளர்கள்தான் பாவம்.எங்க காலத்துல எல்லாம் (அது எந்தக் காலம்?) பாட்டு சீனை எடுப்பதாக இருந்தால்ஊட்டி, கொடைக்கானலுக்குத்தான் போவாங்க (அப்ப குஷ்பு பாட்டு எதையும்வெளிநாட்டில் எடுக்கவே இல்லையா!). இப்பல்லாம் அப்படியில்லை என்றுகூறியிருக்கிறார்.மேலும், எனது கணவர் தலைநகரம் படத்தில் நன்கு நடித்து ரசிகர்களிடம் நல்ல பெயர்எடுத்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தால் நடிக்க மாட்டேன்.முன்பெல்லாம் சினிமாதான் உலகம் என்று இருந்தேன். இப்போது எனது இருமகள்கள்தான் எனக்கு உலகமே. இதுவே சந்தோஷமாக உள்ளது என்றார் குஷ்பு.

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்தக் கால ஹீரோயின்கள் எல்லாம் நடிப்பை பற்றிக் கவலைப்படாமல் படுஜாலியாக, வெளிநாடுகளை சுற்றிப் பார்க்கும் ஆவலில் மட்டுமே நடிக்க வருகிறார்கள்என குஷ்பு புலம்பித் தள்ளியுள்ளார்.

பெரிய நடிகர்கள் முதல் இந்தக்கால சின்னப் பசங்க வரை பெரிய ரவுண்டு அடித்துவிட்டு ஓய்ந்துள்ள குஷ்பு சமீபத்தில் சத்யராஜ் மகன் சிபிக்கு அம்மாவாக நடித்துஅசத்தினார்.

இப்போது மிகப் பெரிய அஜக் மஜக் ஆக்டிங்கில் இறங்கியுள்ளார்.

தன்னை விட பல மடங்கு வயதான சிரஞ்சீவியின் அக்காவாக ஸ்டாலின் படத்தில்நடிக்கிறார் குஷ்பு.

இதற்காக ஹைதராபாத்தில் டேரா போட்டுள்ள குஷ்பு தனது மனம் திறந்து பலவிஷயங்களை (கற்பு மேட்டர் தவிர்த்து) செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.


ஹீரோயினாக பல படங்களில் நடித்து விட்டேன். அதில் நான் பரம திருப்தியாகஉள்ளேன். இனிமேல் நல்ல நல்ல கேரக்டர்களில் மட்டும் நடிக்கலாம் என்றுகாத்திருந்தேன்.

அப்போதுதான் ஸ்டாலின் படதில் சிரஞ்சீவியின் சகோதரியாக (அதாவது அக்காவாக)நடிக்க வாய்ப்பு வந்தது. நல்ல கேரக்டர் என்பதால் நடிக்கிறேன். அதற்காக நான் மற்றநடிகர்களுக்கு அம்மாவாக நடிப்பேன் என்று எதிர்பார்க்காதீர்கள்.

அம்மா வேடத்தில் நடிக்க மாட்டேன். நல்ல கேரக்டராக இருக்க வேண்டும்.

தெலுங்கில் பிரபல நடிகர்களான வெங்கடேஷ், நாகார்ஜுனா ஆகியோருக்குஅம்மாவாக நடிக்க வேண்டும் என்றால் நிச்சயம் முடியாது. அவர்களுக்கு ஜோடியாகநடித்துள்ள நான் அவர்களுக்கு தாயாக நடிக்க வேண்டும் என்றால் எப்படி?

சரியாக இருக்காது இல்லையா. அதனால்தான் பொருத்தமான, நல்ல கேரக்டராகஇருந்தால் நடிப்பேன், சம்பளமும் குறையக் கூடாது என்று கூறியுள்ள குஷ்பு,

இப்போதைய இளம் நடிகைகள் குறித்த தனது தீராத ஆதங்கத்தையும்வெளிப்படுத்தியுள்ளார்.

இப்போதைய நடிகைகள் குறித்து என்னத்தச் சொல்றது. ஜாலியாக வருகிறார்கள்,ஹாயாக நடிக்கிறார்கள். பெரிதாக நடிக்கக் கூடத் தேவையில்லை. ஷூட்டிங்என்றாலே, பெய்டு ஹாலிடே மாதிரித்தான் இவர்களுக்கு.


ஜம்முன்னு வெளிநாடு போகிறார்கள், பல வித டிரஸ்களில் ஆடிப்பாடுகிறார்கள்,சுற்றிப் பார்க்கிறார்கள். தயாரிப்பாளர்கள்தான் பாவம்.

எங்க காலத்துல எல்லாம் (அது எந்தக் காலம்?) பாட்டு சீனை எடுப்பதாக இருந்தால்ஊட்டி, கொடைக்கானலுக்குத்தான் போவாங்க (அப்ப குஷ்பு பாட்டு எதையும்வெளிநாட்டில் எடுக்கவே இல்லையா!). இப்பல்லாம் அப்படியில்லை என்றுகூறியிருக்கிறார்.

மேலும், எனது கணவர் தலைநகரம் படத்தில் நன்கு நடித்து ரசிகர்களிடம் நல்ல பெயர்எடுத்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தால் நடிக்க மாட்டேன்.

முன்பெல்லாம் சினிமாதான் உலகம் என்று இருந்தேன். இப்போது எனது இருமகள்கள்தான் எனக்கு உலகமே. இதுவே சந்தோஷமாக உள்ளது என்றார் குஷ்பு.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil