சொகுசு கப்பலில் குஷ்பூ மகள் திருமணம்? மாப்பிள்ளை யார் தெரியுமா? கல்யாணத்தின் கலந்து கொண்ட பிரபலங்கள்

சென்னை: தமிழ் சினிமாவில் எவர்கிரீன் ஜோடியாக வலம் வரும் நடிகை குஷ்பூ - இயக்குனர் சுந்தர் சி தம்பதியினரின் மூத்த மகள் அவந்திகா மற்றும் ஷ்ரவன் சீனிவாசன் ஆகியோரின் திருமணம் நேற்று கோவா கடற்கரையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த டெஸ்டினேஷன் வெட்டிங் குறித்த பல சுவாரசியமான அந்தரங்க விபரங்களைச் சினிமா விமர்சகர் சேகுவேரா கூறியுள்ளார்.

கோவாவில் திரைபிரபலங்கள்: மிகவும் தனிப்பட்ட முறையில், நெருங்கிய வட்டாரங்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் திட்டமிடப்பட்ட இந்தத் திருமணத்தில், திரையுலகைச் சேர்ந்த பல டாப் விஐபிக்கள் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். நடிகைகள் ராதிகா சரத்குமார், சுகாசினி மணிரத்னம், பூர்ணிமா, த்ரிஷா ஆகியோர் கலந்து கொண்டனர். அதேபோல், தெலுங்குத் திரையுலகில் இருந்து மெகா ஸ்டார் சிரஞ்சீவி, நடிகர் வெங்கடேஷ், நாகார்ஜூன் மற்றும் பாலிவுட்டில் இருந்து பிரபல இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் கோவாவிற்கு நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர்.

Kushboo Sundar c daughter wedding

100 கோடி சொகுசுக் திருமணம்? இந்தத் திருமணத்தின் பிரம்மாண்டம் குறித்துப் பேசிய சினிமா விமர்சகர் சேகுவேரா, குஷ்பூ தன்னுடைய மகள் திருமணத்தை கோவா கடலில் இருக்கும் ஒரு பிரம்மாண்டமான சொகுசுக் கப்பலில் நடத்தி இருக்கிறார். அந்த கப்பலின் வாடகை மட்டுமே சுமார் 100 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் என்னென்ன உலகத்தரம் வாய்ந்த வசதிகள் மற்றும் சொகுசுகள் இருக்குமோ, அத்தனையும் அந்த ஆடம்பரக் கப்பலில் இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு பிரம்மாண்டக் கப்பலில் தான் குஷ்பூ மகள் திருமணம் நடத்தி இருக்கிறார்.

கோவாவில்: ஆரம்பத்தில் தன்னுடைய மகள் திருமணத்தை மிகவும் ரகசியமாக நடத்துவதாகவும், அந்தத் திருமணத்திற்கு வெறும் 25 பேர் தான் வருகிறார்கள் என்றும் சொல்லி இருந்தார்கள். சாதாரணமாக நம்ம நடுத்தரக் குடும்பங்களை எடுத்துக் கொண்டாலே சொந்தக்காரர்கள் 100 பேருக்கு மேல் இருப்பார்கள். அப்படியிருக்கையில் இவ்வளவு பெரிய விஐபி குடும்பத்தில் வெறும் 25 பேர் என்பது எல்லாம் கட்டுக்கதை. கோவாவில் திருமணத்தை வைப்பதற்கான முக்கியக் காரணம் என்னவென்றால், அங்கு ஏகப்பட்ட சொகுசு நட்சத்திர ஹோட்டல்கள் இருக்கின்றன, பல சர்வதேச வசதிகளும் வாய்ப்புகளும் இருக்கின்றன. இதனால் அங்கு வரும் டாப் நடிகர்களுக்கு எந்தவிதமான சங்கடமும், மீடியா தொந்தரவும் வராதபடி குஷ்பூ பக்கா பிளான் செய்து நடத்தியிருக்கிறார். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் என அரசியல் தலைவர்கள் முதல் ஒட்டுமொத்தத் திரைப்பிரபலங்கள் வரைக்கும் அவர் நேரில் சென்று பத்திரிகை வைத்திருந்தார்.

Kushboo Sundar c daughter wedding

மாப்பிள்ளை யார்? குஷ்புவின் மருமகன் ஷ்ரவன் சீனிவாசன் ஒரு பெரிய கப்பல் கேப்டனின் மகன் என்று சொல்லப்படுகிறது. அவரைப் பற்றி வெளியில் பெரியளவில் எந்தவிதமான தகவலும் இதுவரை இல்லை. ஆனால், மாப்பிள்ளை ஷ்ரவன் ஒரு கப்பல் கேப்டனின் மகன் எனறு சொல்லப்படுகிறது, கேப்டனின் மகன் என்பதால் தான், இந்தத் திருமணமே கோவாவில் கடல் நடுவே இருக்கும் ஒரு பிரம்மாண்டமான சொகுசுக் கப்பலில் இவ்வளவு பிரம்மாண்டமாக அரங்கேறியுள்ளது என்று சேகுவேரா அந்த வீடியோவில் பேசி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X