»   »  குஷ்புவால் புலம்பும் பெண் இயக்குனர் பெண்களின் கற்பு குறித்து நடிகை குஷ்பு விவகாரமாகப் பேசப் போய் கடைசியில் அது எனது படத்திற்கு பெரும் சிக்கலைக்கொடுத்து விட்டது என்று ஜூன் ஆர் பட இயக்குநர் ரேவதி வர்மா புலம்பி வருகிறார்.ஜோதிகா, குஷ்பு, சரிதா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜூன் ஆர். ரேவதி வர்மா என்ற மலையாள பெண்இயக்குனர் இப் படத்தை இயக்கியுள்ளார்.பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம், குஷ்பு விவகாரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. படத்தை வாங்க யாரும்முன் வராமல் போய்விட்டதால் கடைசியில் பெரும் பாடுபட்டு மிகவும் குறைந்த விலைக்கு தற்போது விற்கப்பட்டுள்ளது. இதனால்ரேவதி வர்மா நொந்து போயுள்ளார்.அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாத நிலையிலேயே அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். குஷ்பு ஒரு நல்லநடிகை. அதில் எந்த சந்தேகம் இல்லை. ஜூன் ஆர் படப்பிடிப்பின்போது எனக்கு முழுமையாக ஒத்துழைப்பு தந்தார்.பந்தா செய்யவில்லை. மற்ற 2 நடிகைகளை விட (ஜோதிகா, சரிதா) அவர் மிகவும் சிறந்தவர். படப்பிடிப்பு முடிந்த அன்றே,கம்பெனியின் உடைகளைத் திருப்பித் தந்து விட்டார். ஆனால் ஜோதிகாவும், சரிதாவும், இன்னும் உடைகளைத் திருப்பித்தரவில்லை.சம்பளத்திலும் கூட குஷ்பு பிரச்சினை செய்யவில்லை. தனக்குக் கிடைத்த சம்பளத்திலிருந்து ஒரு பகுதியை அனாதைஇல்லங்களுக்குக் கொடுத்தார்.இப்படி குஷ்புவுடன் பல விஷயங்களிலும் எனக்கு உடன்பாடு இருந்தாலும், பெண்களின் கற்பு நிலை குறித்து அவர் பேசியதில்துளியும் உடன்பாடு இல்லை. அவர் கூறியது மிகவும் தவறான கருத்தாகும்.எங்கே வேண்டுமானாலும் போகலாம், யாருடனும் படுக்கலாம் என்று கூறினால், பிறகு விலைமாதர்களுக்கு வேலை இல்லாமல்போய் விடும். குஷ்பு சொல்வது போல ஓரிரு சதவீதம் பேர்தான் இருப்பார்கள்.ஆனால் ஒட்டுமொத்தமாக அத்தனை பெண்களையும் குஷ்பு இவ்வாறு கூறியிருப்பது தவறானதாகும். நமக்கென்று கலாச்சாரம்,பண்பாடு இருக்கிறது. அதை மீறி விட முடியாது. என்ன பேசுகிறோம் என்பதை யோசித்துப் பேசியிருக்க வேண்டும்.தமிழக மக்கள் குஷ்புவை கடவுளுக்கு இணையாக வைத்திருந்தனர். கோவில் கட்டி வழிபட்டனர். அப்படிப்பட்ட செல்வாக்குடன்இருந்த குஷ்பு, இப்படிப் பேசி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தியிருக்கக் கூடாது.குஷ்புவின் பேச்சால் எனது படம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது உண்மைதான். எனது படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.நல்ல விலைக்குப் போகும் என எதிர்பார்த்திருந்தேன். ஆனால், குஷ்பு விவகாரத்தால், மிகவும் குறைந்த விலைக்கு விற்கவேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.இதற்கு குஷ்பு தான் முக்கியக் காரணம். தீபாவளிக்கே இந்தப் படம் வந்திருக்க வேண்டும். ஆனால் தற்போது பொங்கலுக்குத்தான் படம் வெளி வரும் என்றார் ரேவதி வர்மா.ஜூன் ஆர் படம் போல, குஷ்பு நடித்துள்ள மற்றொரு படமான வெற்றிவேல், சக்திவேல் படம் குறைந்த விலைக்குத்தான்விற்றுள்ளதாம். முதலில் அடிமாட்டு விலைக்குக் கேட்டுள்ளார்கள்.இருப்பினும், படத்தின் ஹீரோவான சத்யராஜ் தலையிட்டு வினியோகஸ்தர்களை சமாதானப்படுத்தியதால், திருப்திகரமானவிலைக்கு விற்று ரிலீஸ் ஆகி விட்டது.

குஷ்புவால் புலம்பும் பெண் இயக்குனர் பெண்களின் கற்பு குறித்து நடிகை குஷ்பு விவகாரமாகப் பேசப் போய் கடைசியில் அது எனது படத்திற்கு பெரும் சிக்கலைக்கொடுத்து விட்டது என்று ஜூன் ஆர் பட இயக்குநர் ரேவதி வர்மா புலம்பி வருகிறார்.ஜோதிகா, குஷ்பு, சரிதா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜூன் ஆர். ரேவதி வர்மா என்ற மலையாள பெண்இயக்குனர் இப் படத்தை இயக்கியுள்ளார்.பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம், குஷ்பு விவகாரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. படத்தை வாங்க யாரும்முன் வராமல் போய்விட்டதால் கடைசியில் பெரும் பாடுபட்டு மிகவும் குறைந்த விலைக்கு தற்போது விற்கப்பட்டுள்ளது. இதனால்ரேவதி வர்மா நொந்து போயுள்ளார்.அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாத நிலையிலேயே அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். குஷ்பு ஒரு நல்லநடிகை. அதில் எந்த சந்தேகம் இல்லை. ஜூன் ஆர் படப்பிடிப்பின்போது எனக்கு முழுமையாக ஒத்துழைப்பு தந்தார்.பந்தா செய்யவில்லை. மற்ற 2 நடிகைகளை விட (ஜோதிகா, சரிதா) அவர் மிகவும் சிறந்தவர். படப்பிடிப்பு முடிந்த அன்றே,கம்பெனியின் உடைகளைத் திருப்பித் தந்து விட்டார். ஆனால் ஜோதிகாவும், சரிதாவும், இன்னும் உடைகளைத் திருப்பித்தரவில்லை.சம்பளத்திலும் கூட குஷ்பு பிரச்சினை செய்யவில்லை. தனக்குக் கிடைத்த சம்பளத்திலிருந்து ஒரு பகுதியை அனாதைஇல்லங்களுக்குக் கொடுத்தார்.இப்படி குஷ்புவுடன் பல விஷயங்களிலும் எனக்கு உடன்பாடு இருந்தாலும், பெண்களின் கற்பு நிலை குறித்து அவர் பேசியதில்துளியும் உடன்பாடு இல்லை. அவர் கூறியது மிகவும் தவறான கருத்தாகும்.எங்கே வேண்டுமானாலும் போகலாம், யாருடனும் படுக்கலாம் என்று கூறினால், பிறகு விலைமாதர்களுக்கு வேலை இல்லாமல்போய் விடும். குஷ்பு சொல்வது போல ஓரிரு சதவீதம் பேர்தான் இருப்பார்கள்.ஆனால் ஒட்டுமொத்தமாக அத்தனை பெண்களையும் குஷ்பு இவ்வாறு கூறியிருப்பது தவறானதாகும். நமக்கென்று கலாச்சாரம்,பண்பாடு இருக்கிறது. அதை மீறி விட முடியாது. என்ன பேசுகிறோம் என்பதை யோசித்துப் பேசியிருக்க வேண்டும்.தமிழக மக்கள் குஷ்புவை கடவுளுக்கு இணையாக வைத்திருந்தனர். கோவில் கட்டி வழிபட்டனர். அப்படிப்பட்ட செல்வாக்குடன்இருந்த குஷ்பு, இப்படிப் பேசி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தியிருக்கக் கூடாது.குஷ்புவின் பேச்சால் எனது படம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது உண்மைதான். எனது படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.நல்ல விலைக்குப் போகும் என எதிர்பார்த்திருந்தேன். ஆனால், குஷ்பு விவகாரத்தால், மிகவும் குறைந்த விலைக்கு விற்கவேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.இதற்கு குஷ்பு தான் முக்கியக் காரணம். தீபாவளிக்கே இந்தப் படம் வந்திருக்க வேண்டும். ஆனால் தற்போது பொங்கலுக்குத்தான் படம் வெளி வரும் என்றார் ரேவதி வர்மா.ஜூன் ஆர் படம் போல, குஷ்பு நடித்துள்ள மற்றொரு படமான வெற்றிவேல், சக்திவேல் படம் குறைந்த விலைக்குத்தான்விற்றுள்ளதாம். முதலில் அடிமாட்டு விலைக்குக் கேட்டுள்ளார்கள்.இருப்பினும், படத்தின் ஹீரோவான சத்யராஜ் தலையிட்டு வினியோகஸ்தர்களை சமாதானப்படுத்தியதால், திருப்திகரமானவிலைக்கு விற்று ரிலீஸ் ஆகி விட்டது.

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெண்களின் கற்பு குறித்து நடிகை குஷ்பு விவகாரமாகப் பேசப் போய் கடைசியில் அது எனது படத்திற்கு பெரும் சிக்கலைக்கொடுத்து விட்டது என்று ஜூன் ஆர் பட இயக்குநர் ரேவதி வர்மா புலம்பி வருகிறார்.

ஜோதிகா, குஷ்பு, சரிதா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜூன் ஆர். ரேவதி வர்மா என்ற மலையாள பெண்இயக்குனர் இப் படத்தை இயக்கியுள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம், குஷ்பு விவகாரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. படத்தை வாங்க யாரும்முன் வராமல் போய்விட்டதால் கடைசியில் பெரும் பாடுபட்டு மிகவும் குறைந்த விலைக்கு தற்போது விற்கப்பட்டுள்ளது. இதனால்ரேவதி வர்மா நொந்து போயுள்ளார்.


அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாத நிலையிலேயே அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். குஷ்பு ஒரு நல்லநடிகை. அதில் எந்த சந்தேகம் இல்லை. ஜூன் ஆர் படப்பிடிப்பின்போது எனக்கு முழுமையாக ஒத்துழைப்பு தந்தார்.

பந்தா செய்யவில்லை. மற்ற 2 நடிகைகளை விட (ஜோதிகா, சரிதா) அவர் மிகவும் சிறந்தவர். படப்பிடிப்பு முடிந்த அன்றே,கம்பெனியின் உடைகளைத் திருப்பித் தந்து விட்டார். ஆனால் ஜோதிகாவும், சரிதாவும், இன்னும் உடைகளைத் திருப்பித்தரவில்லை.

சம்பளத்திலும் கூட குஷ்பு பிரச்சினை செய்யவில்லை. தனக்குக் கிடைத்த சம்பளத்திலிருந்து ஒரு பகுதியை அனாதைஇல்லங்களுக்குக் கொடுத்தார்.


இப்படி குஷ்புவுடன் பல விஷயங்களிலும் எனக்கு உடன்பாடு இருந்தாலும், பெண்களின் கற்பு நிலை குறித்து அவர் பேசியதில்துளியும் உடன்பாடு இல்லை. அவர் கூறியது மிகவும் தவறான கருத்தாகும்.

எங்கே வேண்டுமானாலும் போகலாம், யாருடனும் படுக்கலாம் என்று கூறினால், பிறகு விலைமாதர்களுக்கு வேலை இல்லாமல்போய் விடும். குஷ்பு சொல்வது போல ஓரிரு சதவீதம் பேர்தான் இருப்பார்கள்.

ஆனால் ஒட்டுமொத்தமாக அத்தனை பெண்களையும் குஷ்பு இவ்வாறு கூறியிருப்பது தவறானதாகும். நமக்கென்று கலாச்சாரம்,பண்பாடு இருக்கிறது. அதை மீறி விட முடியாது. என்ன பேசுகிறோம் என்பதை யோசித்துப் பேசியிருக்க வேண்டும்.


தமிழக மக்கள் குஷ்புவை கடவுளுக்கு இணையாக வைத்திருந்தனர். கோவில் கட்டி வழிபட்டனர். அப்படிப்பட்ட செல்வாக்குடன்இருந்த குஷ்பு, இப்படிப் பேசி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தியிருக்கக் கூடாது.

குஷ்புவின் பேச்சால் எனது படம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது உண்மைதான். எனது படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.நல்ல விலைக்குப் போகும் என எதிர்பார்த்திருந்தேன். ஆனால், குஷ்பு விவகாரத்தால், மிகவும் குறைந்த விலைக்கு விற்கவேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.

இதற்கு குஷ்பு தான் முக்கியக் காரணம். தீபாவளிக்கே இந்தப் படம் வந்திருக்க வேண்டும். ஆனால் தற்போது பொங்கலுக்குத்தான் படம் வெளி வரும் என்றார் ரேவதி வர்மா.


ஜூன் ஆர் படம் போல, குஷ்பு நடித்துள்ள மற்றொரு படமான வெற்றிவேல், சக்திவேல் படம் குறைந்த விலைக்குத்தான்விற்றுள்ளதாம். முதலில் அடிமாட்டு விலைக்குக் கேட்டுள்ளார்கள்.

இருப்பினும், படத்தின் ஹீரோவான சத்யராஜ் தலையிட்டு வினியோகஸ்தர்களை சமாதானப்படுத்தியதால், திருப்திகரமானவிலைக்கு விற்று ரிலீஸ் ஆகி விட்டது.


Read more about: director blames kushboo

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil