மர்மம் நிறைந்த மூடுபனி ஷோபா மரணம்.. சோகத்தில் இருந்து மீளமுடியாமல் வேதனையில் தவித்த அம்மா!
சென்னை: நடிகை ஷோபா மரணத்திற்கு பின் அவரது தாயார் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானதாக குட்டி பத்மினி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
80 களில் தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற நடிகையாக வலம் வந்தவர் ஷோபா தனது 3 வயதில் இருந்தே குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாக்களில் தன் நடிப்பை தொடங்கினார்.
18 வயதில் 17 படங்கள் நடித்துள்ள ஷோபனா, தேசிய விருது, மாநில விருது, ஊர்வசி விருது என பல விருதுகளை பெற்றுள்ளார்.

நடிகை ஷோபா: 1978 பாலு மகேந்திரா இயக்கத்தில் நிஜமும் நிழலும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார் ஷோபா. தொடர்ந்து பாலு மகேந்திராவின் பசி, முள்ளும் மலரும், அழியாத கோலங்கள், மூடி பனி போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்தார். பசி படத்தில் இவரின் அசாத்திய நடிப்பிற்கு தேசிய விருது கிடைத்தது. ஏற்கனவே திருமணமான பாலு மகேந்திராவின் மீது காதல் வயப்பட்டதால், பல விமர்சனங்களுக்கு ஆளானர் ஷோபா.
பாலு மகேந்திரா மீது காதல்: தன்னுடைய 17 வருட உலக வாழ்க்கையில் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு பல சாதனைகளை சோபா செய்து இருக்கிறார். தமிழின் மிகச்சிறந்த இயக்குனரான பாலு மகேந்திரா அவர்கள் ஷோபாவின் ஒவ்வொரு அசைவையும், அழகான நடிப்பையும் அழகாக காண்பித்திருந்தார். இவர்கள் இருவருடைய உறவு திருமணம் வரை நீண்டது.
திடீர் தற்கொலை: புகழின் உச்சியில் இருந்த ஷோபா 1980 ஆம் ஆண்டு திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். 18 வயதில்,இவருடைய தற்கொலை 18 புரியாத புதிராகவே இருந்தது. இவருடைய மரணம் ரசிகர்கள் மத்தியிலும் திரை உலகின் மத்தியிலும் பேரிழப்பாக இருந்தது. குறைந்த வயதில் யாராலும் செய்ய முடியாத பல சாதனைகளை ஷோபா செய்திருக்கிறார்.

மன அழுத்தத்தில்: இந்நிலையில் நடிகை குட்டி பத்மினி தனது யூடியூப் சேனலில், நடிகை ஷோபா குறித்து பேசி உள்ளார். அதில், ஷோபாவின் மரணத்தில் இருந்து மீளமுடியாத ஷோபாவின் அம்மா மனஅழுத்தத்திற்கு ஆளானார்கள். அவரது வீட்டில் ஒரு ஆள் உயரத்திற்கு ஷோபாவின் படத்தை வைத்து அதற்கு பூ போட்டு,செயின், மாலை என அனைத்தையும் போட்டு அழகுபார்த்து அந்த படத்திற்கு கீழ் சோறு, தண்ணீர் இல்லாமல் படுத்த படுக்கையாக கிடந்தார்கள்.
அவரால் மீண்டு வரமுடியவில்லை: அவர்கள் எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்ததால், அப்போ அப்போ அவர்களின் வீட்டுக்கு சென்று ஆறுதல் சொல்லுவேன். ஆனால் எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அவர்களிடம் இல்லாததால் எப்போதும் அழுதுக்கொண்டே இருந்தார். அவரால் அந்த இழப்பில் இருந்து மீண்டுவரவே முடியவில்லை என்று நடிகை குட்டி பத்மினி அந்த வீடியோவில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











