சாக்கடைல காலை விட்டாச்சு..கிளீன் பண்ணாம வர முடியாது.. வனிதா மேட்டரில் லட்சுமி ராமகிருஷ்ணன் சுரீர்!

By

சென்னை: சாக்கடைக்குள் காலை விட்டாகிவிட்டது. இனி அதை சரிசெய்யாமல் வரமுடியாது என்று நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன், கூறினார்.

Recommended Video

வீட்டு சண்டை வீதிக்கு வந்தது • Lakshmi யை ஓடவிட்ட வனிதா

பரபரப்பாகி இருக்கிறது, பிரபல நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம்! முறையாக விவாகரத்து வாங்காமல் பீட்டர் பால் செய்த இந்தத் திருமணம் பற்றிய சர்ச்சை, கொரோனாவை விட குப்பென பாய்ந்திருக்கிறது கோடம்பாக்கத்தில்!

இதில், நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணனை, நடிகை வனிதா அப்படி பேசிய அநாகரிக வார்த்தைகள், அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது, சமூக வலைதளவாசிகளை!

 இந்த விவகாரம் பற்றி லட்சுமி ராமகிருஷ்ணனிடம் பேசினோம். இந்த விஷயத்துக்குள்ள நீங்க எப்படி வந்தீங்க?

இந்த விவகாரம் பற்றி லட்சுமி ராமகிருஷ்ணனிடம் பேசினோம். இந்த விஷயத்துக்குள்ள நீங்க எப்படி வந்தீங்க?

என்ன செய்யறது, தேவையில்லாம சாக்கடைக்குள்ள காலை விட்டாச்சு.. இனி கிளின் பண்ணிட்டுதான் வெளியேறணும். இந்த விஷயத்துல முதல்ல நான் இன்வால்வ் ஆகவே இல்லை. பீட்டர்பால் மனைவி ஹெலன், 'எனக்கு குரல் கொடுக்க யாருமில்லை?ன்னு மீடியாவுல கதறினாங்க. அவர் சொன்னதுல நியாயம் இருந்தது. முறையா விவாகரத்து வாங்காம பீட்டர்பால், வனிதாவை கல்யாணம் பண்ணியிருக்கார். அதனால நான் ஒரு போஸ்ட் போட்டேன். அதுல முறையா விவாகரத்து வாங்காம இப்படி பண்ணலாமா?, படிச்சவங்களே இப்படி தப்பு பண்ணலாமா?ன்னு கேட்டேன். இதுல என்ன இருக்கு?

 இதுதான் காரணமா?

இதுதான் காரணமா?

ஆமா. என் ஷோவுல, கணவர்கள் பண்ற இந்த மாதிரி தவறுகளால, பல பெண்கள் நடுரோட்டுல நிற்கிறதைப் பார்த்திருக்கேன். குழந்தைகள் கஷ்டப்படற கொடுமையை கண்டிருக்கேன். அப்படியொரு கொடுமை இன்னொரு பெண்ணுக்கு நடக்கக் கூடாதுங்கற அக்கறையில, நான் அப்படி போஸ்ட் போட்டேன். டைவர்ஸ் வாங்கிட்டு முறையா பண்ணினா இதுல பிரச்னையே இல்லை. இதை வச்சு சில தமிழ்ப் பத்திரிகைகள், எனக்கும் வனிதாவுக்கும் பிரச்னைன்னு எழுதிட்டாங்க.

 பிறகுதான் பிரச்னை அதிகமாச்சா?

பிறகுதான் பிரச்னை அதிகமாச்சா?

இல்லை. இதுக்கு இடையில, ஒரு மீடியா மூலமா ஹெலன், எங்கிட்ட பேசணும்னு சொன்னாங்க. பேசினேன். எனக்கு உதவி பண்ணுங்கன்னு கேட்டார். வெறும் 8 ஆயிரம் ரூபா சம்பளம் வாங்கற ஹெலன், அதை வச்சுட்டு எப்படி குழந்தைகளை காப்பத்த முடியும், சொல்லுங்க? இன்னொரு பெண்ணின் கணவருக்கு ஊட்டிவிடற போட்டோவை, யூடியூப்ல போஸ்ட் பண்றாங்க வனிதா.. மானமுள்ள ஒரு பெண்ணால இதை தாங்க முடியுமா? அதனால இப்படிப்பட்ட ஒருத்தர் தேவையா?ன்னு ஹெலன்கிட்ட கேட்டேன். என் குழந்தைகளுக்கு அப்பா வேணும்னு அவர் சொன்னார். சரி, அப்படின்னா சட்டரீதியா என்ன உதவி வேணுமோ, நான் பண்றேன்னு சொன்னேன்.

 வனிதா எப்படி..

வனிதா எப்படி..

சொல்றேன்.. இதுபற்றி பேட்டி கொடுக்கும்போது, பீட்டர்பால் தன் முதல் மனைவியை நோகடிக்கிறதை 'ஷிட்'டுனு சொன்னேன். இப்படிபட்டவரை 'ஷிட்'டுன்னு சொல்லாம, வெரி குட்டுன்னா சொல்வாங்க? இதை பிடிச்சுட்டார் வனிதா. இதுக்கு இடையில ஒரு மீடியாவுல இருந்து லைவ்ல பேச முடியுமா?ன்னு கேட்டாங்க. ஹெலன் சைடு மட்டும் கேட்டீங்கள்ல, என் பக்கம் உள்ள நியாயத்தையும் கேளுங்கன்னு வனிதா சொன்னதா, அந்த மீடியாவுல சொன்னாங்க. அதுவும் நியாயமா இருந்தது. சரின்னு சொன்னேன்.

 நடிகை கஸ்தூரி இதுல எப்படி வந்தாங்க?

நடிகை கஸ்தூரி இதுல எப்படி வந்தாங்க?

அந்த லைவ் பேட்டியில நான் பொறுமையாதான் பேசினேன். இதை விட பொறுமையா எந்த பெண்ணாலயும் இருக்க முடியாது. ஒரு சமூகத்துல இருக்கிற சட்ட திட்டம் தாண்டி, திருமணத்துக்கு வெளியில இருக்கிற உறவை இப்படி கொண்டாடறது வெட்கக் கேடான விஷயம். அதனால எலிசபெத் ஹெலனுக்கு சப்போர்ட் பண்ணதான் பல பேர் வந்தாங்க. நடிகை கஸ்தூரியும் அதுக்குதான் வந்தாங்க. ஒழுக்கமா வாழற எந்த பெண்ணும், எலிசபெத்துக்கு சப்போர்ட்தான் பண்ணுவாங்க. அதனால என்னைத் தப்புத்தப்பா அவங்க பேசறதை பார்த்துதான் கஸ்தூரியும் தயாரிப்பாளர் ரவீந்திரனும் குரல் கொடுத்தாங்க. அவங்களையும் அசிங்கமாக பேசினாங்க வனிதா. ஒழுக்கம்னா என்னன்னு தெரியுமா, அவங்களுக்கு?

 அடுத்து என்ன பண்ண போறீங்க?

அடுத்து என்ன பண்ண போறீங்க?

அதை இப்போ சொல்லப் போறதில்லை. என்ன பண்றோம்னு செயல்ல காட்டறோம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X