»   »  நான் அப்பாவி: லஷ்மி ராய் கண்ணீர்!

நான் அப்பாவி: லஷ்மி ராய் கண்ணீர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

எனக்கும், விபச்சார புரோக்கரான உதவி இயக்குநர் நிரஞ்சனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் அப்பாவி. விபச்சாரம் செய்து பிழைக்கவேண்டிய அவசியம் இல்லை, நடிகை என்றாலே விபச்சாரியாகத்தான் இருக்க வேண்டுமா என்று கண்ணீர் மல்க புலம்பியுள்ளார் லஷ்மி ராய்.

சென்னையில் இப்போது விபச்சார கும்பல் பிடிக்கும் காலம். கன்னட பிரசாத்திலிருந்து தொடங்கி வரிசையாக விபச்சாரக் கும்பல்கள் பிடிபட்டுவருகின்றன.

சென்னை நாகேஸ்வரராவ் பூங்கா பகுதியில் நடிகைகளின் ஆல்பத்தைக் கையில் வைத்துக் கொண்டு ஆண்களை விபச்சாரத்திற்கு அழைத்து வந்தசினிமா உதவி இயக்குநர் நிரஞ்சன் என்பவரையும், விபச்சார அழகியும், துணை நடிகையுமான செல்வியையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட புகைப்பட ஆல்பத்தில் நடிகைகள் லஷ்மி ராய், ரேகாஸ்ரீ உள்ளிட்ட பலரின் படங்களும்,படங்களுக்குப் பின்புறம் தொலைபேசி எண்கள், அவர்களின் ரேட் ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து இந்தக் கும்பலுக்கும் லஷ்மி ராய்க்கும் இடையே தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந் நிலையில் தனது படம் விபச்சாரக் கும்பலிடம் இருப்பதாக வந்த செய்தியால், லஷ்மி ராய் அதிர்ந்துள்ளார். பெங்களூரில், கன்னடப் படஷூட்டிங்குக்காக வந்துள்ள லஷ்மி ராய் கூறுகையில்,

எனது குடும்பம் மிகப் பெரிய வசதியான குடும்பம், எனது தந்தைக்கு கர்நாடக மாநிலம் பெல்காமில் ஏகப்பட்ட வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.

நான் நடித்துத்ததான் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றில்லை. நமக்கு இருக்கிற வசதிக்கு நடிக்கத்தான் வேண்டுமா என்று எனது தந்தைஅடிக்கடி கேட்பார்.

அப்படிப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த நான் விபச்சாரியா? நான் விபச்சாரத்தில் ஈடுபடுவேனா? இப்படி ஒரு கேவலமான தொழில் செய்து பணம்பார்க்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

நடிகை என்றாலே விபச்சாரிதானா? அவர்களை எப்படி வேண்டுமானாலும் பார்ப்பது, நினைப்பது, பேசுவது என்பதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. அவர்கள் வீட்டுப் பெண்ணை இதுபோல அசிங்கமாக பார்ப்பார்களா?

அந்த நபர் நிரஞ்சன் யார் என்றே எனக்குத் தெரியவில்லை. எனது பழைய புகைப்படத்தை வைத்துக் கொண்டு மோசடியாக செயல்பட்டுள்ளார்.நான் அப்பாவி, எனது பெயரை களங்கப்படுத்த யாரோ செய்த சதி இது என்று கண்ணீர் மல்க புலம்பியுள்ளார் லஷ்மி ராய்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil