எனது வாழ்க்கையை அழித்து விட்டார் லாரா-ஸ்வேதா குமுறல்

முதல் மனைவி இருக்கையில் 2வது மனைவிக்கு அலைபாயும் பிரபலங்களின் வரிசையில் லேட்டஸ்டாக இணைந்திருப்பவர் மகேஷ்பூபதி. தனது காதல் மனைவி ஸ்வேதா ஜெய்சங்கரை விவகாரத்து செய்து விட்டு இப்போது நடிகை லாரா தத்தாவை மணக்கப் போகிறார் மகேஷ்.
இந்த நிலையில் லாராவால்தான் தனது திருமண வாழ்க்கை சீரழிந்து போனதாக குமுறியுள்ளார் ஸ்வேதா. இதுகுறித்து அவர் கூறுகையில் மகேஷ் என்னை ஏமாற்றி, மோசடி செய்து விட்டார். லாராவுடனான தனது காதலை மறைத்து என்னை நேசிப்பது போல நடித்து வந்தார்.
லாராவுடன் ஊர் சுற்றிக் கொண்டு என்னுடனும் குடும்பம் நடத்தி வந்தார். லாரா எனது வாழ்க்கையின் குறுக்கே வந்த பிறகுதான் மகேஷ் பூபதி என்னை விட்டு விலகத் தொடங்கினார் என்று கூறியுள்ளார் ஸ்வேதா.
ஆனால் இதை லாரா மறுத்துள்ளார். ஸ்வேதாவை விவாகரத்து செய்த பின்னர் தான் என்னைக் காதலிக்க ஆரம்பித்தார் மகேஷ் பூபதி. எனவே எனக்கும், ஸ்வேதா-பூபதி பிரி்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளார் லாரா.
தனக்கும் மகேஷ் பூபதிக்கும் இடையே நடந்த நிச்சயதார்த்தத்தை செப்டம்பர் 19ம் தேதி அறிவித்தார் லாரா. பூபதியும் இதுகுறித்து தனது ட்விட்டர் தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். இருப்பினும் திருமண தேதி இதுவரை முடிவு செய்யப்படவில்லையாம்.
நியூயார்க்கில் ஒரு கேன்டில் லைட் டின்னரில் வைத்து தனது காதலை பூபதி சொன்னதாகவும், தனக்கு ஒரு மோதிரத்தை பரிசாக அளித்ததாகவும் புளகாங்கிதப்பட்டுள்ளார் லாரா.


Click it and Unblock the Notifications