»   »  சந்திப்போமா?

சந்திப்போமா?

Subscribe to Oneindia Tamil

அநாகரிகமில்லாத செக்ஸ் தேவையான ஒன்று என்று நடிகை லாரா தத்தா அதிரடியாகக் கூறியுள்ளார்.

ஸ்காட்லாந்தில் லாரா என்றால் புகழ்பெற்றவர் என்று அர்த்தமாம். பின்னாளில் உலக அழகியாகி புகழ்பெறப்போகிறார் என்பது முன்பே தெரிந்ததோ என்னமோ, பொருத்தமாக அவரது பெற்றோர் பெயர்வைத்துள்ளார்கள்.

பாலிவுட்டில் உடை களைப்புப் போட்டி நடிகைகள் மத்தியில் முக்கிய இடம் பிடித்துளள்ள லாரா தத்தா, அரசாட்சிபடத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் தரிசனம் காட்டினார்.

வழக்கமான அர்ஜூன் படம் என்பதால், தியேட்டர்களை விட்டு படம் இரு வாரங்களிலேயே தூக்கப்பட்டுவிட்டது.இந்த இரு வாரம் கூட ஓடியதற்கு லாராவின் கவர்ச்சி தரிசனம் தான் முக்கிய காரணம் என்கிறார்கள்.

படம் ஓடுதோ இல்லையோ, தனக்கு வர வேண்டிய பாக்கியை வசூலித்துக் கொண்டு மும்பைக்குப் பறந்து விட்டார்லாரா. காரணம் அங்கு ஏகப்பட்ட கமிட்மெண்ட்ஸ்.

தமிழ் ரசிகர்களைத் தவிக்கவிட்டு, மும்பை செல்லும்முன் அவர் அளித்த பேட்டியில் இருந்து:

நடிகையாகிவிட்டதால் குடும்பத்தாருடன் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை. அதிகாலையில் எழுந்து வானம்சோம்பல் முறிப்பதைப் பார்க்கப் பிடிக்கும். பரதநாட்டியம் பிடிக்கும். இப்போது கதக்கும் பிடிக்கிறது.

வாரம் ஒரு தடவை புதிய ஷூ வாங்குவேன். நிறைய சினிமா பார்ப்பேன். அண்மையில் பேஷன் ஆப் தி கிறிஸ்ட்படம் பார்த்து அழுதுவிட்டேன்.

என்னிடம் செக்ஸியான விஷயம் எது என்று பத்திரிக்கைகளிலும், டிவியிலும் விவாதிப்பதை பார்க்கவும் படிக்கவும்ரொம்பப் பிடிக்கும். பல நாடுகளை சுற்றி வந்து உலகத்தை நன்கு அறிந்த ஆண்மகனை எனக்கு ரொம்பப்பிடிக்கும்.

செக்ஸ் நம் எல்லாருக்கும் தேவையான ஒன்று. அதில் அநாகரிகம் மட்டும் கலந்து விடக்கூடாது.

பெண்களைப் பற்றி - மோசமாக விமர்சனம் செய்பவர்களை எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. அபார்ஷன் செய்தபெண்களைப் பற்றி யார் மோசமாக விமர்சித்தாலும் எனக்கு பயங்கர கோபம் வரும் என்றார் அதிரடியாய்

ஏன் லாரா?

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil