விஜயின் 30 நாள் ஆட்சி எப்படி? எது சொன்னாலும் சென்சிடிவ் ஆகிடும்.. நழுவிய லதா ரஜினிகாந்த்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், அண்மையில் 'மக்கள் மேடை' என்ற பெயரில் புதிய மக்கள் இயக்கம் ஒன்றை தொடங்கி சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தையே தன் திரும்பிப் பார்க்க வைத்தார். லதா ரஜினிகாந்த் அரசியல் என்ட்ரி கொடுக்கப் போகிறாரா என்ற விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பிரபல மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேவின் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள அதிரடி பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக மாறி உள்ளது.
பதவி மேல் ஆசை இல்லை: எனக்கு எந்தவொரு அரசியல் பதவி மீதும் துளியும் விருப்பமோ, ஆசையோ கிடையாது. பதவிகளைத் தாண்டி, இந்தச் சமூகத்தில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி, ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்குவது மட்டும்தான் என்னுடைய 'மக்கள் மேடை' இயக்கத்தின் முக்கிய நோக்கம்.
இந்த இயக்கத்தின் எதிர்காலத்தை அடுத்த தலைமுறையினர் தீர்மானிக்கட்டும். அவர்களே இந்த முயற்சியை முன்னெடுத்து செல்ல வேண்டும், நான் ஒரு வழிகாட்டியாக மட்டுமே இருப்பேன் என்றார்.

முதலமைச்சர் விஜய் ஆட்சி எப்படி?: அதைத் தொடர்ந்து ரங்கராஜ் பாண்டே, தமிழக முதலமைச்சர் விஜய்யின் இந்த 30 நாள் கவர்மெண்ட் எப்படி இருக்கிறது?" என்று கேள்வி எழுப்பினார். இதற்கு லதா ரஜினிகாந்த் மிகவும் சாணக்கியத்தனமாக பதிலளித்தார். இந்தக் கேள்விக்கு நான் இப்போதைக்கு எதையும் சொல்ல விரும்பவில்லை. இன்று இருக்கும் சூழ்நிலையில், அவரோடு நான் இருக்கிறேன். நான் எதைச் சொன்னாலும் அது மிகப்பெரிய அளவில் 'சென்சிடிவ்' ஆக மாறிவிடும். ஒரு சாதாரணப் பிரஜையாகத் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை நான் கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு அரசைப் பற்றி என்னால் எந்தவொரு கருத்தும் சொல்ல முடியாது என்று கூறி புன்னகையுடன் 'நோ கமெண்ட்ஸ்' என்றார்.
'சிங்கப்பெண்' திட்டம்: தொடர்ந்து, தமிழக அரசின் 'சிங்கப்பெண்' பாதுகாப்பு படை குறித்து பேசிய லதா, இது மிக முக்கியமான, அதே நேரத்தில் இன்றைய காலக்கட்டத்திற்கு மிகவும் தேவையான ஒரு திட்டம். பெண்களுக்காக ஒரு அரசாங்கம் இதை முன்னெடுத்துச் செய்வது உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
ஏனெனில், இன்று இருக்கும் சூழலில் பெண்களுக்குத் தெருத்தெருவாகப் பாதுகாப்பு தேவைப்படுகிறது. இதில் நான் சொல்ல விரும்பும் ஒரே ஒரு விஷயம் என்னவென்றால், தற்போது பெண்களுக்கான பாதுகாப்புப் ரோந்து வாகனங்கள் மிகவும் குறைவாக இருக்கின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் இந்த பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை அரசாங்கம் இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வுமிக்க கோரிக்கையையும் முன்வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications