Leader: சம்பளத்துக்காக நான் லீடர் படத்தில் கமிட் ஆனேனா? உடைத்து பேசிய இயக்குநர் துரை செந்தில்குமார்
சென்னை: நடிகர் லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக நடித்து, ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகவுள்ள படம் லீடர். இந்த படத்தை இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்கி உள்ளார். படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் அளவுக்கு படத்தின் டீசர் மற்றும் டிரைலர் என அனைத்தும் அமைந்ததால் ரசிகர்கள் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
அதுவும் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கம் என்பதால் படத்தின் மீது தனி நம்பிக்கையே ஏற்பட்டுள்ளது. படத்தின் புரோமோசனுக்காக அவர் அளித்த சமீபத்திய பேட்டியில், நான் இந்த படத்தில் கமிட் ஆக காரணம் சம்பளமும் ஒரு காரணம் தான். ஆனால் சம்பளம் மட்டுமே காரணம் அல்ல. மாறாக இந்த படத்தில் நான் நினைத்தபடி இயக்கம் செய்ய முடியும். மேலும் புதியதாக ஒரு விஷயத்தை முயற்சி செய்ய முடியும். அப்படி இருக்கும்போது, ஒரு இயக்குநராக நான் எப்படி இந்த வாய்ப்பை தவறவிட முடியும்” என்று யாருமே எதிர்பார்க்காத பதிலை அளித்து அசத்தினார். சிவகார்த்திகேயன், சூரி போன்ற தமிழ் சினிமாவில் பலரும் காமெடியன்களாக நினைத்துக் கொண்டு இருந்தவர்களை கதாநாயகனாக மாற்றியதில் இயக்குநர் துரை செந்தில்குமாரின் படங்கள் மிகவும் முக்கியமானவை.

லீடர் படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரைலர் வெளியிட்டு விழாவில் படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான நடிகர் லெஜண்ட் சரவணன் பேசும்போது படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, படத்தின் ஃபைனல் எடிட் முடிந்ததும் படத்தை பார்த்தவர் இசையமைப்பாளர் ஜிப்ரான் தான். அவர் படம் பார்த்துவிட்டு சுமார் 30 நிமிடங்கள் துரை செந்தில்குமாருக்கு போன் செய்து பாராட்டியுள்ளார். படத்தில் குத்து பாடல் எதுவும் இல்லை, ஆனால் படத்தின் கதையுடன் நகரும் பாடல்களை அழகாகவும் பின்னணி இசையை மிகவும் அழகாகவும் கொடுத்துள்ளார் ஜிப்ரான்.
கடும் குளிரிலும்: ஜார்ஜியாவில் -14 டிகிரியில் நாங்கள் இரண்டு வாரங்கள் வேலை செய்தோம், கடும் உறைபனியில் மொத்த படக்குழுவினரும் சிரமப்பட்டு உருவாக்கிய அந்த காட்சி மிகவும் சிறப்பாக வந்துள்ளது. கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி படமாக்கும் போது எனக்கு அடிபட்டுவிட்டது. நடக்கவே சிரமமாக மாறிவிட்டது. அன்றைய தினம் நடிக்க முடியுமா என்ற கேள்வி கூட எனக்குள் இருந்தது. ஆனால் இயக்குநர் ஆக்ஷன் என்று சொன்னதும் எங்கிருந்துதான் எனக்கு அந்த எனர்ஜி வந்ததோ என்று தெரியவில்லை. கடவுளின் ஆசீர்வாதத்தால் அந்த காட்சியை நடித்து முடித்தேன்.
வெற்றி மாறன் - தனுஷ்: படத்தைப் பார்த்த வெற்றிமாறன் சாரும், தனுஷ் சாரும் படம் பிரமாதமாக இருக்கிறது என்றும், பிரமாண்டமாக இருக்கிறது என்றும் பாராட்டி உள்ளனர். அவர்கள் இருவரும் படத்தை பாராட்டிய பின்னர் ஏற்கனவே இருந்த நம்பிக்கை, எனக்கும் எனது படக்குழுவுக்கும் அதிகமாகி உள்ளது. ஜெய்லர் , விக்ரம் மற்றும் லியோ மாதிரி மிகப்பெரிய வெற்றிப் படமாக இது அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் அதற்கான தகுதிகள் அனைத்தும் இந்த படத்திற்கு உள்ளது.


Click it and Unblock the Notifications











