பட்டினப்பாக்கம் ஹவுசிங் போர்டில் வீடு..12 படிக்கும் போது அப்பா இறந்தார்.. மனம் திறந்த விக்னேஷ் சிவன்
சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள 'எல்.ஐ.கே' (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) திரைப்படம் ஏப்ரல் 10ந் தேதி உலகம் முழுவதும் வெளியாக 'உள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்து இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி,யோகி பாபு, சீமான், கௌரி ஜி கிஷன், ஷா ரா, மிஷ்கின் மற்றும் ஆனந்தராஜ் ஆகியோர் முக்கியமான ரோலில் நடித்துள்ளனர்.
படம் வெளியாக இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், விக்னேஷ் சிவன் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், என் அம்மா இன்ஸ்பெக்டர் அவர் தான் நான் சினிமாவில் வரவேண்டும் என ஆசைப்பட்டார். பட்டினப்பாக்கத்தில் இருக்கும் ஹவுசிங் போர்டில் தான் நான் வளர்ந்தேன். நான் 12வது படித்துக்கொண்டு இருந்த போது, என் அப்பா இறந்துவிட்டார். அப்பாவிற்கு ஐபிஎஸ் அல்லது இன்ஜினியராக ஆக்க வேண்டும் என்று ஆசை. ஆனால், அப்பா இறந்த பிறகு நிலைமையே மாறி சினிமாவில் உதவி இயக்குனரானேன்.

விக்னேஷ் சிவன்: நான் போடா போடி படத்தில் கமிட்டான போது பிரபு சாலமன் அவரிடம் உதவி இயக்குநராக இருந்தார். போடா போடி கதையை சொல்லுவதற்காக கம்பேனி கம்பேனியாக ஏறி இறங்கினேன், யாரும் என்னை மதிக்கவே இல்லை. கதையை போட்டோவாக வைத்து CDயாக தயார் செய்து பல கம்பேனிகளில் கொடுத்து, கதை பிடித்து இருந்தால் சொல்லுங்க, நான் மொத்த கதையை சொல்கிறேன் என்று கம்பேனி கம்பேனியா CDயை கொடுத்தேன். அதை பார்த்துவிட்டு என்னை கதை சொல்ல அழைத்தார்கள். கதையை கேட்டதும், ஒகே என்று சொல்லி கையில் ரூ 25 ஆயிரத்தை அட்வான்சாக கொடுத்தார்கள். அந்த நேரத்தில் ஏதையோ சாதித்தது போல நான் உணர்ந்தேன். உடனே அம்மாவை வேலைக்கு போக வேண்டாம் என சொல்லி விஆர்எஸ் வாங்க சொல்லிவிட்டேன் கடைசியில் படம் ஆரம்பிக் தாமதமானது.
தாமதத்திற்கு காரணம்: சிம்பு என் படத்தில் கமிட்டான போது தான் அவருக்கு விண்ணைத்தாண்டி வருவாயா என அடுத்தடுத்த பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்ததால் என் படம் தாமதமானது. போடா போடி' திரைப்படத்தின் இயக்குநராக நான் ஒப்பந்தமானபோது எனக்கு 22 வயது. ஆனால், அப்படம் வெளியாகும்போது 27 ஆகிவிட்டது. அதுவரை ஏதாவது ஒரு தாமதம் நடந்துகொண்டே இருந்தது. இறுதியாக, நடிகர் விஜய்யின் துப்பாக்கி' திரைப்படத்துடன் போடா போடி' gடம் வெளியானது. துப்பாக்கி படத்தின் இடைவேளையில் காட்சியில் நடிகர் விஜய் 12 நபர்களைச் சுட்டுக்கொல்வார். ஆனால், உண்மையில் அவர் சுட்டது 13 பேரை, அன்று அவர் சுட்ட 13-வது ஆள் நான் தான் என கலப்பாக பேசினார்.
கதையின் மீது நம்பிக்கை: தொடர்ந்து பேசிய விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதியிடம் நானும் ரவுடி தான் படத்தின் கதை சொல்லும்போது எனக்கு இந்த கதை சரியாக இருக்காது என்று, வேறு சில நடிகர்களை எனக்கு ரெஃபர் செய்தார். அப்போதிலிருந்து அந்த படத்தை எடுக்க வேண்டும் என்று எனக்கு தோன்றிக் கொண்டே இருந்தது. ஆனால், அதற்கு நடிகர்களும் சரியாக அமையவில்லை, தயாரிப்பாளரும் சரியாக அமையவில்லை. ஆனால் அந்த ஸ்கிரிப்டின் மீது எனக்கு நம்பிக்கை இருந்ததால், தொடர்ந்து முயற்சி செய்தேன். கடைசியில் அந்த படம் தான் என் வாழ்க்கையில் எல்லாத்தையும் கொடுத்தது. அதுப்போலத்தான் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்பது என்னுடைய கதை அந்த கதையை நான் 100 சதவீதம் நம்புகிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications











