என்னையும் யுவனையும் இணைத்த சாமிகள்… வைரமுத்து

By Mayura Akilan

சென்னை: சந்தர்ப்பங்கள் சாதிக்க முடியாததை சாமிகள் சாதித்து விட்டார்கள்.தமிழுக்கும், இசைக்கும் லிங்சாமி ஆகிவிட்டார், லிங்குசாமி என்று யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல் எழுதுவது பற்றி வைரமுத்து கூறியுள்ளார்.

இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில், சீனுராமசாமி இயக்கும் படம் 'இடம் பொருள் ஏவல்'. இந்த திரைப்படத்திற்காக, முதல்முறையாக கவிஞர் வைரமுத்துவுடன் இணைகிறார், இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா. படத்தில் இடம்பெறும் 5 பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதுகிறார்.

இளையராஜாவை பிரிந்து வந்த 28 ஆண்டுகளுக்குப்பின், கவிஞர் வைரமுத்து அவரது மகன் யுவன்சங்கர்ராஜாவுடன் இணைந்து பணியாற்றுவது திரைப்பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்த இணைப்புக்கு லிங்குசாமியும், சீனுராமசாமியும்தான் காரணம் என்கிறார் வைரமுத்து.

காலத்தின் கட்டாயமா?

காலத்தின் கட்டாயமா?

நாங்கள் இணைந்தது காலத்தின் கட்டாயம் இல்லை. காலத்தின் விருப்பம்.

உதடுகள் ஒட்டும்

உதடுகள் ஒட்டும்

கேள்வி:தந்தையோடு சேராத நீங்கள் மகனோடு எப்படி சேர்கிறீர்கள்?

பதில்: தந்தை என்று சொல்லிப்பாருங்கள். உதடுகள் சேர்வதில்லை. மகன் என்று சொல்லிப்பாருங்கள். முதல் எழுத்திலேயே உதடுகள் சேரும்.

கனிந்த காலம்

கனிந்த காலம்

கேள்வி:திடீரென்று எப்படி இந்த முடிவெடுத்தீர்கள்?

பதில்: வைரம் திடீரென்று பிறப்பதில்லை. அது கரியாக கிடந்து கனிந்த காலம் நம் கண்ணுக்கு தெரிவதில்லை. 10 ஆண்டுகளுக்கு முன்பே தம்பி யுவன்சங்கர் ராஜா இரு முறை என்னை தொலைபேசியில் அழைத்து, எனக்கு பாட்டு எழுதுங்கள் அங்கிள் என்று பாசத்தோடு கேட்டார். எனக்கு கண்கலங்கி விட்டது.என்னோடு சேர்வதால் உனக்கு ஒரு பாதிப்பும் வந்து விடக்கூடாது. கட்டாயம் சேர்வோம். காலம் கனியட்டும் என்று சொல்லியிருந்தேன். இப்போது அந்த காலம் கனிந்திருக்கிறது. இடம் பொருள் ஏவல் கூடி வந்திருக்கிறது.

கெட்டிப்பட்ட மவுனம்

கெட்டிப்பட்ட மவுனம்

கேள்வி: இளைய தலைமுறையோடு சேர்கிற நீங்கள் இளையராஜாவோடு ஏன் சேரக்கூடாது?

பதில்: இந்த கேள்விக்கு நான் இதுவரை சொன்ன பதிலை நீட்டினால், பூமி உருண்டைக்கு அரைஞாண் கயிறு கட்டலாம். அவ்வளவு சொல்லியாகி விட்டது. இனிமேல் கெட்டிப்பட்ட மவுனத்தைப் பார்த்து இந்த கேள்வியை கேளுங்கள்.

புதிய மின்சாரம்

புதிய மின்சாரம்

பூமிக்கு தண்ணீர் தேவைப்படுகிறதா? தண்ணீருக்கு பூமி தேவைப்படுகிறதா? ஒன்று, இன்னொன்றுக்கு ஆதாரம். மனித உறவுகளே சார்ந்து இயங்குவதுதானே? எனது மூத்த தமிழோடு இளமையான இசை சேரும்போது, புதிய மின்சாரம் உண்டாகும்.

 இளையராஜா உடன் மதன் கார்க்கி

இளையராஜா உடன் மதன் கார்க்கி

இளையராஜா இப்போது என்ன செய்ய வேண்டுமென்றால் தனது மூத்த இசையோடு இளைய தமிழை இணைத்துக்கொள்ள வேண்டும். மதன் கார்க்கி, கபிலன் போன்றவர்களோடு அவர் பணியாற்ற வேண்டும்.

வெற்றிக்கூட்டணி

வெற்றிக்கூட்டணி

இந்த புதிய கூட்டணி வெற்றி பெறுமா? என்று கேட்கின்றனர். ஒருவர் வெற்றிக்காக மற்றவர் உழைக்கும் கூட்டணிதான் வெற்றி பெறும். இது, கலைக்கும் பொருந்தும். கட்சிக்கும் பொருந்தும். சக கலைஞர்களை வெற்றி பெற வைத்து, நாங்கள் வெற்றி பெறுவோம்.

இணைத்த சாமிகள்

இணைத்த சாமிகள்

ஆமாம். சந்தர்ப்பங்கள் சாதிக்க முடியாததை சாமிகள் சாதித்து விட்டார்கள்.தமிழுக்கும், இசைக்கும் லிங்சாமி ஆகிவிட்டார், லிங்குசாமி. என்று கூறியுள்ளார் கவிஞர் வைரமுத்து.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X