பைசன் படத்துல என் சீனை எல்லாம் தூக்கிட்டாங்க.. ரொம்ப வலிச்சது.. லிஸி ஆண்டனி எமோஷனல்!

சென்னை: குற்றம் புரிந்தவன் வெப்சீரிஸில் பாட்டி வேடத்தில் நடித்த நடிகை லிசி ஆண்டனி ஒரு முக்கியமான எச்சரிக்கை விடுக்கிறார். "யாராவது பாட்டி கேரக்டர் எடுத்துட்டு என்கிட்ட வந்தீங்கன்னா, அதுக்கு ஜஸ்டிபிகேஷன் உங்ககிட்ட கரெக்டா இல்லனா முதல்ல வராதீங்க," என்கிறார் அவர் சிரித்துக்கொண்டே.

சமீபத்தில் வெளியான 'குற்றம் புரிந்தவன்’ தொடரில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் லிசி ஆண்டனி நடித்திருந்தார். பசுபதி சாருடன் இணைந்து நடித்த அனுபவத்தை அவர் நினைவு கூர்ந்தார். பசுபதி சாருடன் நடிக்கும் போது மிகவும் பயம் கலந்த ஒரு உற்சாகம் இருந்ததாகவும் கூறினார்.

Lissy Antony opens up why her role chopped in Bison movie and reveals Vettuvam secrets

லிசிக்கு நிஜ வாழ்க்கையில் பயம் இருக்கிறதா என்ற கேள்விக்கு, "இந்த மாதிரி விஷயம் நடந்தா பயந்துதாங்க ஆகணும்" என்று பதிலளித்தார். மேலும் தன்னுடைய மகன் வெளிநாட்டில் கார்டை தொலைத்தபோது ஏற்பட்ட பதற்றத்தையும் அவர் பகிர்ந்துகொண்டார்.

'பைசன்’ படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி லிசி பேசுகையில், படத்தில் தன் காட்சிகள் நீக்கப்பட்டதை நினைத்து வருத்தப்பட்டார். அந்த நேரத்தில், "இந்த இண்டஸ்ட்ரி என்ன வந்து ஏமாத்திக்கிட்டேதான் இருக்கும்னு ஆயிடுச்சு", என்று அவர் கூறினார். நம்மிடம் சொல்லிவிட்டுக் கூட நீக்குவதில்லை, அது ரொம்பவே வலித்தது. இத்தனை ஆண்டுகள் நடித்தும் நம்மை எந்த இடத்தில் வைத்துள்ளனர் என நினைத்து வருத்தப்பட்டேன் என வெளிப்படையாக பேசியுள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கும் 'வேட்டுவம்’ படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி லிசி பகிர்ந்துகொண்டார். "பிசிக்கலி ரொம்ப கால் பாதம்லாம் வெந்து போயி ரத்தம் வந்தது" என்று வேட்டுவம் படப்பிடிப்பில் ஏற்பட்ட கஷ்டங்களை கூறினார். மேலும் நடிகர் ஆர்யாவின் அர்ப்பணிப்பைப் பற்றி வியந்து பேசினார்.

சினிமாவில் பெண்களுக்கான பாகுபாடு இன்னமும் இருப்பதாக லிசி கூறினார். "நமக்கு அனுப்புற கார்ல இருந்து கொடுக்குற கேரவேன்ல இருந்து எல்லாத்துலயுமே அதை காமிப்பாங்க", என்று அந்த பாகுபாட்டை சுட்டிக்காட்டினார். இது மாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Lissy Antony opens up why her role chopped in Bison movie and reveals Vettuvam secrets

தமிழ் சினிமாவில் தனக்குப் பிடித்த இயக்குனர்கள் பற்றி லிசி குறிப்பிடுகையில், பா. ரஞ்சித், ராம், செல்லா, ஜெய், மற்றும் பிராங்க்ளின் ஆகியோரின் பெயர்களைக் கூறினார். கமர்ஷியல் படங்களில் நடிக்க ஆசை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

'குற்றம் புரிந்தவன்’ தொடரில் கிடைத்தது போல், தனக்கு ஒரு கம்பீரமான ரோல் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று லிசி ஆண்டனி கூறினார். தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X