சிங்கம் வேட்டையாடுற மாதிரி நயன்தாராவுடன் வாழ்ந்துட்டு இருக்கேன்.. விக்னேஷ் சிவன் ஓபன்!

சென்னை: இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லவ் இன்சூரன்ஸ் கொம்பெனி. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் க்ருத்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா, சீமான் உள்ளிட்ட பல நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் கடந்த ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்தது. சமகால இளைஞர்களின் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள திரைக்கதை படத்துக்கு பிளஸ் பாய்ண்டாக அமைந்துள்ளது. படம் பாக்ஸ் ஆபிஸில் முதல் ஐந்து நாட்களில் கிட்டத்தட்ட ரூபாய் 44 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷனுக்காக பட குழுவினர் தொடர்ந்து தங்களை ஈடுபடுத்திக் வருகின்றனர்.

இந்த வகையில் யூடியூப் சேனலுக்கு எஸ்.ஜே சூர்யா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இணைந்து கொடுத்த பேட்டியில் விக்னேஷ் சிவன் பகிர்ந்துக்கொண்ட தகவல்கள் மிகவும் சுவாரசியமாக உள்ளது. அவர் அந்த பேட்டியில், " அதாவது நானும் நயன்தாராவும் காதலிக்கும் போது இருந்தே ஒரு தீர்மானத்தை பின்பற்றி வருகிறோம் அது என்னவென்றால் சிங்கம் வேட்டையாடுவது போல வாழ வேண்டும் என்பதுதான் அது. அதாவது வருஷத்துக்கு உள்ள 365 நாட்களில் 265 நாட்கள் வேலை செய்யலாம், ஆனால் 100 நாட்கள் எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு நமக்காக நாம் நேரம் செலவிட வேண்டும் என்பதுதான் அது.

Living Like a Lion with Nayanthara Vignesh Shivan Reveals Unique Life Philosophy During LIK Promotions

சிங்கம் வேட்டையாடுவது மாதிரி: இது எப்படி என்றால் சிங்கம் காட்டில் தனக்கான இறையை வேட்டையாடி சாப்பிட்ட பின்னர் அதன் முன் நாம் சென்று நின்றால் கூட அது நம்மை வேட்டையாடாது. காரணம், அது ஏற்கனவே வேட்டையாடி சாப்பிட்டு விட்டது. அது போல தான் நாமும் வாழ வேண்டும். நமக்கு என்ன தேவையோ அதை எல்லாம் அந்த 265 நாட்களுக்குள் செய்து விட்டு மீதம் உள்ள 100 நாட்களை நமக்காக மட்டுமே செலவழிக்க வேண்டும் என்பதுதான் நாங்கள் எங்கள் வாழ்க்கையில் பின்பற்றி வருகிறோம். இதனை நாங்கள் காதலிக்கும் நாட்களில் இருந்தே பின்பற்றி வருகிறோம்.

Living Like a Lion with Nayanthara Vignesh Shivan Reveals Unique Life Philosophy During LIK Promotions

100 நாட்கள்: இதற்காக பணக்காரராக இருக்க வேண்டும், கோடீஸ்வரராக இருக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை. 265 நாட்களில் மிகவும் தீவிரமாக வேலை செய்வோம் அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து அந்த 100 நாட்களில் நாங்கள் செலவிட வேண்டும். அதன் பின்னர் அடுத்த 265 நாட்களுக்காக வேலை செய்வோம் என்று கூறியுள்ளார் விக்னேஷ் சிவன் இவ்வாறு கூறியுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X