மருதநாயகம் ட்ராப்.. கமல் சார் உடைந்து அழுதார்.. இப்போ நினைச்சாலும் அழுகை வருது.. லோகேஷ் பேட்டி!

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'கூலி' படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபபேந்திரா, அமீர்கான், ஸ்ருதிஹாசன் ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர். படம் வெளியாக சில தினங்களே இருப்பதால் இப்படத்தின் ப்ரோமோஷன் பணியில் லோகேஷ் கனகராஜ் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில், Gobinath யூடியூப் சேனலுக்கு பேட்டி லோகேஷ் கனகராஜ், விக்ரம் படம் குறித்து பேசினார். அதில், விக்ரம் படத்தில் அனைவருக்கும் ஒரு காட்சி பிடித்து இருக்கும். ஆனால், எனக்கு இன்டர்வெல் காட்சியில் பேரனை வைத்து கொண்டு நாற்காலியில் அமர்ந்து இருக்கும் காட்சியில், ஒரு ரியாக்ஷன் செய்து இருப்பார் அந்த காட்சி எனக்கு மிகவும் பிடித்த காட்சி, இப்பவும் டிவியில் அந்த காட்சி வந்தால், ரசித்து பார்ப்பேன். அது மட்டுமில்லாமல் படத்தில் நெற்றியில் விபூதி வைப்பது, சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளை வைத்து இருப்பேன். அவர் திரையில் சிகரெட் பிடிப்பது போல நடிக்கமாட்டார். ஆனால், விக்ரம் படத்தில் அவரை கெட்டவராக காட்ட வேண்டும் என்பதற்காக அந்த காட்சியை வைத்தேன். 30 வருடத்திற்கு பிறகு விக்ரம் படத்திற்காக புகைப்பிடிக்கும் காட்சியில் அவர் நடித்தார்.

Coolie Kamal haasan Marudhanayakam
Photo Credit:

உடைந்து அழுதார்: தொடர்ந்து கமல்ஹாசனின் மருதநாயகம் படம் பற்றி பேசிய லோகேஷ் கனகராஜ், அந்த படத்திற்கு இங்கிலாந்து ராணி வந்து உலகமே மிரட்டு பார்த்தார்கள். அந்த படத்திற்காக கமல் சார் மூன்று, நான்கு வருடமாக தாடி வளர்ந்து, உழைப்பை போட்டு அந்த படம் நடக்காது என்ற போது கமல் சாரோட மனநிலை எப்படி இருந்திருக்கும். இது பற்றி அவர் தனிப்பட்ட முறையில் என்னிடம் சொல்லி இருக்கிறார். மருதநாயகன் படத்திற்காக நான் வளர்த்த குதிரை செத்து போச்சுனு கண்கலங்கி பேசினார். அந்த விஷயம் பற்றி அவர் பேசும் போது எப்படி கண்கலங்கி பேசினார் என்பதை. இப்போது நினைத்தாலே, நான் அழுதுவிடுவேன். ஆனால், நான் ஒரு கொள்கை வைத்து இருக்கிறேன். எந்த மேடையிலும் அழக்கூடாது, உணர்ச்சிவசப்படக்கூடாது என்பதால் தான் அழாமல் இருக்கிறேன்.

மெய் மறந்து நடித்தார்: கமல் சார், அந்த வலியை பகிர்ந்த போது அனைவரும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தோம், சாப்பிட்டுக்கொண்டே இருந்தவர், திடீரென எழுந்து, மருதநாயகம் படத்தின் காட்சியை 20 நிமிஷம்,மெய் மறந்து நடித்து காட்டினார். சாப்பிட்டுக்கொண்டு இருந்த அனைவரும் எழுந்து நின்று அதைப் பார்த்தோம். அந்த வலியை சொல்லவே வார்த்தைகள் இல்லை. கூலி படத்திற்காக இரண்டு வருடம் தான் குடும்பத்தில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன். ஆனால், வெளியே வராத படத்திற்காக நான்கு ஆண்டுகள் எல்லாத்தையும் எப்படி ஒதுக்கிவைத்துவிட்டு, கடுமையாக உழைத்து இருப்பார். அந்த வலியோடு ஒப்பிடும் போது, இது பெரிய வலியாக தெரியவில்லை. அதுவும் இல்லாமல் சினிமாவிற்கு வந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால், குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் ஒரு புரிதல் வந்துவிட்டது. அவர்கள் இந்த சினிமாவின் நெகட்டிவிட்டியால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்கான நான் அவர்களை எந்த விஷயத்திலும் இழுப்பது இல்லை என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X