ஆடியோ லாஞ்சுல பாத்துக்குறேன்.. ரஜினி சொன்ன அந்த வார்த்தை பயத்தில் லோகேஷ்!
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து படம் கூலி. சத்யராஜ் , நாகர்ஜூனா, ஸ்ருதி ஹாசன், செளபின் சாஹிர், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ள அப்படம் ஆகஸ்ட் 14ந் தேதி உலமெங்கும் வெளியாக உள்ளதால், படத்தின் வேலைகள் ப்ரோமோஷன் வேலைகள் படு ஜோராக நடந்து வருகிறது.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், கூலி படத்தின் கதை பற்றி நான் ரஜினிசாரிடம் சொல்லும்போது பேச்சுவாக்கில் நான் கமல் சார் ரசிகன் என்று சொல்லிவிட்டேன். அப்போது, அவர் எதுவும் சொல்லவில்லை. கூலி படத்தின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் வேலைகள் எல்லாம் முடிந்தபிறகு, உதவி இயக்குநர்களிடம், ரஜினி சார், லோகேஷ் என்னிடம் கதையை சொல்லும் போது, 'நான் ஒரு கமல் ரசிகன் என்று சொல்லிதான் என்கிட்ட கதையே சொன்னார். அவரை, நான் கூலி ஆடியோ லாஞ்சுல பாத்துக்குறேன்' என்று ரஜினி சார் விளையாட்டாக சொல்லி விட்டு சென்றார்.

லோகேஷ் கனகராஜ் பேட்டி: ஒரு நடிகருக்கு ரசிகராக இருந்தால் இன்னொரு நடிகரை ரசிக்கக் கூடாது என்றில்லை. எங்கள் வீட்டில் என்னை தவிர மற்ற அனைவருமே ரஜினி ரசிகர்கள். என் அம்மாவிடம் ரஜினி சார் படம் பண்ண போகிறேன் என்று சொன்னதும், நீ சின்ன வயதில் 'சூப்பர்ஸ்டார் யாருன்னு கேட்டா' பாட்டு இல்லாமல் சாப்பிடமாட்டே என்று சொன்னார்கள். கமலின் சத்யா படம் பார்த்தபின் சினிமா பற்றிய என்னுடைய பார்வை மொத்தமாக மாறியது. நான் கமல் ரசிகனான இருந்தும் ரஜினி சாருக்கு படம் பண்ணுவது கூடுதல் பொறுப்பு உணர்கிறேன். ஒரு விருது வழங்கும் விழாவில், கமல் சாரிடம், உங்களுடைய ரசிகன், உங்கள் நண்பர் ரஜினியை வைத்து படம் எடுக்கிறாரா என்று கேள்வி கேட்டார்கள். அதற்கு அவர், என்னுடைய ரசிகர் என்னுடைய நண்பரின் படத்தை இயக்குவதில் எனக்கு பெருமைதான் என சொல்லிவிட்டு, அதை சிறப்பாக செய்துவிட்டு என்னிடம் வாங்க என்றார். இதனால், அந்த படத்தை வெற்றிப்படமாக்க வேண்டிய பொறுப்பு என்னிடம் உள்ளது என்று லோகேஷ் கனகராஜ் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.
ஆயிரம் கோடி வசூல்: இப்படத்தின் இருந்து சிக்கிடு பாடலின் வீடியோ அண்மையில் வெளியாகி மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதே போல மோனிகா பாடலுக்கும் ரசிகர்கள் ஆட்டம் போட்டு வருகின்றனர். படம் ஆகஸ்ட் 14ந் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இப்படத்தின் இசைவெளியீட்டு விழா ஜூலை 27ந் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று நம்பப்படுகிறது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாக வில்லை. கூலி படம் தமிழ் திரையுலகில் முதன்முறையாக ரூ.1000 கோடி வசூல் எடுக்கும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளில் உருவாக திரைப்படங்கள் தான் ஆயிரம் கோடியை வசூலித்திருக்கின்றன. தற்போது லோகேஷூக்கும் ரஜினிக்கும் நல்ல மார்க்கெட் இருப்பதாகல் இந்த படம் நிச்சயம் ஆயிரம் கோடி வசூலை அள்ளும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications











