2வது திருமணம் பண்ண போறீங்களா.. பத்திரிகையாளரின் வில்லங்க கேள்வி.. லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்!
சென்னை: லியோ படத்துக்குப் பிறகு சந்தித்த நெகட்டிவிட்டியை விட ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தை முடித்து விட்டு லோகேஷ் கனகராஜ் சந்தித்த நெகட்டிவிட்டி தான் ரொம்ப அதிகம். மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜுக்கு கைதி பட வாய்ப்பை கொடுத்து இன்று 60 கோடி சம்பளம் வாங்கும் இயக்குநராக மாற்றியதில் பெரும் பங்கு நடிகர் கார்த்திக்கு உள்ளது.
ஆனால், தொடர்ந்து கைதி 2 படத்தை தொடாமல் கூலி, டிசி படத்தில் ஹீரோ, அல்லு அர்ஜுன் படம் என லோகேஷ் கனகராஜ் நகர்ந்து சென்றுக் கொண்டிருப்பது கடும் விமர்சனங்களை கிளப்பிய நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கண்டிப்பாக அடுத்து கைதி 2 தான் என பேசினார் லோகேஷ் கனகராஜ்.

மேலும், தன் மீது அடுக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் முடித்து விட வேண்டும் என்பதற்காகவே பிரஸ் மீட் வைத்தது போல தொடர்ந்து வந்து விழுந்த அனைத்து வில்லங்க கேள்விகளுக்கும் லோகேஷ் கனகராஜ் ரொம்பவே நாசுக்காக பதில் அளித்துள்ளார்.
நடிகைகளுடன் கிசுகிசு: ஸ்ருதிஹாசன் உடன் ஆல்பம் பாடலில் ஜோடி போட்டு லோகேஷ் கனகராஜ் நடித்த உடனே ஏகப்பட்ட கிசுகிசுக்கள் அவர் மீது கிளம்பின. கூலி படத்திலும் ஸ்ருதிஹாசன் நடித்தார். மேலும், அவர் தனது 2வது பாய் ஃபிரெண்டை பிரேக்கப் செய்து பிரிந்ததும் அதற்கும் லோகேஷ் தான் காரணமா? என ஏகப்பட்ட கிசுகிசுக்கள் பரவின. அதன் பின்னர் டிசி படத்தில் லோகேஷ் கனகராஜ் ஜோடியாக நடித்து வரும் வாமிகா கபியுடன் லோகேஷுக்கு காதல் என்றும் இருவரும் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாகவும் கிசுகிசுக்கள் கிளம்பின. இப்படி சோஷியல் மீடியாவில் கிளம்பிய கிசுகிசுக்களை வைத்து லோகேஷ் கனகராஜிடம் ஒரு பத்திரிகையாளர் நேரடியாகவே அந்த வில்லங்கமான கேள்வியை எழுப்பி விட்டார்.
எனக்கு ஏற்கனவே குடும்பம் இருக்கு: ஒரு நடிகையுடன் கிசுகிசு வருதே, அவங்களையே திருமணம் செஞ்சிக்கப் போறீங்களா? அது உண்மையா? என்கிற கேள்வியை அந்த பத்திரிகையாளர் எழுப்பியதும் சக பத்திரிகையாளர்களே ஷாக் ஆகிவிட்டனர். ஆனால், லோகேஷ் கனகராஜ் செம கூலாக, ஒரு நடிகை மட்டுமல்ல, பல நடிகைகளுடன் கிசுகிசு எழுதுறாங்க. ஆனால், அதெல்லாம் உண்மை கிடையாது. எனக்கு ஏற்கனவே ஒரு குடும்பம் இருக்கு, அவ்ளோதான் சார் என்று பதில் அளித்துவிட்டு மேடையை விட்டு இறங்கிவிட்டார்.
லோகேஷ் கனகராஜ் குடும்பம்: சுமார் 12 ஆண்டுகள் காதலித்த தனது நீண்ட நாள் தோழியான ஐஸ்வர்யாவை கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி லோகேஷ் கனகராஜ் திருமணம் செய்துக் கொண்டார். நீ டைரக்டராக ட்ரை பண்ணு, நான் வேலைக்குப் போறேன் என அவர் கொடுத்த ஊக்கம் தான் இன்று லோகேஷ் கனகராஜை டாப் இயக்குநராக மாற்றியுள்ளது. இந்த தம்பதியினருக்கு ஆத்விகா மற்றும் ஆருத்ரா என 2 மகள்கள் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











